கில்லி – Gilli

ஜனவரி 3, 2006

SheWrite – Documentary

Filed under: ஆங்கிலப் பதிவு, இலக்கியம் — prakash @ 4:27 பிப

shewrite – குட்டிரேவதி, மாலதி மைத்ரி, சுகிர்தராணி, சல்மா ஆகிய கவிதாயினிகளைப் பற்றிய ஆவணப்படம். தியோடர் பாஸ்கரனின் விளாசல் இங்கே. [ திலோத்தமா வழியாக]

Best Translator in Tamil

Filed under: இலக்கியம், புத்தகங்கள் — Snapjudge @ 3:08 பிப

வழக்கம் போல் விருதுகள் பல பெறபட்டாலும், 2005-இன் worthy award-ஆக அமரர் சரஸ்வதி ராம்னாத் அறக்கட்டளையும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து வழங்கும் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது குறிஞ்சிவேலனுக்குக் கொடுக்கப்பட்டது. ‘திசை எட்டும்’ என்னும் மொழிபெயர்ப்பிற்கான காலாண்டிதழை நடத்திவருபவரும், சாஹித்ய அகாதெமி விருது பெற்றவருமான குறிஞ்சிவேலன் “கிட்டத்தட்ட 14 வருடங்கள் மலையாளத்துக்குப் பிந்திய நிலையில் இருக்கிறது தமிழ்” என்கிறார். (பத்ரி)

செய்தி: திண்ணை

A day in Edinburgh

Filed under: பொது — prakash @ 10:15 முப

ஒரு நாள் எடின்பரோ ரயிலில் எத்தனை கூத்து… இரா.முருகன் சொல்கிறார்..

வாங்க வாங்க என்று அவர் அன்போடு வரவேற்க, அன்னிய தேசத்தில், அர்த்த ராத்திரியில் அடையாளம் காணப்பட்டதில், குளிருக்கு இதமான சந்தோஷம். நன்றி சொன்னேன்.

எப்படி சார் என் பெயரைக் கண்டு பிடிச்சீங்க என்ற அசட்டுத்தனமான கேள்வி வாய் வரைக்கும் வந்ததை அடக்கிக் கொள்ள வேண்டிப் போனது. ஈசான மூலை இருட்டு ரயிலைத் தேடி மூட்டை முடிச்சோடு வருகிற ஒற்றைக் கறுப்பன் மேட்டிமைக்குரிய நார்ட்டன் துரையாகவா இருக்க முடியும்? டிடீஇ கையில் பிடித்த கிளிப் செருகிய அட்டையில் கொட்டை எழுத்தில் எழுதின திருநாமம் இவனுக்கு அல்லாது வேறு யாருக்குப் பொருந்தும்?….

முழு கட்டுரையும் இங்கே

carnatic music review

Filed under: இசை — prakash @ 8:31 முப

ஜெயஸ்ரீயின் கேள்விக்கு லலிதா ராமின் சுவாரசியமான விளக்கம் இங்கே…. கலக்கு ராசா கலக்கு….

Mahabharatha – A Parody

Filed under: ஆங்கிலப் பதிவு, நக்கல் — prakash @ 5:19 முப

மஹாபாரதத்தை இப்படி கூட கிண்டலடிக்க முடியுமோ? முன்னுரை, 1, 2, 3, 4, 5. செமை நக்கல்.. சில பேரோட, கோபத்தைத் தூண்டியிருக்குன்னாலும், வெறும் நகைச்சுவை என்கிற கண்ணோட்டத்தில் படித்தால் ரசிக்க முடியும்னு நினைக்கிறேன்.

Iruvar – Guna

சில திரைப்படங்களைப் பற்றி எப்போது வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருக்கலாம். movie lane, குணா திரைப்படம் பற்றியும், பரத்வாஜ் ரங்கன், இருவர் திரைப்படம் பற்றியும் விரிவாக அலசுகிறார்கள்.

The Hindu – Mahinda Rajapakse

Filed under: அரசியல் — prakash @ 4:58 முப

ஈழ அரசியலும், ஹிந்துவின் நிலைப்பாடும் குறித்த தமிழ்சசியின் விரிவான பதிவு. பின்னூட்டங்கள் புதிய தகவல்களைச் சொல்கின்றன

Ranimuththu Calendar

ராணி முத்து காலண்டருக்கு இத்தனை செண்டிமெண்டா? ஒண்ணுமே பிரியலே ஒலகத்துலே… :-). நேஹா எழுதியிருக்க, ஆட்டோகிரா·ப்தனமான பதிவைப் படிச்சா வெளங்கும்.. ஆனாலும் நல்லாய்த்தானிருக்கு 🙂

South Indian Recipies

Filed under: ஆங்கிலப் பதிவு, மடப்பள்ளி — prakash @ 4:21 முப

மாலாடு செய்யத் தெரியுமா? கோமதி மாமியாண்டே கேளுங்கோ..மாலாடு மட்டுமா? தயிர்வடை, ரவா இட்லி, தவலை அடை… நாக்கு ஊறுதே…படிக்கறப்பவே பசிக்குதுங்க அம்மணி

Any Indian.com – New Releases

Filed under: புத்தகங்கள் — prakash @ 4:17 முப

எனி இந்தியன்.டாட்காமின் புதிய முயற்சிகள் குறித்த பி.கே.சிவக்குமாரின் விளக்கமான கட்டுரை. அவருடைய புதிய நூல் வெளியாகிறது..வாழ்த்துக்கள்.

Color of Paradise – Iranian Film

Filed under: சினிமா விமர்சனம் — prakash @ 4:06 முப

சித்தார்த் வெங்கடேசன், தான் பார்த்த இரானிய மொழிப் படம் பற்றிய அனுபவத்தை எழுதுகிறார். பரவாயில்லை… நல்ல மொழிநடை..

Collaborative blog on TN Elections – 2006

Filed under: அரசியல் — prakash @ 3:59 முப

நாராயணும், இன்னும் சிலரும் வருகிற தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் பற்றி அலசிக் பிழிந்து காயப் போட இருக்கிறார்கள்.பார்க்கலாம்:-)

Create a free website or blog at WordPress.com.