கில்லி – Gilli

ஜனவரி 31, 2006

Citizen Kane – Sidharth

Filed under: சினிமா விமர்சனம், பொது — prakash @ 12:26 பிப

கில்லியில் இடப்படும் எந்தப் பதிவையும் ‘brilliant post’ என்று வர்ணிப்பதில்லை என்று சபதம் ( ஏன் எதுக்குன்னு விளக்கம் கேட்கப்டாது 🙂 ) செய்திருந்தேன். சித்தார்த்தின் இந்தப் பதிவு ஒரு விதிவிலக்கு

Of Birthdays & Calendars – Priya

தமிழர்களுக்கு வருஷத்திலே இரண்டு முறை பிறந்த நாள் வரும். ஒரு ஆங்கில தேதியின் படி. மற்றொன்று நட்சத்திரத்தின் படி. ப்ரியாவின் பிறந்த நாளும் அப்படியே

ஜனவரி 30, 2006

What’s up Da? – David

Filed under: பொது, வீடியோ — Snapjudge @ 9:22 பிப

பல்பொருள் அங்காடியில் இளைஞர்கள். சுரேஷ்  கண்ணனுக்கு ரத்தக்கொதிப்பை ஏற்றும் ஆடைகளுடன் இளைஞிகள். அனுசரனையாக விசாரிக்கும் பாட்டி. பெருசுக்கு உரிய மரியாதை கொடுக்கிறார்களா? பாக்கியராஜ் சமாச்சாரம் எல்லாம் எப்படி உள்ளே நுழைக்கிறார்கள் என்பதை கூகிள் திரையில் காண அழைக்கிறார்.

வீடியோவை நேரடியாகக் காண…

Mylapore story : Tilo

எந்த டவுன் போனாலும் மைலாப்பூர் போல் வருமா 😉 ஊர் பெருமையை எடுத்து வைக்கிறார் திலோத்தமா. சமீபத்தில் தெப்பக்குளத்தை சுற்றி நடந்த மயிலை விழாவை வெங்கட்ரமணன் நம்பிராஜன் சுவைக்கிறார்.

இந்த வருடம் தெப்பம் உண்டா?

Quiz – Gaurav

Filed under: ஆங்கிலப் பதிவு, பொது — Snapjudge @ 5:05 பிப

கூகிள் இல்லாவிட்டால் முக்கால் அறிவு இல்லை என்னும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறோம். தேடுபொறி இல்லாமல், மூளையைத் துழாவ அழைக்கிறார். எவ்வளவு விடை உங்களால் சொல்ல முடிந்தது?

Prof. George L Hart – Venkat

Filed under: இலக்கியம், நிகழ்வுகள் — prakash @ 4:23 பிப

சுந்தர.ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர் வரிசையில், பேரா.ஜார்ஜ் ஹார்ட், இந்த ஆண்டின் ‘இயல்’ விருது பெறுகிறார். அது குறித்த வெங்கட்டின் பதிவு.

Thirumavalavan Speeches

Filed under: சமூகம், புத்தகங்கள், பொது — Snapjudge @ 3:04 பிப

ஓவியர் புகழேந்தியின் நூலான “அகமும் முகமும்” வெளியீட்டு விழாவில் ‘விடுதலை சிறுத்தைகள்’ தலைவர் தொல். திருமாவளவன் பேச்சைக் கேட்கலாம்.

Kalanidhi Gunasingham – Parasakthi Sundaralingam

கலாநிதி முருகர் குணசிங்கத்தின் இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள் (அனைத்துலக தேடல்) குறித்த வாசக அனுபவம் + அறிமுகம்.

இலங்கைத் தமிழர் வரலாறு பற்றி முழுமையானதொரு நூலை உருவாக்குவதில் எனது பங்களிப்பாக இது போன்ற புத்தகத்தை ஆய்வுகளின் அடிப்படையில் எழுதவேண்டும் என்ற எண்ணம் கடந்த முப்பது ஆண்டுகளாகவே என்னுள் இருந்தது.

Azhagi – Chameleon

Filed under: சினிமா விமர்சனம், பொது — Snapjudge @ 2:52 பிப

முதல் கதை, முதல் நாவல் என்பது போல் தங்கர் பச்சானின் முதன்முதலாக இயக்குநராகியது ‘அழகி’. முதல் காதலைப் பற்றி மட்டும் அல்லாமல் பிற உளவியல் ரீதியாக அலசுகிறார்.

மனிதர்களை மூன்று வகையாக மனவியலில் பிரிப்பர்.
1) தொடுப்பவர் (சண்டைக்கு வலிப்பவர்),
2) மீட்பர் (காப்பாத்தக் குரல் கொடுப்பவர்),
3) பலியாகுபவர்( அடிபடுபவர்) எனலாம்.
இந்த மூன்று வேஷங்களும் நாம் நம் வாழ்வில் பிறந்ததிலிருந்தே மாற்றி மாற்றி ஏற்று நடிக்கும் ஒரு வேஷம்.

SriSri RaviShankar vs. Dr. Zakir Nayak

Filed under: நிகழ்வுகள், பொது — Snapjudge @ 2:48 பிப

Islamic Research Foundation இயக்குனரும், இஸ்லாமிய பிரச்சாரகருமான டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் “Art of Living” என்ற அமைப்பின் நிறுவனரும் இந்துமத விற்பன்னருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் பங்குகொண்ட கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சியின் தொகுப்புகள்.

Sony TV, Sun TV Web telecast

Filed under: டிவி, பொது — Snapjudge @ 2:44 பிப

இணையம் மூலமாக இலவசமாக சன் டிவியும் ஹிந்தி ரசிகர் என்றால் சோனி டிவியும் பார்க்கும் வழியையும் சொல்கிறார் ஜான் பாஸ்கோ.

Ramanathan, Kudos..

Filed under: இலக்கியம் — prakash @ 12:32 பிப

ஒண்ணும்  ஒண்ணும் ரெண்டு, ரெண்டும் ரெண்டும் நாலு ஒரு பதிவைப் போட்டாலே, பின்னூட்டம் எண்ணிக்கை நூத்தி சொச்சத்தைத் தொடும். 🙂 இப்ப இவர் லேசா, , இலக்கியம் பக்கம் லேசாத் தலையை சாய்க்கிறார்… என்ன ஏதுன்னு விளக்கமாக இங்கே..

வெறும் பில்டப்பா, இல்லே சீரியஸாக இறங்கியிருக்காரான்னு கூடிய சீக்கிரம் தெரியும்.

Implicit Association Test – Srikanth

Filed under: பொது — prakash @ 12:27 பிப

இது ஒரு சோதனை. இந்தச் சோதனை நடக்கும் இடத்துக்கு செல்ல மொத்தம் இருபது கிளிக்குகள் தேவைப்படும். வெகு சுவாரசியமானது. நான், அறிவியல், பெண்கள் என்ற சோதனையை மேற்கொண்டேன். results cannot be determined என்று வந்தது 🙂 ( ஸ்ரீகாந்த் வழியாக )

Book review – maalan

Filed under: நூல் விமர்சனம் — prakash @ 12:25 பிப

மணா எழுதி, உயிர்மை வெளியிட்ட நூல் குறித்த , மாலனின் உயிரோட்டமான புத்தக விமர்சனம் இங்கே.

ஜனவரி 27, 2006

OIG – Siddharth Venkatesh

Filed under: இலக்கியம், பொது, OIG — prakash @ 9:10 பிப

….இப்போ படிச்சிகிட்டு இருக்கற புத்தகம், எஸ்.ராமகிருஷ்ணனோட “உப பாண்டவம்”. கத மகாபாரத கதை தான். ஆனா ஒரே நேர் கோட்டுல சொல்லல. கதைய அக்கு அக்கா பிறிச்சிட்டாரு. மகாபாரதத்துல நடக்கற பிறப்புக்கள், உருமாற்றங்கள், கோபங்கள், பழி உணர்ச்சின்னு தனி தனியா எழுதரார். ஆனா முழு கதையும் நம்ம மனசுல உருவாகுது. ரொம்ப வித்தியாசமான நாவல். அதே சமயத்துல ரொம்ப சுவாரஸ்யமானதும் கூட. இத படிச்சப்போ, நான் படிச்ச இன்னொரு மகாபாரதத்த மையமா வெச்சு எழுதப்பட்ட நாவல் நினைவுக்கு வந்தது. அது, சஷி தரூர் எழுதின “The Great Indian Novel”….

மேலே படிக்க..

Older Posts »

Create a free website or blog at WordPress.com.