கில்லி – Gilli

மார்ச் 24, 2006

Kanchipuram – Chandrachoodan

கோப்பு வகை: ஆங்கிலப் பதிவு, புகைப்படங்கள், வரலாறு — prakash @ 5:35 பிற்பகல்

கோவில்களுக்கும் , பட்டுக்கும் புகழ் பெற்ற காஞ்சி மாநகர் பற்றிய, வரலாற்றுக் குறிப்புகள் தருகிறார் சந்திரசூடன். அருமையான புகைப்படங்கள்…

Kanchipuram – “Nagaresu Kanchi” as the old saying goes, was the centre of learning, of arts. The international city, where tourists and monks and traders visited. A must see destination in the ancient world. Chennai – “தர்ம மிகு சென்னை (Virtous Chennai)” is now the cultural, and academic centre of excellence. The city of Ford and Hyundai and Saint Gobain and Nokia. A city that is as international as New York or Hong Kong. A city that is visited by monks, traders and tourists.

மேலும் வாசிக்க

[ kaps வழியாக ]

kalakkal

கோப்பு வகை: சினிமா விமர்சனம் — prakash @ 5:22 பிற்பகல்

ஒரு கலைஞனுக்கான அங்கீகாரம், அவனுக்கு கிடைக்கும் கைதட்டல் தான், விருதுகள் அல்ல என்று கமல்ஹாசன் சொல்லுவார்… எஸ்.பாபுவின் இந்த விமர்சனம், பல நூறு விருதுகளுக்குச் சமம்.

Prayers for sale – Cyril Alex

கோப்பு வகை: ஆங்கிலப் பதிவு, பொது — prakash @ 5:17 பிற்பகல்

தொலைக்காட்சியில் வரும் சுவிசேஷப் பிரசங்கங்கள் குறித்து சிறில் அலெக்ஸின் வெளிப்படையான விமர்சனம்..

[ blogdesam வழியாக ]

Tale of two cities – Anand (mdeii)

கோப்பு வகை: சொந்தக் கதை, பொது — prakash @ 5:12 பிற்பகல்

மேலைநாட்டு மடையர்களுக்கு மொழிதெரியாதென்ற
மிதப்பிலே மிதக்கிறாய்
முதுகுதிரும்பியதும் முணுமுணுக்கிறாய்

திடீரென தொப்பித்தலையனுக்கு தமிழ் தெரியுமென
தெரிந்ததும் திடுக்கிடுகிறாய்
திமிரிழந்து திணறுகிறாய்

‘அடேய்’ அகன்று ‘அண்ணே’ ஆனதும்
அடுத்தக்கேள்வி ‘ஃப்ளிண்டாஃப் எங்காக்குறாரு?’

இந்த தீடீர்க் கவிதையை எழுதினவர் யார் தெரியுமா? ” என் பேர் கல்கத்தா இல்லை.. திருநாவுக்கரசு” ன்னு, ஒரு படத்திலே மொறைப்பாரே ஒரு குட்டிப் பையர்… அவர்தான்…

குளு குளு லண்டன்ல குப்பை கொட்டிட்டு திடுதிப்புன்னு மெட்ராஸ் வெய்யிலுக்கு மாறினா இப்படித்தான் ஆகும் போலிருக்கு..

முழுசாக வாசிக்க…

Indic Blog Awards.

கோப்பு வகை: வலையகம் — prakash @ 4:50 பிற்பகல்

 

இந்திய மொழி வலைப்பதிவுகளுக்கு என, bhasha india, விருதுகள் வழங்குகிறது… நீங்கள் விரும்பி வாசிக்கும் வலைப்பதிவுகளை nominate செய்யலாம். ஓட்டு போடலாம்..

மேலதிக விவரங்கள், பத்ரி வழியாக

Rakesh, a true story – Rajaram

கோப்பு வகை: ஆங்கிலப் பதிவு, சொந்தக் கதை — prakash @ 4:49 பிற்பகல்

My hero was not serious about the loss. He was busy playing there with his own group. Actually we can’t expect him to be serious at that age. He was even able to bear the loss of his mother at that age, but was not clear about his relatives saying that he was the reason for his mothers death. Few heartlessly said that he should have died at birth so that his mother would have been alive. They should have known that their words were going to hurt the tender heart

மேலும்….

[பரிந்துரை : பிரேமலதா]

inglipis in thamiz – Bharath

கோப்பு வகை: ஆங்கிலப் பதிவு, நக்கல் — prakash @ 4:47 பிற்பகல்

ஆங்கிலத்தை தமிழ் போலப் பேசுபவர்களை ஒரு வாரு வாருகிறார், பரத்.. இங்கே..

இது என்ன நகைச்சுவையா இல்லை below the belt ஆ?

எனக்குத் தெரியலை…

பரிந்துரை : kaps

project madurai – Venkat

கோப்பு வகை: இலக்கியம், வலையகம் — prakash @ 4:46 பிற்பகல்

மதுரை திட்டம் பற்றி தெரியுமில்லையா? project gutenberg போல, தமிழில் நடக்கும் ஒரு மகா, மெகா திட்டம்.. இந்த திட்டத்தை விரிவு படுத்த , நவீன இலக்கியங்களை உள்ளிட,  தன்னார்வலர்களின் ஒத்துழைப்பு தேவை…

வெங்கட் விடுக்கும் அழைப்பு இதோ

Mahalibrary.com

கோப்பு வகை: வலையகம் — prakash @ 4:44 பிற்பகல்

இந்திய சட்டங்களின் தொகுப்பு

[பச்சோந்தி வழியாக ]

customer service – Gopi

கோப்பு வகை: இதழியல் — prakash @ 4:43 பிற்பகல்

நீங்க வெளியூர்ல இருந்துகிட்டு, தமிழ்ப் பத்திரிக்கைகளுக்கு சந்தா கட்டி வாங்கி படிப்பவரா? கோபிக்கு வந்த ஒரு கடிதத்தை இங்கே படிக்கவும்…

உங்க அனுபவம் எப்படி?

 

Cinema Cinema – Raasa

கோப்பு வகை: சொந்தக் கதை, பொது, வெள்ளித்திரை — prakash @ 4:42 பிற்பகல்

சின்னப் பிள்ளையிலே பார்த்த சினிமாக்கள் பற்றி கொங்கு நடையில் ஒரு அங்கலாய்ப்பு..

ராசா… நீ நடத்து ராசா…

miss you kolkata – Nirmala..

கோப்பு வகை: சொந்தக் கதை, பொது — prakash @ 4:41 பிற்பகல்

நகரம் நகரமாகச் சுற்றிக் கொண்டிருந்த நிர்மலா, சமீபத்தில் கொல்கத்தாவில் இருந்து இடம் பெயர்ந்திருக்கிறார்.. ஒன்றரை வருடங்கள் வாழ்ந்த கொல்கத்தா பற்றிய அழகான பதிவு..

TN Elections 2006 – Naga Elangovan

கோப்பு வகை: அரசியல், தேர்தல் 2006 — prakash @ 4:40 பிற்பகல்

அட… நாக இளங்கோவன்.. வாங்க..

கூட்டணிக் கட்சிகளுக்கு இடப் பங்கீடு முடிந்த நிலையில், தொகுதிகளின் பெற்றி வாய்ப்பு பற்றி, நாக.இளங்கோவனின் விரிவான அலசல்.

இந்த அலசலுக்கான முன்னுரையில், இளங்கோவன், இணையத்தில் பங்கு கொள்கிற ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை எழுதுவது அதிகம். முழுமையான இணையத் தமிழ் மடற்குழுக்கள், வலைப்பதிவுகள் மற்றும் இணைய இதழ்கள், தரவுகள், புள்ளிவிவரம் கொண்ட ஆய்வுடன் கூடிய தேர்தல் கணிப்புகளை வெளியிடுவது இனிமேல் செய்யக் கூடும் அல்லது அதிகரிக்கக் கூடும். அதற்கு வலு சேர்க்கும் பொருட்டு இணையத்தில் புழங்கும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரில் ஒருவனாக, தனிப்பட்ட முறையில் கடந்த தேர்தல்களின் தரவுகளை ஆய்ந்து, ஒரு முன்கணிப்பை செய்திருக்கிறேன்.

 இது எந்த அரசியல் சார்பும், நிறுவனச் சார்பும் கொண்டதல்ல. இதில் பிழைகள், குறைகள் இருந்தால் அதற்கு நான் மட்டுமே காரணம். இதற்கு எந்த வணிக நோக்கும் கிடையாது. தன்னார்வமும் முயற்சியும் மட்டுமே இதற்கு அடிகோள்.

என்று எழுதுகிறார்..

வரவேற்கிறோம்..

Hindu Marriage Act – Badri

கோப்பு வகை: சமூகம் — prakash @ 4:37 பிற்பகல்

இந்து திருமணச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் பற்றியும், செய்ய வேண்டிய திருத்தம் பற்றியும் பத்ரியின் விரிவான பதிவு. அதிலே ஒரு முக்கியமான சட்டதிருத்தமாக சொல்வது..

இப்பொழுது உச்சநீதிமன்றம் இன்னொரு புதிய காரணத்தையும் சேர்க்கலாம் என்று அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது. அதாவது கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றால் – இருவரும் ஒருமனதாக அதை ஒப்புக்கொண்டால் – அதாவது திருமணத்தை இனியும் ஒட்டவைக்கமுடியாது என்ற நிலை ஏற்பட்டால் அந்த விவாகத்தை ரத்து செய்யலாம் என்பதே அது.

உண்மை என்னவென்றால் மேலை நாடுகள் பலவற்றிலும் இந்த வகை விவாகரத்துதான் அதிகம். இருவரும் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றால் அமெரிக்காவில் பல மாநிலங்களில் ஒரு வாரத்துக்குள்ளாகப் பிரிய முடியும்.

ஆனால் இதுநாள்வரையில் இந்த வசதி இந்தியாவில் இல்லை. இனிச் சட்டம் இயற்றினால்தான் இந்த வசதி ஹிந்துக்களுக்குக் கிடைக்கும். முஸ்லிம் திருமணங்களில் இதை எளிதாகச் செய்யமுடியும். (அதாவது திருமணம் நீடிக்கவேண்டாம் என்று இருதரப்பினரும் முடிவுசெய்துவிட்டால்…)

நல்ல வேளை, இந்த திருத்தம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டிருந்தால், நமக்கு மௌனராகம் என்ற திரைப்படமே கிடைத்திருக்காது :-)

 

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.