கில்லி – Gilli

மார்ச் 21, 2006

Tamil Proverbs – Maravandu Ganesh

Filed under: தமிழ் — prakash @ 7:02 பிப

தமிழில் புழங்கும் பழமொழிகள் பற்றிய விரிவான பதிவு

நெல்லை மாவட்டத்தில் பழமொழியைச் சொலவடை என்றும் , பழைய ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவகதை என்றும் சேலத்தில் சொலவந்தரம் என்றும் கோவையில் ஒப்புத் தட்டம் என்றும் அழைக்கிறார்கள்.ஆங்கிலத்தில் பழமொழியானது Proverb என்றும் old sayings என்றும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலான தமிழ்ப் பழமொழிகள் எதுகை மோனையிலும் , முரண்தொடையிலும் எழுதப்பட்டுள்ளன.இதுவரை தமிழில் வெளிவந்த பழமொழித் தொகுப்பு நூல்களை கீழே கொடுத்துள்ளேன் , இவற்றுள் கி.வா.ஜெகந்நாதன் அவர்கள்எழுதிய புத்தகத்தில் சுமார் 20000 பழமொழிகளுக்கு மேல் தொகுக்கப்பட்டுள்ளன.

மேலும்….

பழமொழிகளின் பட்டியலையும், பழமொழிகள் தொடர்பான நூல்களின் வரிசையையும் அளிக்கிறார். உருப்படியான பதிவு.

Assistant Directors – Bala ( Karthik)

நன்றாக ஒடிக் கொண்டிருக்கும் சித்திரம் பேசுதடி படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்த ( பாதி படம் வரை ) சுதீர், பாலா ( கார்த்திக்) இன் நண்பர். படத்தைப் பற்றிய கருத்துக்களுடன், உதவி இயக்குனர்களின் வாழ்க்கையையும் கோடிட்டுக் காண்பிக்கிறார் இங்கே

[பரிந்துரை : Kaps]

V for Vendatta

Filed under: சினிமா விமர்சனம் — prakash @ 3:08 பிப

யக்ஞா புடிக்கலைன்னு சொன்னாலும்.. திவ்யாவுக்குப் புடிச்சிருக்காம்.. Anti, ஒரே வரியிலே முடிச்சுட்டார்…

You are invited…

Filed under: இலக்கியம், நிகழ்வுகள் — prakash @ 2:41 பிப

சூறாவளிப்பயணமாக சென்னை வரவிருக்கும் பாஸ்டன் பாலாஜி, வருகிற ஞாயிறன்று, எழும்பூர் அபிராமி ஓட்டல் வளாகத்தில், ‘நவீன கலை இலக்கிய பரிமாற்றம்’ என்ற நிகழ்ச்சியில் ‘எனது வாசிப்பனுபவம்’ என்ற தலைப்பிலும், கவிஞர் திலகபாமா, ‘மாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்’ என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள். 

பாரதி இலக்கிய சங்கம் சிவகாசி சார்பாக, கவிஞர் திலகபாமா விடுக்கும் அழைப்பு இங்கே…

கில்லியும் அழைக்கிறது..

A database on Anectodes

Filed under: தேர்தல் 2006, நகைச்சுவை — prakash @ 2:26 பிப

தேர்தல் வந்துடுச்சு… மேடையிலே பேசுறவங்க, கட்டாயம் குட்டிக் கதைங்க சொல்லணும்.. சுரேஷ் ஒரு ஐடியா செஞ்சுருக்கார்…  Flash இலே இயங்கற மாதிரியான ஒரு நிரல்… கட்சிக் கொடியை தட்டினா, பொருத்தமான ஒரு குட்டிக்கதை தயாராகி நிற்கும்..

இங்கே போய், அவர் சொல்றதை செஞ்சுதான் பாருங்களேன்..

நம்மாளுங்களுக்கு ஐடியாவுக்கெல்லாம் பஞ்சமே இல்லை 🙂

கலக்கல்..

Bharathiyar – Muthu

Filed under: சொந்தக் கதை, தமிழ் — prakash @ 2:25 பிப

பாரதியாரின் கண்ணன் பாட்டு அதில் ஒன்று, பாரதியார் ஏன் இப்படிக் கொஞ்சமும் அர்த்தமில்லாமல் எழுதியிருக்கிறார், நாம் எழுதியிருந்தால் இதைக் கொஞ்சம் நன்றாய் எழுதியிருப்போமே என்று அந்தப் பன்னிரண்டு வயதில் நினைத்ததுண்டு, (யாரும் டென்சனாகிவிடாதீர்கள், சின்னப்பையன்தானே மன்னித்துவிட்டுவிடுங்கள் 🙂 ).

பாரதியாரும் நானும்…

kaNi or KaNiNi? – Iramaki

Filed under: தமிழ் — prakash @ 2:24 பிப

electricity ன்னா மின்சாரம். அப்ப, electric lamp ன்னா, மின்சாரவிளக்கு என்று சொல்வதில்லை.. மின்விளக்கு என்று தானே சொல்கிறோம்? அதே போல, கணிணி, கணிப்பொறி என்று இப்போது அழைப்பதை, முன்னொட்டு, பின்னொட்டு ( prefix , suffix) சேர்க்கும் போது, கணி என்று சுருக்குவதுதான் முறை என்பதை, விளக்குகிறார் இராம.கி..

computer simulation -கணிப்பொறிப் பாவனை
computer utility -கணிப்பொறிப் பயனமைப்பு
computer aided design -கணிப்பொறிவய வடிவமைப்பு
computerisation -கணிப்பொறிமயமாக்கல்
computer phobia -கணிப்பொறி அச்சம்

இந்தக் கூட்டுச் சொற்களில், “ப்பொறி” என்ற எழுத்துக்களை எடுத்துவிட்டுப் படியுங்கள்; உடனே, இந்தக் கூட்டுச் சொற்கள் சொல்வதற்கும் எளிதாக இருக்கும்; பொருளும் மாறு படாது. (நான் மேலே உள்ள சொற் தொகுதிகளில் கணிப்பொறி என்ற சொல்லிற்கு அப்புறம் அடுத்து வரும் சொற்களைப் பற்றி இங்கு முன்னிகை – comment – அளிக்கவில்லை.)

மேலும்…

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.