தியாகராஜ ஆராதனை பற்றிய, சமந்த் சுப்பிரமணியத்தின், விரிவான, நீளமான பதிவு.
பிப்ரவரி 3, 2006
Rang De Basanthi
பார்க்கலாம் என்கிறார் மூக்குக்கண்ணாடி. ‘சே’ என்று வெறுத்துவிட்டார் ‘மே மாதம்‘ இன்ன பிற புகழ் ஆனந்த். எதிர்பார்ப்பில்லாமல் செல்லுங்கள் என்கிறார் தடாகம்.
Google, China, US Privacy – Srusal
சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்தபிறகு ‘எவர் செய்தார்’ என்று கண்டுபிடிப்பதை விட ‘எவர் செய்யக்கூடும்’ என்று முன்பே அறிவது வி.சி. கதைக்களம். யார் எல்லாம் குழந்தைகளின் Porn-ஐ தேடினார்கள் என்று கூகிள் போட்டுக் கொடுக்கலாமா? கூடாதா?
Muhammad Cartoons – Ravi Srinivas
கேலிச்சித்திரம் என்பது பார்ப்பவரின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமல்லாமல் யோசிக்கவும் வைக்க வேண்டும். ரசனை, சட்டம், பாரம்பரியம், தேர்வு, கொள்கை என்று பல்முனைகளில் இஸ்லாமியர்களின் துணுக்குறலை அணுகுகிறார் ரவி.
Science & Tech. 2005 – Arulselvan
2005இல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் காணப்பட்ட சில முக்கியப் போக்குகள், கண்டுபிடிப்புகள் மற்றும் மாறுதல்களை சுருக்கமாக வழங்குகிறார் அருள்.
Tamil FireFox – Yagna
தமிழில் ஃபயர்பாக்ஸ் வெளியாவதற்கு துரும்பைக் கிள்ளிப் போட ஆசையா? எளிமையான உதவிகளை கை கொடுக்க சொல்கிறார் யக்ஞா.
Tailgating the NYC Violinist – Kalvettu
நியு யார்க் வாசிகள் ஆடையில் காட்டும் அக்கறை, குழப்பியடிக்கும் சப்வேக்கள், தெருவோர வியாபாரங்கள், அதீத கனிவில்லாமல் ஆனால் மரியாதையுடன் சட்டு புட்டென்று சொல்ல வேண்டியதை மட்டும் பேசிவிட்டு நகரும் மெட்ரோ மக்கள், என்று நியு யார்க் மென்மையாக வசீகரிக்கும். ஆடம்பரமில்லாத வயலினிஸ்ட்டை ஆங்காங்கே பார்த்த கதையில் ஆரம்பிக்கிறார் பலூன் மாமா.
Success Story of Vikatan
ஆனந்த விகடன் என்ற ஒரே பத்திரிக்கையுடன் துவங்கி, இப்போது, இப்போது பெண்கள், வணிகம், அரசியல், குழந்தைகள் ஆகியோருக்கென்று தனித்தனி பத்திரிக்கைகளுடன் ஒரு மீடியா சக்கரவர்தியாக விளங்கும் விகடன் குழுமத்தின் அசகாய வளர்ச்சி குறித்து வெங்கடேஷின் பதிவு.
Chepauk Silambu – G Ragavan
சென்னை கடற்கரையில் கண்ணகி வருவதற்கு அனுமதியில்லை. சேப்பாக்கம் கிரிக்கெட் க்ளப்பில் கோ ராகவன் நுழைய அனுமதி மறுப்பு. நுழைந்த பின் என்ன நடந்தது?