கில்லி – Gilli

ஜனவரி 4, 2006

Nothing to be ashamed of?

கோப்பு வகை: அமெரிக்கா, சமூகம், மடப்பள்ளி — SnapJudge @ 6:58 பிற்பகல்

‘கலி·போர்னியா பாடங்களில் இந்துமதம் – ஒரு சர்ச்சை’ என்னும் தலைப்பில் இந்த மாத தென்றல் இதழில் மணி மு. மணிவண்ணன் எழுதியிருக்கிறார்:

பொதுவாக அமெரிக்கப் பாடங்களில் மேற்கத்திய வரலாறு, அதன் தொடர்புள்ள யூத, கிறித்தவ, இஸ்லாமிய வரலாறுகளின் ஆழம் இந்திய வரலாறு பற்றி இருப்பதில்லை. பெரும்பாலும் இதற்கு இந்தியா பற்றிப் பள்ளிப் பாட நூலாசிரியர்களின் அறியாமைதான் காரணம். மேம்போக்காக கர்மா, பசு, ஜாதி (karma, cows, caste) என்ற சூத்திரத்துக்குள் இந்திய வரலாற்றை அடக்கி, இந்தியாவின் ஏழைச் சேரிப்பகுதிகள், சினிமா போஸ்டரைத் தின்று கொண்டிருக்கும் நோஞ்சான் பசுமாடு, காசியில் நடக்கும் ஈமக்கடன் கிரியைகள் இவற்றின் படத்தை இட்டு, ஒரு மாபெரும் நாகரிகத்தின் வரலாற்றை கார்ட்டூன் போலச் சிறுமைப் படுத்திவிடுவார்கள்.

பள்ளி ஆசிரியர் ‘சாண்டா’ எல்லாம் உடான்ஸ் என்று சொன்னதற்காக, அவரை ‘பொது மன்னிப்பு’ கேட்க வைக்கிறார்கள். பென்சில்வேனியாவிலும் கான்சாஸிலும் ஆதாம், ஏவாளில் இருந்துதான் குரங்கு பிறந்ததாக ஏட்டு சுரைக்காய் சமைக்கிறார்கள். குழந்தைகளை வளர்ப்பதுடன், இந்தியா குறித்த உண்மை உணர்வையும், மதச்சின்னங்கள் தாண்டிய ஆன்மிக மதிப்பையும் அமெரிக்கவாழ் இந்தியச் சிறுவர்களிடையே உருவாக்குவதற்கு ‘பிரம்மா’ பிரயத்தனம் செய்ய வேண்டும்.

No Comments Yet »

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.