கில்லி – Gilli

ஜனவரி 5, 2006

Equal Opportunity vs Reservation

Filed under: ஆங்கிலப் பதிவு, சமூகம் — Snapjudge @ 10:41 பிப

ஆதாம், ஏவாள் காலத்தில் இருந்து இட ஒதுக்கீடு தேவையா அல்லது கிரியா ஊக்கி போதுமா என்னும் விவாதம் தொடர்கிறது. ஆங்கிலப் பதிவுகளில் முக்கிய்மானதை சென் ஸ்பாட் தந்திருக்கிறார்:

Kilpauk & Vadapalani – Sathyam Movieplex

Filed under: சென்னை, நிகழ்வுகள் — Snapjudge @ 10:16 பிப

பள்ளித் தலமனைத்தும் தியேட்டர் கட்டுவோம் என்று சத்யம் சொல்கிறார்கள். அமெரிக்க வெள்ளித்திரைகளில் படம் பார்ப்பதற்கே இருநூறு ரூபாய்தான் (நாலு வெள்ளிகள்) ஆகிறது. அமிஞ்சிகரையில் பார்ப்பதற்கு ஐநூறு ரூபாயா என்று சாம்பார் மாஃபியா கவலை கொள்கிறார்.

pEr marandhu pOchchE…

Filed under: சொந்தக் கதை — prakash @ 7:19 பிப

ஒரு விசேஷ வீட்டிலே தெரிந்தவர் யாரையாச்சும் நீண்ட நாள் கழிச்சு பார்த்தால், சட்டுன்னு பெயர் நினைவுக்கு வராமல் போவது கொஞ்சம் பேஜாரான விஷயம். பெயர் தெரியாமலேயே, பேசி சமாளித்து கழட்டிக் கொண்டு, முதல் பந்திக்கு ஓட திறமை வேணும். ஷ்ரேயா மாதிரி…இந்த இக்கட்டை, இலங்கைத் தமிழிலே, கதைக்கறது வெகு அழகு… அவங்க வலைப்பதிவின் bye-line மாதிரியே…என்ன தெரியுமா? ‘ சின்ன சின்ன அழகான தருணங்கள்’.. poetic…

Interview Introspections for Indians

Filed under: சொந்தக் கதை, டிப்ஸ் — Snapjudge @ 3:45 பிப

இந்தியாவில் நேர்காணலுக்கு செல்வது தனிக்கலை. அனுபவம்தான் சிறந்த பாடம் என்றாலும், இண்டெர்வியூ எடுப்பவரின் அட்வைஸ்களைப் படித்து வைத்துக் கொள்வதும் முக்கியம்.

Uyirmai function

உயிர்மை பதிப்பகம், இரு பெரும் புத்தக வெளியீட்டு விழாக்களை அடுத்தடுத்த நாட்களில் நடத்த இருக்கிறது. உயிர்மை பதிப்பகத்தின் சார்பாக, மனுஷ்யபுத்திரனின் பதிவு. தேசிகனும் மேலதிக தகவல்களைத் தருகிறார்

The Hindu – udniH ehT

Filed under: ஆங்கிலப் பதிவு — prakash @ 3:16 பிப

தி ஹிந்து, ‘கீழே இறங்கி விட்டது’ என்பதில், ரவி வெங்கடேசனுக்கு கொஞ்சம் வருத்தம்

ilavu kAththa kiLi

Filed under: பொது — prakash @ 3:14 பிப

நெஜத்தைச் சொல்லுங்க.. உங்களிலே எத்தனை பேருக்கு ‘இலவு காத்த கிளி’ ங்கற சொற்றொடருக்கு அர்த்தமும், மூலமும் தெரியும்? வசந்தன் சொல்றார் பாருங்க

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.