கில்லி – Gilli

பிப்ரவரி 26, 2006

Female Sexuality – Megha Krishnan

மாதவிடாய் என்கிற இயற்கையான விஷயத்துக்கும், மத நம்பிக்கைகளுக்கும் தொடர்பு இருக்கிறதா? இவற்றை சடங்கு சம்பிரதாயங்களில் அடக்குபவர்களை எல்லாம் போட்டு கிழிக்கிறார் மேகா

“….This happens in a lot of Hindu households, where girls are ‘secluded’ during menstruation for the laughable reason that they are ‘unclean’. Because of this so called uncleanliness, girls are prohibited from entering temples, lighting the ritual diyas, taking part in festivites and in some extreme cases they are not allowed to talk because their voices in that ‘contaminated’ state brings so called bad luck in the household’s proceedings…”

மேலே வாசிக்க..

koththu parotta – Narain

ரொம்ப நாள் கழிச்சி…

Salma – Krish Chandru

Filed under: இலக்கியம் — prakash @ 6:32 பிப

சல்மாவின் கவிதைகள் பற்றி கிருஷ் சந்துருவின் பார்வை. நல்ல பதிவு..

[ அவர் தன் வலைப்பதிவை வாசிக்க வருபவர்களுக்கு ஒரு பூதக்கண்ணாடி தரவேண்டும் இல்லை என்றால் வலைப்பதிவின் எழுத்துருவை பெரிது படுத்த வேண்டும். வசதி எப்படி என்று அவர்கிட்டேயே போய் கேட்டுக்கலாம் 🙂 ]

Your Autograph Please…

Filed under: சமூகம், டிவி, பொது — prakash @ 2:43 பிப

உங்க வீட்டுல எல்லாரும் மெகா சீரியல் பார்த்துட்டு மூக்கை சிந்திகிட்டே இருக்காங்களா?

மெட்டி ஒலி வர சமயத்திலே பவர் கட் ஆனா, வீட்டு அம்மணிங்களோட ரத்தக் கொதிப்பு அதிகமாகுதா?

தமிழ்நாட்டு தாய்க்குலங்கள் எல்லாம் இப்படி அழுது வடிஞ்சுகிட்டேதான் இருப்பாங்களான்னு மத்தவங்க கிண்டல் பண்றாங்களா?

அப்படின்னா இதைப் படிங்க… பிறகு மறக்காம இங்கே போய் உங்க ஆட்டோகிரா·ப் போடுங்க…உங்களுக்கு கோடி புண்ணியம்

Blank Noise Project

Filed under: சமூகம், நிகழ்வுகள், பொது — prakash @ 2:32 பிப

பெண் குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் வன்முறை, பொதுவிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் இவற்றுக்குக் குரல் கொடுக்க, blank noise project என்றொரு கூட்டு வலைப்பதிவு இருக்கிறது. அவ்விடத்தில் வருகிற மார்ச் ஏழாம் தேதி, street harassment குறித்த சிறப்பு விவாதம், கலந்துரையாடல் நடக்க இருக்கிறது. கலந்து கொள்ள விருப்பமிருப்பவர்கள், இந்த இடுகையைப் படிக்கவும். ( via )

என்னை பாதித்த ஒரு பழைய பதிவு இங்கே

Sivaaji Preview

Filed under: ஆங்கிலப் பதிவு, வீடியோ, superstar — Snapjudge @ 2:28 முப

Not really… ஆனால் ‘படம்’ நல்லாவே வந்திருக்கு 🙂

M. Krishnan Nair passes away

முப்பத்தியாறு வருடங்களாக மாதந்தவறாமல் ‘வார பலம்’ எழுதியவர். நட்புகளுக்காக எவ்வித சமரசமும் செய்யாமல் இலக்கிய விமர்சங்களை சராசரி மனிதனுக்கும் கொண்டு சென்றவர். மனீஷின் அஞ்சலிகள். (செய்தி சொன்னவர்)

தமிழில் வாரபலன் கொடுக்கும் இரா முருகரிடமிருந்து வேம்பநாட்டுக் காயலில் விரிவான பதிவு வரும்!?

Individuals for Voluntary Activities – Desikan

Filed under: சமூகம், டிப்ஸ், பொது — Snapjudge @ 1:07 முப

நம்மில் பலர் சமூக சேவை என்றால் அமெரிக்காவில் இருந்து $100 அல்லது உள்ளூர் ரூ1000/= கொடுத்து ரசீது வாங்கி வருமான வரி குறைப்புக்கு(80G) உபயோகப்படுத்துவது; CRY கார்ட் வாங்குவது; அலுவலகத்தில் வைத்திருக்கும் அட்டைபெட்டியில் உபயோகபடுத்திய துணிமணிகளை போடுவது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். களத்தில் இறங்கி வேலை செய்தால்தான் அது எவ்வளவு கஷ்டமான ஆனந்தமான செயல் என்று தெரியும். IVA பற்றி இந்த பதிவில் உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சிகொள்கிறேன்.

எளிமையான செயல்களை பயனுளள வகையில் தொண்டாக்க வழிமுறைகளை சொல்கிறார் தேசிகன்.

 

Foreign Experiences

அமெரிக்காவில் அன்னியரைக் கண்டால் ‘Hi!’ மட்டும் துரிதகதியில் உதிர்த்துவிட்டு, ஓடியே போகுமாறு அறிவுறுத்துவது ஏன் என்பதை அனுபவம் மூலமாக விளக்கியிருக்கிறார் சிமுலேஷன்.

இவரின் ஜப்பானிய அனுபவங்களும் மறதியும் ‘இது மட்டும் ஃபாரினா இருந்தா…’ என்று தொடங்கிப் படுத்துபவர்களை கவனிக்கிறது.

Stereotypes – Peyarili

உடலைமைப்பைக் கொண்டே ஆணையும் பெண்ணையும் வகுக்கும் விளம்பரங்களின் எடுத்துக்காட்டுகளைக் கொடுக்கிறார்.

நான் நாளாந்தம் பயணம் செய்யும் வண்டியிலே காணும் விளம்பரங்கள். ஆண் எப்படி பெண் எப்படியாக இருக்கவேண்டுமென வகுத்து வழி தருகின்றார்கள்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.