“இருளும் ஒளியும்” - அறிவொளி இயக்க அனுபவங்கள் என்னும் ச.தமிழ்செல்வனின் புத்தகம் குறித்த வாசக அனுபவங்கள்.
என்ன பெரிய வேலை, போயி படிக்க தெரியாதவங்களுக்கு கத்துக் குடுக்கணும அவ்வளவுதான அப்டின்னு ஈசியா சொல்லிரலாம் (சொல்றதுக்கு காசா பணமா). சரி அத ஈசின்னே எடுத்துக்கிட்டாலும், இங்க பிரச்சனை என்னன்னா படிக்கத் தெரியாதவங்கள படிக்க கூட்டிட்டு வர்றது. நாலு கழுத வயசாயிருச்சு (இவங்க குறி வச்சது 15-35 வயசை) எனக்கு, இனிமே படிச்சு என்ன கிழிக்க போறேன்னு இழுத்து போர்த்திட்டு தூங்குறவன நைட்டு படிக்கிறதுக்கு வான்னு எப்டி கூப்பிடறது.
இந்த இயக்கத்த பத்தி மொத்தம் மூணு புத்தகமும் (இந்த புத்தகத்தையும் சேத்து) சில கட்டுரையும் தான் மிஞ்சும் போல. மீதி இருக்கிற ரெண்டு புத்தகத்தில ஒன்னு புதுக்கோட்டை கலெக்டரா இருந்த ஷீலா ராணி சுங்கத்தும், மாநில ஒருங்கிணைப்பாளரா இருந்த ஆத்ரேயாவும் சேந்து எழுதுன Literacy and Empowerment.