'இலக்கியப்பீடம்' மாத இதழ் வரும் ஞாயிறு (9 ஏப்ரல்.2006) அன்று காலை 9-30 மணிக்கு (கவனிக்க,காலை நேர நிகழ்ச்சி!) 2005 ஆம் ஆண்டுக்கான சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவை நடத்துகிறது.
இடம்: தேவநேயப் பாவாணர் நூலகக் கருத்தரங்குக் கூடம் (எல்.எல்.ஏ பில்டிங்க்ஸ், டி.வி.எஸ் அலுவலகம் எதிர்) அண்ணா சாலை, சென்னை .
தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு சிறுகதைகளைப் பற்றி ஆறு விமர்சகர்கள் பேசுகிறார்கள். எம்.ஆர். ரெங்கராஜனின் சிறுகதை 'முரண்' முதல் பரிசு பெறுகிறது.
'சொக்கா சொக்கா சோறுண்டா' என்னும் பாட்டி காலத்துக் கதையில் மின்சாரம் இல்லாத அந்தக்காலத்தில் இருட்டில் உணவு உண்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துவார்கள். இவங்க இருட்டிலேயே சோறு போடறாங்களே…
கல்லூரியில் மூன்றாவது வருடம் படிக்கும் போது குரொசோவா பற்றிய அறிமுகம் கிடைத்தது. ஆனால் அவரது படைப்புகளைப் பார்க்கும் வாய்ப்பு ஐந்து வருடங்களுக்குப் பிறகுதான் கிடைத்தது. அமெரிக்கா வந்த பின் சினிமா பார்க்கும் ப்ழக்கம், தொட்டில் ப்ழக்கம் சுடுகாடு மட்டும் போல தொடர்ந்தது. சர்வதேச அளவில் பேசப்படும் திரைப்படங்களுக்கு என்று சில குணங்கள் இருக்கிறது. நம் கோலிவுட்காரர்கள் சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற வகையில் இதைப் பேசுகிறார்கள். இது எனக்குப் புரியவில்லை.இந்த முறை எனக்குப் பிடித்த நான்கு சர்வதேசப் படங்களைப் பற்றிப் பேசப் போகிறேன்.
My Mothers Castle, Mrs. Brown , White baloon , Waking Ned Devine ஆகிய நான்கு திரைப்படங்கள் பற்றிய சுருக்கமான, அழகான குறிப்புகள்.
சென்செக்ஸ், அபாயகரமாக ஏறிக்கொண்டும் இறங்கிக் கொண்டும் இருப்பது குறித்தும், அனலிஸ்ட்டுகளின் அபத்தமான முடிவுகள் பற்றியும் ஆனந்த் ஸ்ரீதரன்…