ஏப்ரல் 11, 2006
‘Head’ Weight
ரமணிச் சந்திரன் இங்கிலீஸில் கதை எழுதினா இப்படித்தான் இருக்குமோ?
[ boo, அய்யோ பாவம் உங்க ஊட்டுக்காரர் :-)]
Memoirs of Geisha -Dubukku
இவரை நான் வெளையாட்டுப் புள்ளேன்னு நெனைச்சுட்டு இருந்தேன். இவர் பார்த்த படமும், அதை அனுபவித்த விதமும், அந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுகிற விதமும் வேறு மாதிரி இருக்கின்றன.
Sivasankaran acquires stake in Sahara One
ஸ்டெர்லிங் சிவசங்கரன் மாதிரி பரபரப்பு உண்டாக்குகிற வியாபார காந்தங்கள் சென்னையில் குறைவு. take over tycoon என்று பட்டமே கொடுக்கலாம். அவர், சஹாரா ஒன் மீடியா அண்ட் எண்டெர்டெயின்மெண்ட் என்னும் நிறுவனத்தில் 14.98% பங்குகளை ரூ. 120 கோடிக்கு வாங்கியுள்ளார். இது மற்றும் சிவசங்கரனின் பிற முதலீடுகள் குறித்த பத்ரியின் அலசல் கட்டுரை இங்கே…
TVC - Blogeswari
விளம்பரப் படங்கள், அதனோட script, storyboard எல்லாம் விலவரியா அலசப் போறாங்க..முதல் இடுகையிலே யாரே¡ட படங்கள் தெரியுமா? Abhinay Deo.. யாருன்னு தெரியலையா? அதாங்க, 'கறை நல்லது' சர்·ப் எக்ஸல் விளம்பரப் படம் வருதே, அதை எடுத்தவர் தான்..
"…உதாரணத்துக்கு, சர்ஃப் எக்ஸல் - கறை நல்லது [Surf excel-Daag acche hein] படத்தை பார்ப்போம்.ஒரு சிம்பிள் ஸ்க்ரிப்ட்தான். ரெண்டு குழந்தைங்க - அண்ணா-தங்கை, மண் ரோடுல நடந்து போய்கிட்டு இருக்காங்க. கீழ விழுந்த தங்கச்சி ஓ-ன்னு அழ, அவளோட அண்ணன் அண்ணன் அந்த மண்-சகதியோட தாம் தூம்-ன்னு சண்டை போடறான்."ஏய், நீ இனிமே இப்படி பண்ணுவியா? ஸாரி சொல்லு, என் தங்கச்சிகிட்ட" ன்னு மண் ரோட்டை எட்டி உதைக்கிறான், குத்தறான். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அவனே தங்கச்சிகிட்ட வழிஞ்சுகிட்டே"ஸாரி சொல்லிடுச்சு" ன்னு சொல்ல, வாய்ஸ்-ஒவர் சொல்லுது "கறை படறதுன்னால நல்ல விஷயம் நடந்தா, கறை நல்லதுதானே? சர்ஃப் எக்ஸல் - கறை நல்லது".அப்புறம் அந்த அண்ணன பாக்கறோம்.. போறசாக்குல, அந்த puddleஅ பாத்துட்டு, "மறுபடியும் பண்ணாத"ன்னு ரவுஸ்விடறான். ஸ்க்ரிப்ட் படிக்க இன்ட்ரஸ்டிங்கா இல்லைன்னாலும், அதை அபிநய் படம்பிடிச்ச விதம்,செம க்யூட்…"
சீரியஸான விஷயம்னாலும், தாய்க்குலம், ஜ்ஜ்ஜாலியான நடையிலே எழுதறாங்கோ.
தொடர்ந்து எழுதுங்கோ அம்மணீ
A trip down to the memory lane - Asif Meeran
தமிழ் இணையத்துக்கு வந்தது எப்படி என்பது முதற் கொண்டு தற்போதைய வலைப்பதிவு வாழ்க்கை வரை, சுருக்கமாக, அழகாக விளக்கும் ஆசீப் மீரானின் இடுகை. ['நினைவு நதியில் ஒரு பயணம்' கவிதத்தனமா தலைப்பு வெக்கற அளவுக்கு ஸ்கோப் இருக்கிற மேட்டரை வேஸ்ட் பண்ணிட்டீங்களே அண்ணாச்சீ ]
ஏப்ரல் 10, 2006
‘puthu’ Gilli, An Announcement
இங்கே வருகிற நண்பர்கள் அனைவரும், கில்லியில் எடுத்துப் போடப்படும் சுட்டிகளில் ஏதாவது ஒன்றோ இரண்டோ க்ளிக்-கத்தகுந்தவையாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் வருகிறார்களே தவிர, கில்லி கோஷ்டியின் சொந்தக் கதை சோகக்கதைகளைக் கேட்க அல்ல என்பது தெரியும். இருந்தாலும், சில முக்கியமான தருணங்களில், நின்று பேச வேண்டியதாகிறது..
தமிழ்ப் புத்தாண்டில் இருந்து புது கில்லி ( இருங்க, இருங்க..சுட்டியைச் சொடுக்க வேண்டாம்..இன்னும் வேலை முடியவில்லை).
வலைமுகவரியைத் தவிர வேற மாற்றங்கள் ஏதும் கிடையாது. சரி, புது இடத்துக்கு சென்ற பிறகாவது, கொஞ்சம் உருப்படியாக இருக்குமா? கிடையாது. உருப்படியான, சீரியஸான விஷயங்களைச் செய்வதற்கு அனேகம் பேர் இருக்கிறார்கள். கில்லி is for fun. இன்றைக்கு மாதிரியே, என்றைக்கும் இதே தரத்தில் தான் தொடர்ந்து இயங்கும்.
இறுதியாக, சென்ட்டி-யாக சில விஷயங்கள். [ இந்தப் பாட்டை கேட்டுக் கொண்டே வாசிக்கவும். ஒரு effect க்காக..]
கில்லியின் இற்றைப்படுத்தப் பட்ட தலைப்புக்களை, தன் முகப்புப் பக்கத்தில், இடம் பெறச் செய்து, அதன் மூலம், அதிகமான வாசகர்களை பெற்றுத் தருகின்றதோடு மட்டுமல்லாமல், புதிய கில்லிக்கு இலவசமாக இடம் தந்து உதவிய தேன்கூடு இணையத்தளத்துக்கு முதல் நன்றி.
ஒரு டிசம்பர் மாத இரவில், விளையாட்டாய் மனதில் தோன்றிய எண்ணம், பாலாஜியின் துணையுடன் செயல் வடிவம் பெற்று, சுமார் 600 சொச்சம் இடுகைகளுடன் இந்த இடத்தில் நிற்கிறது. இத்தனை நாள் இந்த கில்லி ஆட்டம் ஓரளவுக்காவது சிறப்பாக நடந்தது என்று யாராவது நினைத்தால், அதற்கு கில்லி கோஷ்டி மட்டும் பொறுப்பல்ல. பிறருக்கு அதிகமாகத் தெரியாமல் ஆதரவும் உதவியும் தரும் நண்பர்களும் காரணம். அவர்களுக்கு நன்றி.
தவிர, அவ்வப்போது கில்லி பற்றி, தத்தமது பதிவுகளில் நல்லவிதமாக எழுதி, இமேஜை உயர்த்தி விடும் வலைப்பதிவு நண்பர்களுக்கும் பரிந்துரைகளை அனுப்பிவைக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
தங்கள் பதிவுகளின் சைட் பாரில் நிரந்தரமாக இடம் தந்திருக்கும் மூக்கு சுந்தர் , Kaps , பிரேமலதா , ராமானுஜம் , சித்தார்த் , சன்னாசி , செந்தில் (jackofall), வித்யா , முகுந்தன் , ப்ரதிப் , ஷ்யாம் சுந்தர் , சந்துரு , ஆனந்த் , தமிழன் , ஸ்ரீகாந்த் மீனாக்ஷி போன்ற நண்பர்களுக்கும் நன்றி.
நியாயமாக, இவர்கள் அனைவருக்கும், backlink கொடுப்பதுதான் இணையமரபு, இருந்தாலும், கில்லியின் 'கொளுகை' அதற்கு இடம் தராது என்பதால், இங்கே குறிப்பிட வேண்டியதாகிறது. தப்பா நினைச்சுக்க வேண்டாம்.
கடந்த சில நாட்களாக ஒழைச்சு ஒழைச்சு, ரொம்ப அசதி.. ஆகவே அடுத்த இருபத்து நான்கு மணிநேரத்துக்கு no updates. நாளை வழக்கமான நிகழ்ச்சிகள், வழக்கம் போலவே தொடரும், தமிழ் புத்தாண்டு வரை இங்கே, அதற்குப் பிறகு அங்கே
பிரகாஷ்
Kasi in FM Rainbow
காசி, ரெயின்போ பண்பலை அலைவரிசையில், தமிழ் இணையம் குறித்து, ஒரு தொடர் நிகழ்ச்சி அளித்து வருகிறார். இதைக் குறித்து காசி..
தமிழ் இணையத்தில், குறிப்பாக வலைப்பதிவுகள் மட்டத்தில் நிகழ்ந்துவரும் முன்னேற்றங்கள் பற்றி இணையத்துக்கு வெளியே இயங்கும் ஊடகங்களில் அதிகம் தெரிவதில்லை. இயன்ற அளவு அத்தகைய ஊடங்ககளில் இந்த செய்திகள் வரச்செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் சில முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். அவற்றில் ஒன்று வானொலி மூலம் சுருக்கமாக சில செய்திகளை சொல்லுவது. அகில இந்திய வானொலியின் கோவை நிலைய இயக்குநர் கலைமாமணி முனைவர் சேயோன் அவர்களுடன் இதுபற்றி அளவளாவியபோது இதற்கு ஒரு வழிகிடைத்தது. அதன்மூலம் வாராவாரம் கோவையிலிருந்து ஒலிபரப்பாகும் ரெயின்போ எஃப்.எம். மூலமாக ஒரு உரையாடல் வடிவத்தில் சில தகவல்களை பரிமாறிக்கொள்ள இருக்கிறோம்.
என்கிறார்..
அவ்வாறு ஒலிப்பதிவு செய்யப்பட்ட கோப்பு, புதிதாக ஆரம்பிக்கப்ட அவரது வலைப்பதிவில் கிடைக்கும்.
கேளுங்கள்.
Legalised Loving Period…
….என்றால் என்ன தெரியுமா? நிச்சயதார்த்தத்துக்கும், திருமணத்துக்கும் இடைப்பட காலம். மீனாக்ஸ் மாதிரி ரொமாண்டிக்கான ஆளை பார்ப்பது சிரமம். வருங்கால மனைவியைச் சந்திக்கப் போய் வந்தவர் காதிலே, ' மாங்குயிலே பூங்குயிலே' பாட்டு ஒலித்துக் கொண்டே இருக்கிறதாம்.
இருக்கும்வே
பின்னால பார்க்கத்தானே போறோம், வேற என்னல்லாம் பாட்டு கேக்கப்போவுதுன்னு..
Digital Cinema - UthayaKumar
டிஜிடல் திரைப்படத்தின் நுட்பங்களை எளிமையாக விளக்குகிறார் உதயகுமார் இங்கே..
ஏப்ரல் 9, 2006
Web 2.0, A Different Story - Business Pundit
Web 2.0 ஒழிக…
அய்யோ, நான் சொல்லலை… Robet May சொல்றார்..
"….I get a little aggravated when somebody launches yet another social networking site or whatever other Web2.0 idea they have that has no way of making money yet gets $5million in VC funding primarily from the hope that Google will buy them someday.
Many of these sites don't create any value the way most new companies do. They siphon off attention and make people less focused. Many of these sites aren't making people more productive, they are making people waste more time. Their value is that they entertain. How do I know that? Because I was caught up in it. I was on these sites multiple times a day for months, afraid I would miss something cool. Only when I realized how shallow my thinking had become and how much I had lost my ability to focus deeply did I begin to cut back and ignore them. I don't need to be in touch with everyone, all the time. I don't need to see what they are posting and saying and tagging and podcasting. I need to better myself, not entertain myself….."
இவர் சொல்றது நிஜமா? யாராச்சும் தெரிஞ்சவங்க சொல்லுங்களேம்ப்பா..
Pleasure Unit Theory - Scott Adams
Scott Adams தெரியுமில்லையா? அதாங்க, Dilbert கார்ட்டூன் போடுவாரே, அவர் தன்னோட வலைப்பதிவிலே, Pleasure Unit Theory என்றால் என்ன என்று விளக்குகிறார்
My theory explains all the following:
- Why poor people are fatter than rich people.
- Why people with crappy lives do drugs that are sure to be destructive in the long run.
- Why you are reading this blog instead of working
அவசியம் தெரிஞ்சுக்கணும்னா , நீங்களே போய் பார்த்துக்கங்க..
Era.Murukan from Edinburg
விமர்சகர்கள் கிருஷ்ண, குப்த நாயர்கள், மலையாள இசையமைப்பாளர் தேவராஜன் ( திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே.. நினைவிருக்கிறதா? ), அற்புதமான நடிகர் எம்.எஸ்.திருப்பூணித்துறா போன்றோரின் மரணத்துக்கான இரங்கல் குறிப்புகள், எடின்பரோ ராயல் லைசியம் தியேட்டரில் பார்த்த நாடகத்தின் விமர்சனம் ஆகியவற்றுடன் இரா.முருகனின் நெடுங்குறிப்பு..
கதேயின் நாடக நாயகன் டாக்டர் பாஸ்ட் வானளாவிய அதிகாரம் கிடைக்க ஏங்குகிறான். உலகத்தின் சகலமான இன்பங்களை அனுபவிக்க ஆசைப்படுகிறான். கேட்டதைத் தருகிறேன் என்று முன்வருகிறான் மெபிஸ்டபிலிஸ் என்ற பெயரில் வரும் சாத்தான். ஒரே ஒரு நிபந்தனை. பாஸ்ட் சாத்தானுக்குத் தன் ஆன்மாவை ஒப்புத்தரவேண்டும். எந்த ஒரு இன்பத்தை அனுபவிக்கும்போது அதில் அமிழ்ந்து வெளியேறி அடுத்த இன்ப அனுபவத்துக்கு வர முடியாமல் போகிறதோ, அப்போது பாஸ்ட் சாத்தானுக்கு அடிமையாகி விடுவான். ஏற்றுக்கொண்டு உடன்படிக்கையில் கையெழுத்துப் போட்டுத்தரும் பாஸ்ட்டும், அவன் கூடவே மெபிஸ்டபிலிஸும் போகிற வெளி, உள் பயணங்களின் ஒழுங்கமைவு ஜாக்கிரதையாகக் குலைக்கப்பட்ட தொகுப்பு தான் ‘பாஸ்ட்’ நாடகம்.
Welcome Back Era.mu
