கில்லி - Gilli

ஏப்ரல் 14, 2006

http://gilli.in/

கோப்பு வகை: Announcements, பொது — prakash @ 4:46 நான்

கில்லி வாசகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அவ்ளோதாங்க.. கில்லி புது இடத்துக்கு குடி பெயர்ந்து விட்டது. கில்லியை அங்கே மட்டும் தான் படிக்க முடியும்.

உலாவியின் விருப்பப்பட்டியலில் கில்லி வலை முகவரியை சேமித்து வைத்துப் படிப்போரும், blog lines, feedreader போன்ற நிரலிகள் மூலம் தொடர்ந்து வாசிப்பவர்களும், தங்கள் வலைப்பதிவுகளில் சுட்டி கொடுத்திருக்கும் அன்பர்களும், புதிய வலைமுகவரியை குறித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஏப்ரல் 13, 2006

Web Links - Ravi Srinivas

கோப்பு வகை: இதழியல், சுட்டிகள், பொது, வலையகம் — bsubra @ 4:28 பிற்பகல்

தமிழகத் தேர்தல் அரங்கு, இட ஒதுக்கீடு, மேதா பட்கர், உலகமயமாதல், அமெரிக்காவும், குடியேற்றமும், இணையத்தில் சுதந்திரமும், கட்டுப்பாடும் என்று படித்த உரல்களைத் தட்டலாம்.

Parisu - PK Sivakumar

கோப்பு வகை: படைப்பு, பொது — bsubra @ 4:20 பிற்பகல்

அப்படியெல்லாம் சுலபமாக அவனை மறந்துவிடுகிற நண்பன் இல்லை துரை என்பதும் அவனுக்குத் தெரியும். போக முடியாததற்கு அவன் தனக்குத் தானே சொல்லிக் கொள்கிற சமாதானம் இது என்று அவனுக்குத் தோன்றியது.

பழைய ஞாபகங்கள் கொணர்பவை சந்தோஷமா துக்கமா என்றெல்லாம் இப்போது ஒன்றும் இனம்பிரித்து அறிய முடிவதில்லை.

மார்ச் 2006 மாத வடக்குவாசல் இதழில் - (இந்த இதழ் டெல்லியிலிருந்து யதார்த்தா பென்னேஸ்வரன் அவர்களால் நடத்தப்படுகிறது) - சிவக்குமாருடைய "பரிசு (அல்லது) திரும்பி வந்த தினங்கள்" என்ற கதையை பகிர்ந்து கொள்கிறார்.

கவனம் சிதறாமல் பயணிக்கிறது; ஆங்காங்கே எண்பதுகளின் க்ளிஷேக்கள் எட்டிப் பார்த்தாலும் இதமான நடையில் விறுவிறுவென நகரும் படைப்பு.

Google’s influence on Journalism, Good or Bad?

கோப்பு வகை: ஆங்கிலப் பதிவு, பொது, வலையகம் — prakash @ 4:04 நான்

செய்திகளின் தலைப்புகள், வாசகர்களை, ஈர்க்கக் கூடியதாக இருக்கும் படி செய்தியாளர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால், இப்போது கூகுள் தேடியந்திரத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது என்கிறார்..

….news organizations large and small have begun experimenting with tweaking their Web sites for better search engine results. But software bots are not your ordinary readers: They are blazingly fast yet numbingly literal-minded. There are no algorithms for wit, irony, humor or stylish writing. The software is a logical, sequential, left-brain reader, while humans are often right brain…

முழுதும் வாசிக்க.. ( ராம்நாத் வழியாக )

ஏப்ரல் 12, 2006

Bugs are worth $57 billion - Sowmya

கோப்பு வகை: அறிவியல், ஆங்கிலப் பதிவு, பொது — bsubra @ 5:59 பிற்பகல்

நீங்க 'ஈ' ஓட்டுபவரா? கொசு அடிப்பவரா? முதலாவதற்கு ஆம் என்று சொன்னால் அமெரிக்கப் பொருளாதாரம் உங்களை வாழ்த்தும்.

Don’t Scribble in Rupee Notes - Nagarajan, G.

கோப்பு வகை: இந்தியா, பொது — bsubra @ 5:54 பிற்பகல்

வேலியே பயிரை மேய்கிறது; கிருமிநாசினியே வெருவி கொடுக்கிறது; காசாளுநர்களே ரூபாய் நோட்டின் மீது கிறுக்குகிறார்கள்.

Ellarumey Thirudangathaan?

கோப்பு வகை: இலக்கியம், சமூகம், பொது — bsubra @ 5:39 பிற்பகல்

1987 மே மனஓசை இதழில் வெளிவந்த 'என்னங்க நாடு எல்லாமே பிராடு' என்னும் அறிவுமதியின் கவிதையை புதுச்சேரி இரா.சுகுமாரன் 'தேர்தல் 2006' உடன் ஒப்பிடுகிறார்.

ஏப்ரல் 11, 2006

Valainthu Pona Veeravaal - Sezhiyan

கோப்பு வகை: படைப்பு, பொது — bsubra @ 6:00 பிற்பகல்

ஜேர்மன் "பூவரசு" இதழ் நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற செழியனின் 'வளைந்து போன வீரவாள்'.

Hyundai - PKP

கோப்பு வகை: உலகம், பொது — bsubra @ 5:54 பிற்பகல்

ஹண்டே என்று சுகாதாரநலத்துறை அமைச்சர் இருந்ததுதான் அறிந்திருந்தேன். ஹூண்டாய் என்றாலும் ஹண்டே என்றாலும் ஒன்றுதான் போல!

Athmanaam - Ka Arulselvan

கோப்பு வகை: இலக்கியம், பொது — bsubra @ 5:36 பிற்பகல்

இந்திய அறிவியற் கூடம் தமிழ்ப் பேரவை 'மின்னல்' மாத இதழின் அக்டோபர் 1985ல் அருள்செல்வன் எழுதியதைப் பகிர்ந்து கொள்கிறார் மு. சுந்தரமூர்த்தி.

Reservations for OBCs in Higer Educational Instituitions

கோப்பு வகை: ஆங்கிலப் பதிவு, கல்வி, சமூகம், பொது — prakash @ 3:32 பிற்பகல்

உயர்கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீட்டை அதிகரித்து, சட்டதிருத்தம் கொண்டு வருவதற்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இடம் கொடுக்கிறதா என்பது குறித்து, சத்யாவின், புள்ளிவிவரங்கள், மேற்கோள்களுடனான விவரமான இடுகை இங்கே

இது குறித்த முந்தைய கில்லி

A trip down to the memory lane - Asif Meeran

கோப்பு வகை: சொந்தக் கதை, பொது, வலையகம் — prakash @ 2:07 பிற்பகல்

தமிழ் இணையத்துக்கு வந்தது எப்படி என்பது முதற் கொண்டு தற்போதைய வலைப்பதிவு வாழ்க்கை வரை, சுருக்கமாக, அழகாக விளக்கும் ஆசீப் மீரானின் இடுகை. ['நினைவு நதியில் ஒரு பயணம்' கவிதத்தனமா தலைப்பு வெக்கற அளவுக்கு ஸ்கோப் இருக்கிற மேட்டரை வேஸ்ட் பண்ணிட்டீங்களே அண்ணாச்சீ ]

ஏப்ரல் 10, 2006

Kasi in FM Rainbow

கோப்பு வகை: பொது, வலையகம் — prakash @ 3:42 பிற்பகல்

காசி, ரெயின்போ பண்பலை அலைவரிசையில், தமிழ் இணையம் குறித்து, ஒரு தொடர் நிகழ்ச்சி அளித்து வருகிறார். இதைக் குறித்து காசி..

தமிழ் இணையத்தில், குறிப்பாக வலைப்பதிவுகள் மட்டத்தில் நிகழ்ந்துவரும் முன்னேற்றங்கள் பற்றி இணையத்துக்கு வெளியே இயங்கும் ஊடகங்களில் அதிகம் தெரிவதில்லை. இயன்ற அளவு அத்தகைய ஊடங்ககளில் இந்த செய்திகள் வரச்செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் சில முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். அவற்றில் ஒன்று வானொலி மூலம் சுருக்கமாக சில செய்திகளை சொல்லுவது. அகில இந்திய வானொலியின் கோவை நிலைய இயக்குநர் கலைமாமணி முனைவர் சேயோன் அவர்களுடன் இதுபற்றி அளவளாவியபோது இதற்கு ஒரு வழிகிடைத்தது. அதன்மூலம் வாராவாரம் கோவையிலிருந்து ஒலிபரப்பாகும் ரெயின்போ எஃப்.எம். மூலமாக ஒரு உரையாடல் வடிவத்தில் சில தகவல்களை பரிமாறிக்கொள்ள இருக்கிறோம்.

என்கிறார்..

அவ்வாறு ஒலிப்பதிவு செய்யப்பட்ட கோப்பு, புதிதாக ஆரம்பிக்கப்ட அவரது வலைப்பதிவில் கிடைக்கும்.

கேளுங்கள்.

Legalised Loving Period…

கோப்பு வகை: சொந்தக் கதை, பொது — prakash @ 2:15 பிற்பகல்

….என்றால் என்ன தெரியுமா? நிச்சயதார்த்தத்துக்கும், திருமணத்துக்கும் இடைப்பட காலம். மீனாக்ஸ் மாதிரி ரொமாண்டிக்கான ஆளை பார்ப்பது சிரமம். வருங்கால மனைவியைச் சந்திக்கப் போய் வந்தவர் காதிலே, ' மாங்குயிலே பூங்குயிலே' பாட்டு ஒலித்துக் கொண்டே இருக்கிறதாம்.

இருக்கும்வே :-) பின்னால பார்க்கத்தானே போறோம், வேற என்னல்லாம் பாட்டு கேக்கப்போவுதுன்னு..

ஏப்ரல் 9, 2006

Pleasure Unit Theory - Scott Adams

கோப்பு வகை: ஆங்கிலப் பதிவு, பொது — prakash @ 6:09 பிற்பகல்

Scott Adams தெரியுமில்லையா? அதாங்க, Dilbert கார்ட்டூன் போடுவாரே, அவர் தன்னோட வலைப்பதிவிலே, Pleasure Unit Theory என்றால் என்ன என்று விளக்குகிறார்

My theory explains all the following:

  1. Why poor people are fatter than rich people.
  2. Why people with crappy lives do drugs that are sure to be destructive in the long run.
  3. Why you are reading this blog instead of working

அவசியம் தெரிஞ்சுக்கணும்னா , நீங்களே போய் பார்த்துக்கங்க..

பழைய இடுகைகள் »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.