கில்லி – Gilli

ஏப்ரல் 6, 2006

Ilakkiya Peedam Vizha – RaayarKaapiKlub

Filed under: Announcements, நிகழ்வுகள் — Snapjudge @ 7:30 பிப

'இலக்கியப்பீடம்' மாத இதழ் வரும் ஞாயிறு (9 ஏப்ரல்.2006) அன்று காலை 9-30 மணிக்கு (கவனிக்க,காலை நேர நிகழ்ச்சி!) 2005 ஆம் ஆண்டுக்கான சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவை நடத்துகிறது.

இடம்: தேவநேயப் பாவாணர் நூலகக் கருத்தரங்குக் கூடம் (எல்.எல்.ஏ பில்டிங்க்ஸ், டி.வி.எஸ் அலுவலகம் எதிர்) அண்ணா சாலை, சென்னை .

தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு சிறுகதைகளைப் பற்றி ஆறு விமர்சகர்கள் பேசுகிறார்கள். எம்.ஆர். ரெங்கராஜனின் சிறுகதை 'முரண்' முதல் பரிசு பெறுகிறது.

Dans le Noir – Manian

Filed under: பொது, மடப்பள்ளி — Snapjudge @ 5:50 பிப

'சொக்கா சொக்கா சோறுண்டா' என்னும் பாட்டி காலத்துக் கதையில் மின்சாரம் இல்லாத அந்தக்காலத்தில் இருட்டில் உணவு உண்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துவார்கள். இவங்க இருட்டிலேயே சோறு போடறாங்களே…

Ki Veeramani Interview with Haajaa Kani & Anees

Filed under: அரசியல், தேர்தல் 2006, பேட்டி — Snapjudge @ 5:44 பிப

ஜெயலலிதா சீரமைத்ததாகக் கூறப்படும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தினால் முஸ்லிம்களின் வாழ்வு ஒளிரப் போகிறது என சிலர் கூறிக் கொண்டிருக்கும் வேளையில், இந்த ஆணையம் என்ன சொல்கிறது என்பது குறித்தத் தன்னுடைய கருத்துக்களை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேட்டியில் விவரிக்கிறார்.

Chennai Right To Information (CRTI) initiative

Filed under: ஆங்கிலப் பதிவு, சமூகம், பொது — prakash @ 5:25 பிப

ஒரு உருப்படியான வேலை. any volunteers?

வருகிறது நானோடெக்னாலஜி – அப்புடீன்னா?

Filed under: அறிவியல், நுட்பியல் — Venkat @ 2:44 பிப

இன்று அதிகாலை பிரகாஷிடமிருந்து இந்தச் சுட்டி வந்தது.

வெளிகண்ட நாதர் நானோடெக்னாலஜியால் என்னென்னவெல்லாம் நடக்கும் என்று பிரமிப்பூட்டுகிறார்.  ரத்தக்குழாயடைப்பைச் சுரண்டுவது,  கச்சாவிலிருந்து பெட்ரோலைப் பிரிப்பது முதல் சிம்ரனையும் ஜோதிகாவையும் இன்னும் பளிச் சென்று திரையில் பார்ப்பதுவரை இதில் சாத்தியம் என்று சோதிடம் சொல்கிறார்.

ஒரு சின்ன வேண்டுகோள்;  இப்படி வெற்றாக ஆரூடங்களை அடுக்கிக்கொண்டு போவதும் கூகிளில் இருந்து படம் சுட்டுப்போடுவதும் அறிவியலும் நுட்பமும் இல்லை.   இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகியிருக்கிறது (அல்லது அதற்கான துவக்கங்கள் எப்படி நடக்கின்றன) என்பதைப் பற்றியும் கொஞ்சம் எழுதவேண்டும்.  போகிற போக்கில் name-dropping சொல்லி படிப்பவர்களை மிரட்டுவது அந்தக் காலத்து ஆசாமிகள் பாணி் – sooo outdated.  அப்படி மிரண்டவர்கள் ஒருக்காலத்திலும் நானோடெக்கை புரிந்துகொள்ள முயற்சிக்க மாட்டார்கள்.     இந்தமாதிரி ஜக்கம்மா குறிசொல்பவற்களையும் பசித்த புலிகள் தின்னத் தொடங்கியிருக்கின்றன.   இன்றைக்குத் தேவை புரியவைப்பது அல்லது ஆர்வமூட்டுவது.  ரத்தக்குழாயில் அடைப்பு நீங்கப்போகிறது என்று சொல்லும்பொழுது கொஞ்சம் கொழுப்பு, அதைக் கரைக்கும் விதங்கள் போன்ற சமாச்சாரங்களையும் விரிவாகச் சொன்னால்தான் புண்ணியமாக இருக்கும்.

பாலக்கரை பாலகனின் ஆர்வத்திற்குப் பாராட்டு, ஆனால் அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டியது முக்கியம்.

அதெல்லாம் கிடக்கட்டும்; அறிவியல் சமாச்சாரத்தை எழுதும்பொழுது கிளுகிளுப்பு வேண்டுமென்றால் அதற்கு இப்பொழுது சிம்ரனையும் ஜோதிகாவையும் நம்பிப் பிரயோசனமில்லை;   இது அஸின் காலம்.

Four Films – Sam

கல்லூரியில் மூன்றாவது வருடம் படிக்கும் போது குரொசோவா பற்றிய அறிமுகம் கிடைத்தது. ஆனால் அவரது படைப்புகளைப் பார்க்கும் வாய்ப்பு ஐந்து வருடங்களுக்குப் பிறகுதான் கிடைத்தது. அமெரிக்கா வந்த பின் சினிமா பார்க்கும் ப்ழக்கம், தொட்டில் ப்ழக்கம் சுடுகாடு மட்டும் போல தொடர்ந்தது. சர்வதேச அளவில் பேசப்படும் திரைப்படங்களுக்கு என்று சில குணங்கள் இருக்கிறது. நம் கோலிவுட்காரர்கள் சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற வகையில் இதைப் பேசுகிறார்கள். இது எனக்குப் புரியவில்லை.இந்த முறை எனக்குப் பிடித்த நான்கு சர்வதேசப் படங்களைப் பற்றிப் பேசப் போகிறேன். 

My Mothers Castle, Mrs. Brown , White baloon , Waking Ned Devine ஆகிய நான்கு திரைப்படங்கள் பற்றிய சுருக்கமான, அழகான குறிப்புகள்.

MGR’s Filmography..

Filed under: வெள்ளித்திரை — prakash @ 11:41 முப

ஆசாத் பட்டியல் இட்டிருக்கும் எம்.ஜி.ஆர். படங்களில், எத்தனை படங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்?

Greater Fool Theory – Anand Sridharan

சென்செக்ஸ், அபாயகரமாக ஏறிக்கொண்டும் இறங்கிக் கொண்டும் இருப்பது குறித்தும், அனலிஸ்ட்டுகளின் அபத்தமான முடிவுகள் பற்றியும் ஆனந்த் ஸ்ரீதரன்

Forrester’s research on podcast ( Via NS Ramnath)

podcast ஐ எத்தனை பேர், எந்த விதமாக பயன்படுத்துகிறார்கள் என்று Forrester நிறுவனம் ஆராய்ச்சி மேற்கொண்டது. அந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட Charlene இன் வலைப்பதிவில் இருந்து  சில துளிகள்..

Our survey showed that only 1% of online households in North America regularly download and listen to podcasts. And when you include all of the people who are just interested or have used podcasts, they strongly favor listening to existing content like Internet radio or broadcast radio, not necessarily new content. (And for newspapers thinking about podcasting, putting print stories into audio format just ranked ahead of original content from bloggers) I think this has something to do with 1) original content just isn’t as well known; and 2) existing content benefits from users that simply want to time shift it. (Shameless plug: there’s lots of other demographic and measurement data about podcasting in the brief).

முழுதும் வாசிக்க… ( ராம்நாத் வழியாக )

How I work : Bill Gates ( Via Raji)

Filed under: ஆங்கிலப் பதிவு, நுட்பியல் — prakash @ 7:56 முப

"I get about 100 e-mails a day. We apply filtering to keep it to that level?e-mail comes straight to me from anyone I've ever corresponded with, anyone from Microsoft, Intel, HP, and all the other partner companies, and anyone I know. And I always see a write-up from my assistant of any other e-mail, from companies that aren't on my permission list or individuals I don't know. That way I know what people are praising us for, what they are complaining about, and what they are asking"

பில் கேட்ஸ் ஆப்பீஸ்ல உக்காந்துகிட்டு என்னதான் செய்யறார் என்று எப்போதாவது தோன்றியிருக்கிறதா? அவரே சொல்கிறார்.. ( ராஜி வழியாக )

Breaking News-o-mania – Ferrari Prabhu

முன்னணித் தொலைக்காட்சிகள், 'breaking news' பித்துப் பிடித்து அலைவதை, பகிடி செய்கிறார், பிரபு..  Hilarious..

சொல்ல முடியாது.. இது நிஜமாகவே நடந்தாலும் நடக்கலாம்..

Brokeback Mountain – Blogeswari

Filed under: சினிமா விமர்சனம் — prakash @ 4:23 முப

ப்ரோக்பாக் மவுன்டென பத்தி,பேப்பரு, டிவி, இன்டர்னெட்டு எல்லத்துலயுந்தான் படிச்சேன்.ஆனா ஒருத்தர் கூட ஷாட்டுக்கு ஷாட்டு கண்றாவியா ஸ்க்ரீனுல தெரியுற அந்த 'பூம் மைக்'கப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே?நம்ம சவுண்டு பார்டியும் சத்தம் போடாம குந்திகுனுக்குறாரு? ஆனா ஒண்னு நெசம்பா. ப்ரோக்பாக் மவுன்டெனுக்கு ஏன் 'பெஸ்டு ஃபிலிம்' ஆஸ்காரு கெடக்குல ன்னு எனக்கு இப்போ புரியுது. ஆஸ்காரு ஜூரி, படம் பாக்க உக்காந்தப்ப அங்க கரண்டு கட் ஆயிருக்கும். அவுகளும், படம் முடிஞ்சிருச்சுய்யா-ன்னு எளுந்து போயிருப்பாக! அப்படியே முளுசா படம் பாத்திருந்தாலும் அவுகளுக்கு புரிஞ்சிருக்குமா? அத விடுங்க டைரக்டர் ஆங் லீ அண்ணாச்சிக்கே புரிஞ்சிருக்குமான்னு சந்தேகந்தெய்ய்ன்

இந்தப் படம் இவங்களுக்குப் புடிக்கலையாம்..அதனால, யாராவது, படத்தைப் பத்தி பேசினா, முதுகை ஒடைச்சுருவாங்களாம்.. எந்த ஊர் நியாயம் இது? 🙂

mymsnsearch, The worst Search Engine Ever

அய்யோ… நான் ஒண்ணும் சொல்லலை… இவர் சொல்றாருங்க.. என்னன்னு கொஞ்சம் விசாரிங்க..

VoW on Medha Patkar’s fasting

Filed under: சமூகம் — prakash @ 4:06 முப

எட்டாவது நாளாக தொடர்ந்து உண்ணா நோன்பு இருக்கும் மேதா பட்கர், தில்லி AIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதை தவிர்த்திருக்க முடியுமோ? Voice on Wings இன் ஆதங்கமும், அக்கறையும்..

How to write a film review? – Sudhish

இதை நீங்க ஒத்துக்கறீங்களா?

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.