‘தேரடி வீதியில் தேவதை வந்தா’ பாட்டில் ஆரம்பித்து மனக்குமுறலை எங்கெங்கோ கொண்டு செல்கிறார் தீபக் கிருஷ்ணன். இவரும் Freakonomics-ஐ முன்வைக்க, Blink எழுதிய Gladwell-ம் இன்று வாசக/சக-எழுத்தாளனின் பார்வையை விரிவாக எழுதியிருக்கிறார். (எச்சரிக்கை: முன்னதில் சுடுசொற்கள் உள்ளன; பின்னதைப் படிக்க நிதானமான நேரம் தேவை.)
மார்ச் 9, 2006
AICTE, Deemed University & Engineering
மாணவர்களுக்கு சோதனை; பெற்றோர்களுக்கு வேதனை; நிர்வாகிகளுக்கு ரோதனை; போதனைகள் மட்டுமே கிடைத்து வரும் குழப்பமான சூழல். எஸ்.ஆர்.எம். போன்ற நிகர்நிலைப் பல்கலைகளின் செய்திகளையும் நேரடி அனுபவங்களையும் தொகுக்கிறார் ட்ரீம்சேஸர்.
The Way Home & Bay Area Indian Restaurants
அமெரிக்காவின் குடாப்பகுதியில் சாப்பிடப் போகிறீர்களா? உணவகங்களுக்கு சின்னச் சின்ன அறிமுகம் கொடுக்கிறார். உண்ட மயக்கத்தில் இருந்து மீள கொரியத் திரைப்படம் பார்க்கலாம்.
Capote review – Jai Arjun Singh
இந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது பெற்ற Philip Seymour Hoffman நடித்த திரைப்படத்தின் விமர்சனம்.
Beyond Shotz
படங்களும் படம் சார்ந்த கட்டுரைகளும் தாங்கி வரும் ‘பியாண்ட் ஷாட்ஸ்’ ஃபெப்ரவரி மாத இதழ் வெளியாகி விட்டது.