கில்லி – Gilli

மார்ச் 15, 2006

Google Maps Mars – Mugunth

கோப்பு வகை: வலையகம் — Visitor Blogs @ 10:41 பிற்பகல்

இன்று கூகிள் பக்கத்தில் கவனித்திருந்தீர்கள் என்றால் அங்குள்ள கூகிள் சின்னத்தில் செவ்வாய் கிரகப்படம் இருப்பதைக் கண்டிருக்கலாம்.

அறியாத பெயராக இருக்கிறதே… Percival Lowell யாரு என்று யோசித்தபோது கைகொடுக்கிறார் முகுந்த். இது தொடர்பாக மோகன்தாஸின் சுருக்பதிவு.

Vettayaadu Vilayaadu – Sujatha

கோப்பு வகை: சொந்தக் கதை, நிகழ்வுகள் — Visitor Blogs @ 10:36 பிற்பகல்

சுஜாதா ஒரு படத்துக்கு வசனமெழுதவில்லை என்றால் வசதி – இது போன்ற வெளிப்படையான விமரிசனங்கள் படிக்கக் கிடைக்கின்றன‘ என்று ஸ்ரீகாந்த் மீனாக்ஷி பாராட்டுவதற்கு ஏற்ற ‘வேட்டையாடு விளையாடு’ ஒலித்தட்டு வெளியீட்டு விழாக் குறிப்புகள்.

முந்தைய கில்லி.

Missed SMS

கோப்பு வகை: ஆங்கிலப் பதிவு, நக்கல் — Visitor Blogs @ 10:25 பிற்பகல்

Singapore Experiences – Azad

கோப்பு வகை: சொந்தக் கதை, பயணக்குறிப்புகள் — Visitor Blogs @ 10:22 பிற்பகல்

சிங்கப்பூரில் முஸ்தபாவின் வாசலில்தான் சுதந்திரமாகப் புகைக்க முடிகிறது. ஒரு டீ, ஒரு புகை, டீக்கடை பெஞ்சு என்னதான் வெளிநாடு சென்றாலும் எனது வழக்கம் மாறுமா? இரவு பன்னிரண்டு மணிக்கு முஸ்தபாவின் வாசலில் டீயை உறிஞ்சிக்கொண்டே லிட்டில் இண்டியாவின் சாலையில் இருக்கும் ஏகப்பட்ட இந்தியக் கடைகளின் பெயர்ப் பலகைகளைப் படித்துக்கொண்டே நேரம் போனது தெரியவில்லை.

ஆசாத்தின் முத்திரை நகைச்சுவையுடன் சிங்கப்பூர் பயணக்குறிப்புகள்.

Saudi Arabia Experiences – ‘Calgary’ Siva

கோப்பு வகை: சொந்தக் கதை, பயணக்குறிப்புகள் — Visitor Blogs @ 10:19 பிற்பகல்

இது நான் சந்தித்த சில மனிதர்களின் குணாதிசயைங்களைப் பற்றியது; அரேபிய நாடுகளின் சட்டதிட்டங்களை விமர்சரிக்க அல்ல‘ என்று சொன்னாலும் மனிதரை விட்டுவிட்டு மண்ணின் குணாதிசயங்களை எழுத முடியுமா?

5K VICHARTI (Think-tank) – Badri

கோப்பு வகை: அரசியல், வலையகம் — Visitor Blogs @ 10:15 பிற்பகல்

The New Party VICHARTI in power will offer rupees 5000 every month to every Indian Citizen.

வலையக முகவரி VICHARTI என்னும் பெயரில்தான் சிக்கியதோ என்னவோ… கட்சி ஆரம்பிச்சுட்டாங்க. பத்ரி அலசுகிறார். என்னோட வாக்கு இவர்களுக்குத்தான்! வாங்க… அப்ளிகேஷன் போடலாம்.

Shivaji – Shreya – Sharjah : Dubaivaasi

கோப்பு வகை: superstar, நகைச்சுவை, பொது — Visitor Blogs @ 10:04 பிற்பகல்

சிவாஜி பட நாயகி ஷ்ரேயா நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி நடந்த போது, முழுவதும் தெலுங்கு அணிக்கே ஆதரவு தந்ததை அனைவரும் டிவியில் பார்த்திருப்பீர்கள். இதனால் எரிச்சலடைந்துள்ள தமிழ்நாட்டு நடிகர்கள், அவரை சிவாஜி தமிழ்ப் படத்திலிருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்… :D

ThamizManam Star Effects – Vinu Ranganathan

கோப்பு வகை: ஆங்கிலப் பதிவு, பொது — Visitor Blogs @ 9:59 பிற்பகல்

இந்த வார தமிழ்மண நட்சத்திரமாக இருப்பதனால் கிடைக்கும் பலாபலன்கள் ‘Butterfly Effect’ போல் எங்கெல்லாம் அதிர்வெழுப்புகிறது :-)

2005 Food Blog Awards

கோப்பு வகை: ஆங்கிலப் பதிவு, வலையகம் — Visitor Blogs @ 9:51 பிற்பகல்

சமையற்கலைக்காவே விருது கொடுத்து கௌரவிக்கிறாங்க. பரிந்துரைக்கப்பட்ட ஒவ்வொன்றும் சாப்பிடத் தெரிந்தவர்களுக்கு வரப்பிரசாதம். (வழி: இந்திரா / கே)

Great Recipes in Action – Karthi Kannan

கோப்பு வகை: ஆங்கிலப் பதிவு, டிப்ஸ் — Visitor Blogs @ 9:04 பிற்பகல்

‘உங்க சமையல செஞ்சு பார்த்துட்டு சொல்றேன்’ என்றெல்லாம் நழுவாமல், பிறரின் குறிப்புகளை செய்து, படமும் பிடித்து எச்சிலூற வைக்கிறார். (பரிந்துரை: மொட்டைவிண்ணப்பம்)

4 Favorite Movies

கோப்பு வகை: superstar, வெள்ளித்திரை — Visitor Blogs @ 8:58 பிற்பகல்

ரஜினியின் படங்களில் பிடித்த நான்கை ‘ரஜினி ரசிகரும்’, தான் இதுவரை ரசித்ததில் அதிரசனைக்குள்ள நான்கை ஆசாத்தும் பகிர்கிறார்கள்.

Children of Heaven – Sidharth

கோப்பு வகை: இலக்கியம், சினிமா விமர்சனம் — prakash @ 4:53 பிற்பகல்

Photo Blog – Junior Vairamuththu

கோப்பு வகை: ஆங்கிலப் பதிவு, புகைப்படங்கள் — prakash @ 4:37 பிற்பகல்

ஆஸ்திரேலியாவில் படித்துக் கொண்டிருக்கும் வைரமுத்துவின் மகன் ‘ மதன் கார்க்கியின்’ புகைப்பட வலைப்பதிவு. சொக்காய் டவுசர் போட்ட வைரமுத்துவின் புகைப்படத்தை மிஸ் பண்ண வேண்டாம். [ Kaps வழியாக ]

Blogdesam

கோப்பு வகை: பொது, வலையகம் — prakash @ 4:09 பிற்பகல்

புதிய ஆங்கில வலைப்பதிவுத் திரட்டி

இது பதிவுகளை மட்டுமல்ல, மறுமொழிகளையும் திரட்டும்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.