தனக்குப் பிடித்த பத்து புத்தகங்களை பட்டியலிடுகிறார் பி.கே.சிவகுமார்.. புத்தகங்கள் பற்றி சிலவரிகளாவது எழுதியிருக்கலாமே என்று நினைக்கும் பொழுது, தான் ஏன் அப்படிச் செய்யவில்லை என்றும் சொல்கிறார்..
மார்ச் 28, 2006
Delhi Chalo, A Request – Srikanth Meenakshi
போபாலில் ஏற்பட்ட விஷ வாயு விபத்து மட்டும், மேற்குச் சீமையில் எங்காவது நிகழ்ந்திருந்தால், இன்னேரம், யூனியன் கார்பைட் நிறுவனம் நஷ்ட ஈடு கொடுத்தே போண்டியாயிருக்கும் என்று 'ஒருத்தர்' சொன்னார். ஆனால், இது இந்தியா.
ஸ்ரீகாந்தின் பதிவில் இருந்து…
போபால் விபத்தில் தப்பிப்பிழைத்தவர்களில் சுமார் எழுபது பேர், போபாலிலிருந்து புது தில்லி வரை நடை பயணம் (787 கிலோமீட்டர்) மேற்கொண்டுள்ளனர். தற்போது தில்லியின் மிகச் சமீபத்தில் இருக்கும் இவர்கள், நீங்கள் இதைப் படிக்கும் தருணத்தில் நகரத்தைச் சென்றடைந்திருப்பார்கள்.
தில்லியில் பிரதமருடன் ஒரு நேர்காணலைக் கோரி இருக்கிறார்கள். நேர்காணல் கிடைக்காவிட்டால், கால வரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாய் தீர்மானித்திருக்கிறார்கள்..
ஒரு பெரிய முயற்சி நடக்கிறது. நாமும் உதவி செய்யலாம். பணங்காசு எல்லாம் கொடுக்கத் தேவை இல்லை.. ஸ்ரீகாந்த் கேட்டுக்கொள்கிற படி செய்தால் போதும்
The road less travelled
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து விட்டு, பொறியலாளர் ஆகுபவர்கள் ஒரு பக்கம். எம்பீயே படித்து விட்டு, சோப்பு, சீப்பு கண்ணாடி விக்கிறவங்க இன்னொரு புறம். 'பொட்டி தட்டுற' உத்தியோகம் பாக்கிறவங்க இன்னொரு புறம். ஆனால் இவர்களில் இருந்து வித்தியாசப்படும் தங்கபாண்டி என்பவரைப் பற்றி சோடா பாட்டில் பாலா எழுதுகிறார்…
தங்கபாண்டி…. சூப்பர் மச்சீ..
update : பொறியியல் படித்துவிட்டு ஓவியரானவர் கதை இருக்கட்டும்., ஐஐஎம்மில், முதுகலை மேலாண்மை படித்துவிட்டு, உணவுக் கடை வைக்கப் புறப்பட்ட சுரேஷின் கதையை சுட்டிக் காட்டுகிறார் kaps.
Tamil vs Kannada, Hindi vs English
பெங்களூருவின் அல்ட்ரா மாடர்ன் பிரதேசங்களில், கன்னடம் பேசக் கூச்சப்படுபவர்களைப் பற்றி H R வெங்கடேஷின் பதிவு. ஹிந்தி மற்றும் ஆங்கிலத்த்ல் பேசுபவர்களையும் தொட்டுச் செல்வது, காரசாரமான மறுமொழிகளுக்கு வழி வகை செய்கிறது. வடக்கு vs தெற்கு சண்டை, இணையத்தில் வெகு பிரபலம். என் சேமிப்பில் இருந்து சாம்பிளுக்கு ஒரு பழைய பதிவு.. [ எரிகிற கொள்ளியிலே இன்னும் கொஞ்சம் எண்ணெய்?
]
[Tip : Kaps]
Stanislaw Lem – Arul Selvan
Stanislaw Lem தெரியுமா? அவர் நேற்று இறந்துவிட்டார். அருள்செல்வனின் குறிப்புகள் இங்கே..
Update : Venkat's tribute
Curd Rice Production presents….
படத்தைப் பாருங்க… செமை நக்கல்ல்..
Snegithi – Anupama
ஆடிப் பாடி, விளையாடி,
கை கோர்த்து நடந்து, முத்தமிட்டு,
முத்தாய் சிரித்து, சிறு பூவாய் மலர்ந்து,
பூரித்து இருக்கயில் ஒரு நாள்..
மனம் குமுற, கண்ணீர் பெறுக,
முதல் முறையாய் தனிமை அதனை
உணர்ந்து நின்றேன், என்
உயிர் சினேகிதி அவளது மரணத்தில்..
இதை கவிதைன்னு சொல்ல முடியுமான்னு தெரியலை… இருந்தாலும் நல்லா இருக்கு…
Getting Voter’s ID card – Pradeep
தேர்தல் அடையாள அட்டைக்காக புகைப்படம் எடுக்கச் சென்ற விஷயத்தை சுவாரசியமாக எழுதுகிறார் பிரதீப் இங்கே..
kathai & kAthai
கத்துகடல் சூழ் நாகை காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போது அரிசி வரும் – குத்தி
உலைய இட ஊரடங்கும்.; ஓர் அகப்பை அன்னம்
இலையில் இட வெள்ளி யெழும்.
சிலேடைக்கவி காளமேகத்தின் இந்தப் பாடலுக்கு அர்த்தம் தெரியுமா? இராம.கி சொல்றார்…