விமர்சகர்கள் கிருஷ்ண, குப்த நாயர்கள், மலையாள இசையமைப்பாளர் தேவராஜன் ( திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே.. நினைவிருக்கிறதா? ), அற்புதமான நடிகர் எம்.எஸ்.திருப்பூணித்துறா போன்றோரின் மரணத்துக்கான இரங்கல் குறிப்புகள், எடின்பரோ ராயல் லைசியம் தியேட்டரில் பார்த்த நாடகத்தின் விமர்சனம் ஆகியவற்றுடன் இரா.முருகனின் நெடுங்குறிப்பு..
கதேயின் நாடக நாயகன் டாக்டர் பாஸ்ட் வானளாவிய அதிகாரம் கிடைக்க ஏங்குகிறான். உலகத்தின் சகலமான இன்பங்களை அனுபவிக்க ஆசைப்படுகிறான். கேட்டதைத் தருகிறேன் என்று முன்வருகிறான் மெபிஸ்டபிலிஸ் என்ற பெயரில் வரும் சாத்தான். ஒரே ஒரு நிபந்தனை. பாஸ்ட் சாத்தானுக்குத் தன் ஆன்மாவை ஒப்புத்தரவேண்டும். எந்த ஒரு இன்பத்தை அனுபவிக்கும்போது அதில் அமிழ்ந்து வெளியேறி அடுத்த இன்ப அனுபவத்துக்கு வர முடியாமல் போகிறதோ, அப்போது பாஸ்ட் சாத்தானுக்கு அடிமையாகி விடுவான். ஏற்றுக்கொண்டு உடன்படிக்கையில் கையெழுத்துப் போட்டுத்தரும் பாஸ்ட்டும், அவன் கூடவே மெபிஸ்டபிலிஸும் போகிற வெளி, உள் பயணங்களின் ஒழுங்கமைவு ஜாக்கிரதையாகக் குலைக்கப்பட்ட தொகுப்பு தான் ‘பாஸ்ட்’ நாடகம்.
Welcome Back Era.mu
விஜயகாந்தின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில், அவருடன் சென்ற பத்திரிக்கையாளர் சுதீஷ் காமத்தின் புகைப்படத் தொகுப்பு
[Tip : Kaps]
வெளிநாட்டில் வசித்துக் கொண்டிருக்கும் போது, எப்படியாவது இந்தியாவுக்கு திரும்பி விட வேண்டும் என்று நினைத்து, அந்த எண்ணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வருபவரா நீங்கள்? இரு வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் இருந்து மூட்டை முடிச்சுக்களுடன் இந்தியாவுக்கு வந்து செட்டில் ஆன, ராம் விஸ்வநாதன், தன் அனுபவங்களைச் சொல்கிறார். சில டிப்ஸ¤களும் கொடுக்கிறார்.
Dilemma | Decision | Planning
பல்லாயிரக்கணக்கான வருடங்களாக, பிள்ளைப் பெறுதல் என்கிற விஷயம் நடந்து கொண்டிருந்தாலும், நமக்குன்னு வரும் போது, அதிலே இருக்கும் சந்தோஷம் அலாதியானது. ரொம்ப நாளாகக் க¡ணோம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர், திடீரென்று வந்து ‘ அம்மாவாகப் போகிறேன்’ என்கிறார்.
வாழ்த்துக்கள்
கோவை GCT கல்லூரியில் தன்னுடன் படித்த நண்பன் ஒருவனுக்கு 'என்றென்றும் அன்புடன்' பாலா எழுதும் ஆத்மார்த்தமான கடிதம்.
எச்சரிக்கை : கடிதம் கொஞ்சம் pathos effect இல் இருக்கும்.
knowledge@wharton க்கு விப்ரோவின் தலைவர் அசிம் ப்ரேம்ஜி அளித்த நேர்காணல்.
If you look at business schools in India such as the Indian Institutes of Management (IIMs) or the Indian School of Business, companies like Wipro, Infosys or TCS are not attracting the top talent from those institutions. The employers of choice for those students seem to be the investment banks and consulting companies. This poses two kinds of challenges for you. First, how do you attract the top talent from campuses? And second, how do you get lots of really sharp people for your middle- and upper-middle management? I would really like to hear your perspective on this.
Premji: For one thing, we have spread our recruitment net wider than the top five business schools in India; we now hire people from the top 25 management institutes. We have MBAs whom we have recruited from these institutes, and they rank very close in quality to people we hire from the IIMs. We have to be careful to focus on the top half or top 33% of the class, because then the students tend to be very bright. Our experience with these students has been extremely good. Many investment banks and multinational companies that recruit in India, paying students multinational salaries and offering overseas jobs, are not present at these institutes. Our competition here typically tends to be companies hiring for domestic jobs and non-investment banks. That has made these institutes a strong source for recruiting management talent
முழுவதும் படிக்க
[ அருண் நடராஜன் வழியாக]
கல்லூரியில் மூன்றாவது வருடம் படிக்கும் போது குரொசோவா பற்றிய அறிமுகம் கிடைத்தது. ஆனால் அவரது படைப்புகளைப் பார்க்கும் வாய்ப்பு ஐந்து வருடங்களுக்குப் பிறகுதான் கிடைத்தது. அமெரிக்கா வந்த பின் சினிமா பார்க்கும் ப்ழக்கம், தொட்டில் ப்ழக்கம் சுடுகாடு மட்டும் போல தொடர்ந்தது. சர்வதேச அளவில் பேசப்படும் திரைப்படங்களுக்கு என்று சில குணங்கள் இருக்கிறது. நம் கோலிவுட்காரர்கள் சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற வகையில் இதைப் பேசுகிறார்கள். இது எனக்குப் புரியவில்லை.இந்த முறை எனக்குப் பிடித்த நான்கு சர்வதேசப் படங்களைப் பற்றிப் பேசப் போகிறேன்.
My Mothers Castle, Mrs. Brown , White baloon , Waking Ned Devine ஆகிய நான்கு திரைப்படங்கள் பற்றிய சுருக்கமான, அழகான குறிப்புகள்.