பள்ளிக்கூடத்தோடு் தொடர்பு விட்டுப்போனவர்கள் கனவில் வருவதுண்டா?
நீ ‘தாயி , தாயி’-ன்னு உன் தங்கச்சிங்களைக் கூப்பிடறது..! அப்புறம்…. , ஆங்…, உங்கப்பா ரெயில்வேல வேலை பாத்ததுனால, உனக்கும் ரயிலுக்கும் உள்ள நெருக்கம். நீ அப்பவே அடிக்கடி ரயில்லலாம் போவடே! எனக்குலாம் அதைக் கேக்கவே பிரமிப்பா இருக்கும்.
வாஷிங்டன் போஸ்ட்டில் இருந்து ஒரு அருமையான கட்டுரை..
ஸ்ரீகாந்த் மீனாக்ஷி வழியாக
ஆங்கிலத்தில் வலைப்பதிவு செய்து கொண்டிருந்துவிட்டு, தமிழில் குதிப்பதற்கு முன்பு எழுதிய இடுகையிலே, இப்படி எழுதுகிறார்…
Along the way came to urge to blog in Tamil. The main reason for this being some wonderful things I experienced which can only be explained to the fullest in the tongue in which it was said. Spoken Tamil is a language in which it is relatively easy to pun, and native speakers do so all the time. In urban contexts, the spoken tongue is peppered with Tamilized words from other languages, English and Hindi being notable contributors. This gives rise to a whole new world of punning, sometimes even unintentional! That said, navigating the cultural cake-mix that is today’s Chennai is an exciting affair, especially if you are a language gourmand like I’ve become. And that is one of the reasons why the thought of blogging bilingually excites me.
நவீன், நீங்க சொல்றது ரொம்ப சரி.. இன்றைக்கு இணையத்தில் தமிழில் எழுதுகிறவர்களில் பெரும்பான்மையானோர், உங்களை மாதிரிதான்.. என்ன, தட்டுப்பிழைகளை ( typo) கொஞ்சம் பார்த்துக்கோங்க
கூட்டணியை விட்டு வெளியேறியது, திமுக அணிக்கு லாபமா அல்லது நட்டமா? தமிழ் சசியின் ஆழமான விரிவான அலசல் இங்கே. மறுமொழிகளும், இந்த விவகாரத்தை முழுமையாக புரிந்து கொள்ள உதவுகின்றன..
கமல்ஹாசன், கௌதம் முதன்முறையாக இணையும், வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. அது குறித்து, கீர்த்திவாசனின் சூடான முதல் தகவல் அறிக்கை. (அடா அடா.. இன்னா வேகம்..
)
“…Kamals presence in the picture (with style and poise added to his walk) – and the presence of such a great audience who went Ga-Ga about the song.. I was so thrilled. I wanted to whistle so badly.. damn my inability to do that. It looked like i was gifted to be on the function..”
அண்ணாச்சி, கமல் ரசிகர் போலிருக்கு
வாழ்க…
முழுதும் வாசிக்க…
[பரிந்துரை : Kaps ]
Jeppiaar is known to have often stated that he doesnt grow trees on his campus because boys and girls will sit together under the trees and talk to each other. The campus has no trees.
விக்கிப்பீடியாவில் சில சமயம் இப்படி ஆகிவிடுகிறது (வழி: பரேஷான்)
பரிந்துரை: பிரேமலதா
கவிஞர் நா.முத்துக்குமார். அவர் கலந்து கொண்ட இலக்கிய பல்சுவை நிகழ்ச்சி சென்ற 25/02/06 அன்று மாலை 6.30 மணிக்கு சிங்கப்பூர் விக்டோரியா ஸ்ட்ரீடில் அமைந்துள்ள தேசிய நூலகத்தில் நடைபெற்றது. தேசிய நூலக வாரியம், சிங்கைத் தமிழ்ச் சங்கம் மற்றும் பாலு மீடியா மேனேஜ்மெண்ட் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியின்் குறிப்புகள்.
கொஞ்சம் சரித்திரத்தை சுழலவிடுகிறார் நயனம் ‘குட்டுவன்’.
ஏற்கனவே நெடுஞ்செழியன், திருநாவுக்கரசர், இராமச்சந்திரன் போன்ற பல தமிழர்களின் மதியற்ற அரசியலால், தன்னை வளர்த்துக் கொண்ட செயலலிதாவிற்குத் தொடர்ந்து தம்மைக் காணிக்கையாக்குவது பல தமிழர்களின்வாடிக்கை. இவரை மட்டும் பிடித்தால் போதாது என்று நெடுமாறனையும் சுபவீயையும் சாகுல் அமீதையும் கைது செய்துசிறையில் அடைத்தது செயலலிதா அரசு.
தமிழ்நாட்டில் மூப்பனாரின் மகன் தலைவராகலாம், ப.சிதம்பரத்தின் மகன் தலைவராகலாம், இராமதாசின் மகன் தலைவராகலாம்,இன்று முளைத்த விசயகாந்த்தின் குடும்பம் அரசியல் செய்யலாம், தேசிய அளவில் இந்திரா அம்மையாரின் குடும்பம் ஆளலாம்,ஆந்திரத்தில் இராமாராவின் மருமான் அரசியல் செய்யலாம்
இளவயது; உழைக்கும் கைகள்; பணத்தின் மதிப்பு… அனுபவங்கள்
‘ஏல! லீவு வருதுல்லா. நம்ம கடைக்கு வந்துர்றீயா?’
ஓசியில ஒரு வேலையால் கெடைச்சா நல்லா தானே இருக்கும். எனக்கும் ஆசை தான். பல்பொடி கம்பெனிக்கு போய் தண்டமா போச்சி. பசிச்சா ஏதாவது சாப்பிட முடியுதா. மளிகை கடைன்னா, அப்போ அப்போ ஏதாவது அள்ளி வாய்ல போட்டுக்கலாம்.
‘சரின்னே! லீவு வந்ததும் வந்துடறேன்’. ‘கடைய இடிச்சிட்டு கொஞ்சம் பெரிசா கெட்டுங்கண்ணே. நான் நிக்கிறதுக்கு எடம் வேண்டாமா’
தமிழில் எழுத, தட்டச்ச, ஆர்.எஸ்.எஸ் செய்தியோடைகளைத் தயாரிக்க, எண்களாக புரியாத பாஷையில் இருப்பதாக தெரிந்த font (எழுத்துரு)வாக மாற்ற, மேலும் பல பயன்படும் software.