கில்லி - Gilli

ஏப்ரல் 13, 2006

Gaanaa..Azad

கோப்பு வகை: இசை — prakash @ 4:07 நான்

வாள மீனுக்கு வெலாங்கு மீனுக்கு  கல்யாணம்.. இந்தப் பாட்டை ஒருதரமாவது கேட்டிருப்பீர்கள். இது நிஜமாகவே கானா என்கிற இலக்கணத்துக்குள் அடங்குகிறதா? கானா கவிஞர் ஆசாத், பிரித்து மேய்கிறார் இங்கே ( உப செய்தி :இவர் கானா பற்றிய நூல் ஒன்றை எழுதியவர்)

மாப்பிள்ள வாளமீனு பழவேற்காடு தானுங்கோ(வ்)! - அந்த
மணப்பொண்ணு வெலாங்குமீனு மீஞ்சூரு தானுங்கோ(வ்)!'

வரிகளில் உலகநாதன் சென்னைத் தமிழின் கானா மொழியை அட்டகாசமாகக் கையாண்டிருக்கிறார்.நாட்டியம், வாத்தியம் என்று இயைபுத்தொடையாக கானாவின் இலக்கணம் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது.

ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டுதான நாட்டியம்! - அய்ய
மேளதாளம் முழங்கிவரும் வஞ்சிரமீனு வாத்தியம்!

கானாக்களில் மரபாக எழுதப்படும் இன்னொரு உத்தி, 'டா' சேர்த்துக்கொள்வது.

மறுமொழிகள் ஏதும் இல்லை »

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.