விஜயகாந்தின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில், அவருடன் சென்ற பத்திரிக்கையாளர் சுதீஷ் காமத்தின் புகைப்படத் தொகுப்பு
[Tip : Kaps]
இத, இத, இதத்தான் எதிர்பார்த்தேன்..
தேர்தல் நெருங்குது… வலைப்பதிவர்கள், news, views, analysis என்று புகுந்து புறப்படும் போது, இவர்களுக்கு நடுவில், வித்தியாசமாக கலக்குகிறார்கள் 'தூள்' பாலாஜி, மைக் செட் முனுசாமி & கோஷ்டி..
பாக்கறீங்களா?
இசுடாலின் மீது சாட்டப்படும் குற்றங்கள் என்ன? என்ற வினாவுக்கு எத்தனை பேரால் சரியான காரணத்தைக் கூற முடியும் என்று தெரியவில்லை.அவரின் மீதும் கருணாநிதியின் மீதும் இராசீவ் காந்தி கொலைச் சதி கூட சுமத்தப் பட்டது. அதனால் தி.மு.க பாதிக்கப் பட்டதும் உண்மை. கருணாநிதியை 6 மாதம் அரசியல் ஓய்வெடுக்க வைக்கும் அளவிற்கு அந்தக் குற்றச்சாட்டு அவரை பாதித்தது. பின்னர்தான் மக்களுக்கு அது "இடுதேள் இட்ட" எதிரணியினரின் சதி என்று புரிந்தது. வேறு ஏதும் சில்லறைக் காரணங்கள் இருக்குமானால் அக்காரணங்களினால் அவர் இன்றைய அரசியலில் இருக்கும் அனைவரையும் விட தாழ்ந்தவர் என்று கருதிவிடலாகாது
குடும்ப அரசியல் என்று சொல்லி ஊடகங்களும், எதிர்கட்சிகளும், தொடர்ந்து, ஸ்டாலினுக்கு எதிராக விமர்சனம் செய்வதை, புள்ளி விவரங்களுடன் ஒரு பிடி பிடிக்கிறார் நாக.இளங்கோவன்.
சொந்த ஊரான நெல்லிகுப்பத்தின் வெற்றி வாய்ப்புகளைப் பற்றி விரிவாக அலசுகிறார்.. ( எல்லாத் தொகுதிகளில் இருந்தும் இது போல, தகவல் பூர்வமான அலசல் வந்தால் எத்தனை நன்றாக இருக்கும்? )