தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சரிப்படுமா? அலசி ஆராய்கிறார் மாலன்.. தமிழ் சசியின் கோணம் இங்கே..
ஏப்ரல் 3, 2006
Atrocities on TN Fishermen – Rosa Vasanth
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதும், துப்பாக்கிச் சூட்டில், அப்பாவி மீனவர்களைக் கொன்று குவிப்பதுமாக நடந்து கொண்டேதான் இருக்கிறது.. இது குறித்த, ரோசாவசந்தின் நியாயமான கோபம் இங்கே..
Buying Books Online – Kaps
இணையத்தில் புத்தகம் வாங்குவதற்கு என்று இருக்கும் பல்வேறு இணையத்தளங்களை ஒப்பிட்டு அலசுகிறார்.. எதில் வாங்கலாம் என்று நீங்கள் முடிவு செய்யுங்கள். இது தவிர, இணையத்தில் புத்தகங்கள் வாங்க வேறு வழி/இணையத்தளம் இருந்தால், பதிவின் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
BorrowMe – borrow, lend, swap stuff : Kingsley Jegan
எதிர்த்த வீட்டு மாமி பேப்பர் கடன் கேட்பாரே? பக்கத்து வீட்டுக்காரர் காபிபொடிக்கு நிற்கிறாரா? உபயோகமில்லாத பண்டங்களையும் தாற்காலிகமாக உபயோகிக்காததையும் பரிமாற அழைக்கும் வலையகம் குறித்த அறிமுகம் + விமர்சனம்.
Does Standards really matter? – Narain
மைக்ரோசாஃப்ட், கூகிள் & ஆப்பிள் – யாருடைய தளங்கள் W3C-இன் அங்கீகரிக்கப்பட்ட பொதுமுறைகளை அடியொற்றி நடக்கிறது? ஆச்சரியமான முடிவுகள்…
Dogs Adoption Mela – Uma
The Welfare of Stray Dogs (WSD) will be hosting the WSD ADOPTION MELA at Dhanraj Mahal, Apollo Bunder, Near Cottage Industries Emporium, Colaba on Sunday, April 9, 2006 between 5 pm and 7 pm. 10 dogs will be put up for adoption.
மும்பைப் பக்கம் இருந்தால் தத்தெடுத்து வாழ்வைப் பகிரச் சொல்லும் வாய்ப்பு.
ilaiyaraja special
நீங்க இளையராஜா பக்தரா? கீதம் சங்கீதம் சிவா, சில இசைத் துண்டுகளை பதில் ஏற்றி என்ன பாடல் என்று கண்டு பிடிக்கச் சொல்கிறார்.. முயற்சி செய்து பாருங்கள்.. கண்டு பிடிக்க முடிகிறதா?
இளையராஜாவின் இசைக்காகவே ஒரு தனி வலைப்பதிவு இருக்கிறது.. பார்த்திருக்கிறீர்களா? சமீபத்தில், கீரவாணி ராகத்தில் அமைந்த, இளையராஜாவின் பாடல்களைப் பட்டியல் இட்டிருக்கிறார் மொக்க ராசு…
ஆவணத்துக்குச் சென்று மீதமுள்ளதையும் படிக்கத் தவறாதீர்கள்..
Vodkathon – A summary
வோட்கா வோட்காதான் (இரண்டு தடவை வோட்கா தெரிந்தால் கில்லி பொறுப்பில்லை)
- செந்தில்
- பிரபு
- அனிதா போரா
- முத்து
- நியூட்டன்
- சுதீஷ் காமத்தின் தனி ஆவர்த்தனம்
Bangalore MetroBlog
மும்பை, சென்னையைத் தொடர்ந்து பெங்களூரும் மெட்ரோபதிகிறது. (புதிய உறுப்பினர்களையும் வரவேற்கிறது.)
Mesmirizing – Venkat
இந்தப் பாடல் வந்த புதிதில் பட்டிதொட்டியெங்கும் முழ்ங்கிக் கொண்டிருந்தது. இப்பொழுது இணையத்தில் அதிக முறை மேற்கோள் காட்டப்படும் தமிழ்த் திரையிசைப் பாடல் இதுதான். சந்தேகமிருந்தால் கூகிளிட்டுத் தேடிப்பாருங்கள். புதிதாக வெளிநாடுவரும் அனைத்து நிரலர்களும் செய்யும் முதல் மூன்று விஷயங்களுக்குள் இதுவும் ஒன்றாக இருக்கும். 1. வீடுபார்த்து குடியமருவது 2. ப்ளாக்ஸ்பாட்டில் ஒரு வலைப்பதிவைத் துவங்குவது 3. தமிங்கலத்தில் முதல் வாரத்தில் பட்ட அல்லல்களை (இதைச் செந்தமிழில் லோல் என்று சொல்வார்கள்) எழுதி இந்தப்பாடலை மேற்கோள் காட்டுவது.
எந்தப் பாடல் தெரியுமா?
கேளுங்க
இதே பாட்டை நம்ம ஆளு குரலிலே கேக்கறீங்களா?
இதழியல் மாணவர்களின் வலைப்பதிவு
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் இதழியல் துறையில் முதுகலைப் பட்டப் படிப்பை இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவு செய்யவிருக்கும் மாணவர்கள் புதியவலைப்பதி்வைத் தொடங்கியிருக்கிறார்கள்.
" எங்களின் பட்ட மேற்படிப்பில் ஊடக ஒழுக்கங்கள் குறித்து கற்று வருகிறோம். இதில், அற ஒழுக்கங்கள் குறித்தும், ஊடகச் சட்டங்கள் குறித்தும் படித்து வருகிறோம். தேர்தல் வேளையில், தமிழ் நாளிதழ்கள் எவ்வாறு செய்திகளை வெளியிடுகின்றன என்பது குறித்து ஆராய்வதே எங்களின் முக்கிய நோக்கம். குறிப்பாக, துல்லியம், பக்கம் சாராமை, நியாயமுடன் செய்திகளை வெளியிடுதல் போன்ற அடிப்படை விஷயங்களில் தமிழ் நாளிதழ்கள் என்ன விதமான போக்கினைக் கையாண்டு வருகின்றன என்பதைக் கண்டுணர்வதே எம்முடைய அக்கறையாக இருக்கும். இது, தமிழ் நாளிதழ்களைப் புரிந்து கொள்ள எமக்குப் பெரிதும் உதவும் என்று நம்புகிறோம்."
இந்த வலைப்பதிவைத்தொடர்நது படித்து கருத்துக்கள்சொல்வது மாணவர்களின் வளர்ச்சிககு உதவும. எனவே அவர்களுக்கு ஊக்கமளியுங்கள்.