இந்திய இருவுள் வாயில் (Railway) அலுவல் மற்றும் வியாபாரத்துக்கும், மறுவழிப் பயணங்களுக்கும் (return journeys) சிற்றூர் பயணிகளுக்கும் பயன்படுமாறு மாறவேண்டும் என்று மானகைத் துறை (management field) துப்புகள் தருகிறார்கள் கோவைக்காரங்க…
ஊர்களெல்லாம் பேருந்தை மையமாகக் கொண்டு ஆக்கப்பட்டுவிட்டதால் மக்களுக்கு ரயில் நிலையம் ‘தொலைவில்’ என்றாகிவிட்டது. விளைவு, கிராமங்களில் இருந்த அற்புதமான சிறிய ரயில்நிலையங்கள் கைவிடப்பட்டன. கோவை-பொள்ளாச்சிக்கு இடையே மின்மயமாக்கப்பட்ட இருவழி அகலப்பாதை இருந்து, குறைந்தது அரைமணி நேரத்திற்கொருமுறையாவது வண்டிகள் இயக்கப்பட்டால் எப்படியிருக்கும்!
இந்த மாதிரி வடக்கில் செய்து இருவுள் வாயில் லாபம் ஈட்டிய செய்தியை தேசிகன் பகிர்கிறார்.
ஒரு சின்ன பிளாட்பாரம், நான்கு பென்ச்கள், குடிக்க ஒரு தண்ணீர் குழாய் என்று 8 லட்சம் ரூபாய் செலவில் ஒரு ஸ்டேஷனை கட்டியுள்ளார்கள். பின்னர் ரயில்வே அதிகாரிகள் அதை ஸ்டேஷனாக ஏற்றுக்கொண்டு அதன் வழியாக போகும் ரயில்களை ஒரு நிமிடம் நிறுத்த சம்மதித்தனர். இந்த ஸ்டேஷன் கட்டிய ஒரு வருடத்தில் 12,918 பயணிகள் ரயில் ஏறி இறங்கியிருக்கிறார்கள். ரயில்வேக்கு இதனால் கிடைத்த வருவாய் 1.5 லட்சம் ரூபாய்!
(தமிழாக்க வார்த்தைகள்: இராமகி)