கில்லி - Gilli

ஏப்ரல் 5, 2006

Epic Book on DMK Luminary - Rajni Ramki

கோப்பு வகை: அரசியல், புத்தகங்கள் — bsubra @ 1:20 பிற்பகல்

கருணாநிதியின் திருக்குவளை வாழ்க்கையில் ஆரம்பித்து திமிறும் கூட்டணிக்கட்சிகளை இழுத்து பிடித்துக்கொண்டு தேர்தல்களத்தில் நிற்கும் தற்போதைய நிலை வரை ஒரே புத்தகத்தில் அடக்கி, பின்னணியில் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றையும் கொணர்ந்திருக்கிறாரேமே! கலக்குறாரு…

Naanjil Naadan’s Sathuranga Kuthiraigal

கோப்பு வகை: புத்தகங்கள், பொது — bsubra @ 1:11 பிற்பகல்

கல்யாணமாகிவிட்ட கல்யாணியுடன் அவன் கொண்ட மிருதுவான காமம் நயமாகச் சொல்லியிருப்பார். "ஈரத் துணி கிடந்த தணுப்பும், இலேசான முதல் வியர்வையும், மிருதுவும் மெல்லிய வாசமும் குழைவும் கொண்டதாக இருக்கும் இந்தப் பெண்ணுடம்பு."

"குளித்துவிட்டு வந்தவள் கைகளை உயர்த்தி ஈரத் துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள். ஈரத்துணி மாற்ற உள்ளே போனாள். ஆம்பல் தண்டுபோல் பெண் உடம்பின் குளிர்ச்சி. தழுவலின் குழைவு. சந்தன சோப்பும் மஞ்சள் பொடியும் மூக்கில் ஏற்றிய வாசனையின் போதை. பேறுகளின் வெள்வரியோடிய அடிவயிறு. கருமை பரந்திருந்த காம்புகள். முதல் அடுக்குச்சதை மடியும் இடுப்பு."

மரத்தடியில் ரெகாவின் பதிவு.

ஏப்ரல் 3, 2006

Buying Books Online - Kaps

கோப்பு வகை: ஆங்கிலப் பதிவு, புத்தகங்கள் — prakash @ 3:09 பிற்பகல்

பயனுள்ள பதிவு

இணையத்தில் புத்தகம் வாங்குவதற்கு என்று இருக்கும் பல்வேறு இணையத்தளங்களை ஒப்பிட்டு அலசுகிறார்.. எதில் வாங்கலாம் என்று நீங்கள் முடிவு செய்யுங்கள். இது தவிர, இணையத்தில் புத்தகங்கள் வாங்க வேறு வழி/இணையத்தளம் இருந்தால், பதிவின் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மார்ச் 30, 2006

ஜெயமோகனின் கொற்றவை

கோப்பு வகை: இலக்கியம், நூல் விமர்சனம், புத்தகங்கள் — Venkat @ 7:52 பிற்பகல்

ஜெயமோகனின்ப்  புதியநாவலான கொற்றவை குறித்து எழுதுகிறார் பச்சோந்தி

"ஒரு சம்பவம், அல்லது தருணத்திற்கும் முழு ரூபம் கிடையாது. - இதுவே என் புரிதல் ஜெயமோகன் எழுதியுள்ள கொற்றவை மீது.ஒவ்வொரு வர்ணனையும், ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு விவரமும், முதற்பார்வைக்கு எவ்வளவு அனாவசியமாகத் தோன்றினாலும், வித்தியாசமுள்ள பல விபரங்கள் ஒரு மையத்தை நோக்கிபோவதை ஆழ்ந்து படித்தால் தான் உணர முடியும்". 

மார்ச் 28, 2006

Top Ten Books - P K Sivakumar

கோப்பு வகை: புத்தகங்கள் — prakash @ 8:32 பிற்பகல்

தனக்குப் பிடித்த பத்து புத்தகங்களை பட்டியலிடுகிறார் பி.கே.சிவகுமார்.. புத்தகங்கள் பற்றி சிலவரிகளாவது எழுதியிருக்கலாமே என்று நினைக்கும் பொழுது, தான் ஏன் அப்படிச் செய்யவில்லை என்றும் சொல்கிறார்..

மார்ச் 13, 2006

Locus Magazine Recommended Reading List

கோப்பு வகை: ஆங்கிலப் பதிவு, டிப்ஸ், புத்தகங்கள் — bsubra @ 8:01 பிற்பகல்

அறிவியல் புனைவு, முதல் படைப்பு, கட்டுரைத் தொகுப்பு, கதை, கலை, சிறுகதை என்று பலவற்றிலும் படிக்க வேண்டிய புத்தகங்களை பரிந்துரைக்கிறார்கள். (வழி: Aaman Lamba)

மார்ச் 12, 2006

Tamil Ilakkiya Kavithaigal

கோப்பு வகை: இலக்கியம், புத்தகங்கள் — bsubra @ 7:18 பிற்பகல்

மார்ச் 10, 2006

Primitive Oneness of the English and the Tamils

கோப்பு வகை: ஆங்கிலப் பதிவு, புத்தகங்கள், பொது — bsubra @ 4:08 பிற்பகல்

ஆங்கிலமும் தமிழும் எங்கு கை கோர்க்கிறது? எவ்வாறு ஒன்றோடன்று உறவாடுகிறது? Key Words of a Kinship என்னும் நூலின் மூலம் வரலாற்றாசிரியர் + மொழி ஆய்வாளரின் பார்வை. (வழி: தமிழ் ஆராய்ச்சி)

மார்ச் 9, 2006

Simply Southern Facts & Freakonomics

கோப்பு வகை: ஆங்கிலப் பதிவு, சொந்தக் கதை, புத்தகங்கள், பொது — bsubra @ 3:45 பிற்பகல்

‘தேரடி வீதியில் தேவதை வந்தா’ பாட்டில் ஆரம்பித்து மனக்குமுறலை எங்கெங்கோ கொண்டு செல்கிறார் தீபக் கிருஷ்ணன். இவரும் Freakonomics-ஐ முன்வைக்க, Blink எழுதிய Gladwell-ம் இன்று வாசக/சக-எழுத்தாளனின் பார்வையை விரிவாக எழுதியிருக்கிறார். (எச்சரிக்கை: முன்னதில் சுடுசொற்கள் உள்ளன; பின்னதைப் படிக்க நிதானமான நேரம் தேவை.)

மார்ச் 7, 2006

Singapore Tamil Book Readers’ Club

கோப்பு வகை: ஈழம், நிகழ்வுகள், நூல் விமர்சனம், புத்தகங்கள் — bsubra @ 10:03 பிற்பகல்

சிங்கப்பூரில் ‘வாசகர் வட்டம்’ என்ற அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது. இரண்டுமாதத்திற்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு நூல் மீது சிங்கப்பூர் நூலகம் எதிலேனும் விவாதம் நடக்கும்.

வாசகர் வட்டத்தின் நவம்பர் மாதக் கூட்டத்தில் ஜெயமோகனின் ‘காடு‘ நாவலை வாசித்து அனுபவமாக்கி பகிர்ந்து கொண்டனர்.

பிப்ரவரி மாதக்கூட்டத்தில் இலங்கைப் பெண் எழுத்தாளினியும், கவிதாயினியுமான தாட்சாயிணியின் ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்‘ விவாதிக்க எடுத்துக் கொள்ளப் பட்டது.

Tamil Book Club - Mathy

கோப்பு வகை: இலக்கியம், புத்தகங்கள், பொது — prakash @ 2:21 பிற்பகல்

கீற்றுக் கொட்டகை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த வரிசையில், புத்தகங்களைக் குறித்த பதிவுகளின் தொகுப்பாக, ‘தமிழ் புக் கிளப்’ எனும் தொகுப்பு வலைப்பதிவை மதி துவங்கியிருக்கிறார்.
இத்தகைய முயற்சிக்குக் காரணமாக அவர்

“தமிழ்வலைப்பதிவுகளில் வாசிப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். பலர், தாங்கள் வாசித்த புத்தகங்களைப்பற்றி பல அற்புதமான இடுகைகளை இட்டிருக்கிறார்கள். அம்மாதிரியான இடுகைகள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கின்றன. ஆனால், அந்த இடுகைகளைத் தேடி எடுப்பதில் சிரமங்கள் இருக்கின்றன. ஏதோவொரு வலைப்பதிவில் இந்தப் புத்தகம் பற்றிப் படித்திருக்கிறோம். நல்லதொரு அறிமுகம் அது. வாங்குவதற்கு முன்பு ஒரு முறை பார்த்துவிடுவோம் என்று எண்ணினாலும் சுலபத்தில் செயற்படுத்த முடியாது இருக்கும் “

என்றும்

கடந்த மூன்று வருடங்களில் தமிழ் வலைப்பதிவுகளில் எழுதப்பட்ட நூல் அறிமுகங்கள் ஏராளம். எல்லாவற்றையும் தனியொரு ஆளாகத் தேடியெடுப்பது முடியாத காரியம். நூல் அறிமுகங்கள், வாசக அனுபவங்கள், நூல்களில் இருந்து பக்கங்களைத் தட்டச்சிட்டுப் பகிர்ந்துகொண்டவர்கள் அவரவர் பதிவுகளில் எழுதியிருக்கும் இடுகைகளின் சுட்டிகளை இங்கே பகிர்ந்துகொண்டால் வரும் நாட்களில் இங்கே கொஞ்சம் கொஞ்சமாக (நேரம் கிடைக்கும்போது) உள்ளிடுகிறேன்

என்றும் சொல்கிறார்.

உருப்படியான முயற்சி. வாழ்த்துக்கள்

மார்ச் 5, 2006

Manasey Relax Please & Tabusankar

கோப்பு வகை: புத்தகங்கள், பொது, வலையகம் — bsubra @ 5:52 நான்

‘மனசே நிலாக்ஸ் ப்ளீஸ்’ என்று சுவாமி சுகபோதானந்தா ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரைகள் பி.டி.எஃப். கோப்பாக கிடைக்கிறது. தபூ சங்கர் எழுதிய ‘தேவதைகளின் தேவதை’ என்னும் காதல் காவியமும் தருகிறது முத்தமிழ் மன்றம்.

Book Exchange Scheme for Politicos - Kovai Pamaran

கோப்பு வகை: அரசியல், புத்தகங்கள், பொது — bsubra @ 1:06 நான்

தங்களுக்கு உவந்ததை உரைக்கும் புத்தகங்களை மாற்றுக் கருத்து உடையவர்களுக்குப் பரிசளிக்கும் திட்டம் தீட்டுகிறார்.

மார்ச் 2, 2006

Zero Degree by Chaaru Nivethitha - Muthu

கோப்பு வகை: நூல் விமர்சனம், புத்தகங்கள் — bsubra @ 8:05 பிற்பகல்

சிதறல் ஸ்டைலில் வாசக அனுபவங்களைப் பகிர்ந்து, கதை சொல்லி, சாருவின் ஸீரோ டிகிரியையும் விமர்சிக்கிறார் ‘தமிழினி’ முத்து.

பெப்ரவரி 21, 2006

Udaiyaar - Subha

கோப்பு வகை: நூல் விமர்சனம், புத்தகங்கள் — bsubra @ 3:36 பிற்பகல்

குமுதத்தில் தொடராக வெளிவந்த பாலகுமாரனின் ‘உடையார்’

பொன்னியின் செல்வ‘னின் தொடர்ச்சியாக இதை பார்க்க தோன்றும்.

காவிரி பாயும், அழகிய விளைநிலங்கள் கொண்ட சமதரையான சோழ ராஜ்யத்தில் கற்கள் எப்படி கொண்டு வருவது? ஒரு இடத்தில் கூடியிருக்கும் அவ்வளவு பெரிய ஆட்படைக்கு உணவளிப்பது எப்படி? அதனால் சமூகத்தில் எவ்விதமான மாறுதல்கள் ஏற்படும்?

பழைய இடுகைகள் »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.