கில்லி – Gilli

ஏப்ரல் 10, 2006

‘puthu’ Gilli, An Announcement

Filed under: Announcements — prakash @ 4:11 பிப

இங்கே வருகிற நண்பர்கள் அனைவரும், கில்லியில் எடுத்துப் போடப்படும் சுட்டிகளில் ஏதாவது ஒன்றோ இரண்டோ க்ளிக்-கத்தகுந்தவையாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் வருகிறார்களே தவிர, கில்லி கோஷ்டியின் சொந்தக் கதை சோகக்கதைகளைக் கேட்க அல்ல என்பது தெரியும். இருந்தாலும், சில முக்கியமான தருணங்களில், நின்று பேச வேண்டியதாகிறது..

தமிழ்ப் புத்தாண்டில் இருந்து புது கில்லி ( இருங்க, இருங்க..சுட்டியைச் சொடுக்க வேண்டாம்..இன்னும் வேலை முடியவில்லை).

வலைமுகவரியைத் தவிர வேற மாற்றங்கள் ஏதும் கிடையாது. சரி, புது இடத்துக்கு சென்ற பிறகாவது, கொஞ்சம் உருப்படியாக இருக்குமா? கிடையாது. உருப்படியான, சீரியஸான விஷயங்களைச் செய்வதற்கு அனேகம் பேர் இருக்கிறார்கள். கில்லி is for fun. இன்றைக்கு மாதிரியே, என்றைக்கும் இதே தரத்தில் தான் தொடர்ந்து இயங்கும்.

இறுதியாக,  சென்ட்டி-யாக சில விஷயங்கள்.   [ இந்தப் பாட்டை கேட்டுக் கொண்டே வாசிக்கவும். ஒரு effect க்காக..]

கில்லியின் இற்றைப்படுத்தப் பட்ட தலைப்புக்களை, தன் முகப்புப் பக்கத்தில், இடம் பெறச் செய்து, அதன் மூலம், அதிகமான வாசகர்களை பெற்றுத் தருகின்றதோடு மட்டுமல்லாமல், புதிய கில்லிக்கு இலவசமாக இடம் தந்து உதவிய தேன்கூடு இணையத்தளத்துக்கு முதல் நன்றி.

ஒரு டிசம்பர் மாத இரவில், விளையாட்டாய் மனதில் தோன்றிய எண்ணம், பாலாஜியின் துணையுடன் செயல் வடிவம் பெற்று, சுமார் 600 சொச்சம் இடுகைகளுடன் இந்த இடத்தில் நிற்கிறது. இத்தனை நாள் இந்த கில்லி ஆட்டம் ஓரளவுக்காவது சிறப்பாக நடந்தது என்று யாராவது நினைத்தால், அதற்கு கில்லி கோஷ்டி மட்டும் பொறுப்பல்ல. பிறருக்கு அதிகமாகத் தெரியாமல் ஆதரவும் உதவியும் தரும் நண்பர்களும் காரணம். அவர்களுக்கு நன்றி.

தவிர, அவ்வப்போது கில்லி பற்றி, தத்தமது பதிவுகளில் நல்லவிதமாக எழுதி, இமேஜை உயர்த்தி விடும் வலைப்பதிவு நண்பர்களுக்கும் பரிந்துரைகளை அனுப்பிவைக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

தங்கள் பதிவுகளின் சைட் பாரில் நிரந்தரமாக இடம் தந்திருக்கும் மூக்கு சுந்தர் , Kaps , பிரேமலதா , ராமானுஜம் , சித்தார்த் , சன்னாசி , செந்தில் (jackofall),  வித்யா ,  முகுந்தன் , ப்ரதிப் , ஷ்யாம் சுந்தர் , சந்துரு , ஆனந்த் ,  தமிழன் ,  ஸ்ரீகாந்த் மீனாக்ஷி போன்ற நண்பர்களுக்கும் நன்றி.

நியாயமாக, இவர்கள் அனைவருக்கும், backlink கொடுப்பதுதான் இணையமரபு, இருந்தாலும், கில்லியின் 'கொளுகை' அதற்கு இடம் தராது என்பதால், இங்கே குறிப்பிட வேண்டியதாகிறது. தப்பா நினைச்சுக்க வேண்டாம்.

கடந்த சில நாட்களாக ஒழைச்சு ஒழைச்சு, ரொம்ப அசதி.. ஆகவே அடுத்த இருபத்து நான்கு மணிநேரத்துக்கு no updates. நாளை வழக்கமான நிகழ்ச்சிகள், வழக்கம் போலவே தொடரும், தமிழ் புத்தாண்டு வரை இங்கே,  அதற்குப் பிறகு அங்கே

பிரகாஷ்

22 பின்னூட்டங்கள் »

 1. பதிவுகளை தேர்ந்தெடுத்து படிப்பதிலும் எனக்கு அறிமுகமாகாத சில பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கும் கில்லிக்கு நன்றி. புதிய தளத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
  புத்தாண்டு வாழ்த்துகள் பிரகாஷ்

  பின்னூட்டம் by Padma Arvind — ஏப்ரல் 10, 2006 @ 4:46 பிப

 2. Tip-off-க்கு DesiPundit மாதிரி வழி செஞ்சா கொஞ்சம் வசதியா இருக்குமில்ல?

  பின்னூட்டம் by Pari — ஏப்ரல் 10, 2006 @ 5:43 பிப

 3. பெரகாசு,

  வாழ்த்துகள்.

  ஒரே ஒரு யோசனை :

  கில்லியில் இடம் பெறக்கூடிய பதிவு/சுட்டிகளின் களின் தரம் இன்னமும் கொஞ்சம் பெட்டராக இருந்தால் தேவலை.நிறைய சுட்டிகள் கொடுப்பதை விட நிறைவான விஷயமுள்ள சுட்டிகளை கொடுப்பது முக்கியம்.

  என்னுடைய பதிவுகள் சில, இதில் சுட்டப்பட்டதால் மட்டும் மேற்சொன்ன கருத்தை சொல்லவில்லை. 😉

  மேலும் நான் சொன்னது என் நியாயமான கவலை ப்ளஸ் அக்கறை. சத்தியமாக உள்குத்து இல்லை. ஒரு நியாயமான வேண்டுகோளை வைப்பதற்கே இத்தனை தயங்கும் அளவுக்கு நிலைமை இருக்கிறது 😦

  பின்னூட்டம் by மூக்கு சுந்தர் — ஏப்ரல் 10, 2006 @ 5:56 பிப

 4. பத்மா, வருக, வருக…நன்றி.

  பின்னூட்டம் by prakash — ஏப்ரல் 10, 2006 @ 6:23 பிப

 5. பரி, இன்னும் சில பேரும் இப்படிச் சொன்னாங்க. ஆனா செய்யத் தெரியாதே? அதானே பிரச்சனை :-). புது இடத்திலேயும் ரெடிமேட் தீம் தான் உபயோகிக்கிறோம். யாரையாச்சும் பார்த்து பேசி, செஞ்சு வாங்கிப் போட்டுடறோம்.

  பின்னூட்டம் by prakash — ஏப்ரல் 10, 2006 @ 6:24 பிப

 6. சுந்தர் : சில சமயம், உள்ளடக்கத்தில் லேசாக இருக்கிற ( ஆனால் படிக்கச் சுவாரசியமாக இருக்கிற ) பதிவுகளுக்கும் இணைப்பு கொடுக்கிறோம் தான். ஆனால், ‘வெத்து’ பதிவுகளை எல்லாம் எல்லாம் சுட்டிய மாதிரி நினைவில்லை. இங்கே நாங்க குடுக்கிற எல்லா சுட்டிகளையும் எல்லாரும் படிக்கிறார்கள் என்று நினைப்பதே இல்லை. எல்லாரும் எல்லாத்தையும் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதுமில்லை. ஆனால், ஒரு நாளைக்கு வரும் பதினைந்து சொச்சம் பதிவுகளில், ஒண்ணு ரெண்டு கூட தேறலைன்னு நீங்க நினைச்சா, நாங்க செய்யறதிலே ஏதோ தவறு இருக்குன்னு நெனைச்சுக்குவொம். பிசினஸ், அரசியல்னு சீரியஸா போய்ட்டு இருக்கப்ப, நடுவிலே ஜோதிகா படம் போட்டோம்னு வைங்க, ஜோ படத்தைப் பார்க்க வந்தவன், பிஸினஸ்பண்டிட்டை பார்த்த மாதிரியும் ஆச்சு. சீரியஸாப் படிக்கிற உங்களுக்கு ஜோ படத்தைப் பார்த்து ரிலாக்ஸ் பண்ண மாதிரியும் ஆச்சு.. இல்லீங்களா? 🙂

  பின்னூட்டம் by prakash — ஏப்ரல் 10, 2006 @ 6:25 பிப

 7. வாழ்த்துக்கள்.

  வளர்க.

  பின்னூட்டம் by பிரேமலதா — ஏப்ரல் 10, 2006 @ 6:41 பிப

 8. பிரகாஷ்,
  I think it will be easy to install the plugin that DP uses.
  http://www.dagondesign.com/articles/secure-form-mailer-plugin-for-wordpress/

  Create a WordPress “Page” and stick it there. BoBa can do it 🙂

  பின்னூட்டம் by Pari — ஏப்ரல் 10, 2006 @ 6:44 பிப

 9. Thanks Pari for the plugin pointer.

  பின்னூட்டம் by bsubra — ஏப்ரல் 10, 2006 @ 7:11 பிப

 10. Prakashjii,
  Are you planning any search functionality in Gilli? If so , i am pleased.

  thanks in advance,Eswar

  பின்னூட்டம் by Eswar — ஏப்ரல் 10, 2006 @ 8:50 பிப

 11. நல்லதொரு சேவை! புது வருஷத்திலே வீடு மாத்திறீங்க, கேட்டா சுண்ணாம்பு அடிக்கலைங்கிறீங்க! தெருமட்டும் மாத்திட்டீங்க போல! பராவாயில்ல இன்னும் எத்தனை நடை எடுத்து வச்சாவது வீட்டுக்கு வந்துடுவாங்க எல்லாரும்! நானும் தான்! வாழ்த்துக்கள்!

  பின்னூட்டம் by வெளிகண்ட நாதர் — ஏப்ரல் 10, 2006 @ 9:53 பிப

 12. வளர்க கில்லியின் சேவை.

  உண்மையாகவே, வலைத்திரட்டிகளைன் அடுத்த பரிணாமமாக, கில்லி போன்ற “படித்துப்பார்த்து” தொகுக்கும் தளங்களின் வருகை அதிகரிக்க வேண்டும்.

  படித்துப் பார்த்து என்னும்போதே, படிப்பவரின் ரசனையை சார்ந்திருக்கும் கட்டாயம் இருப்பதால், அதிக தள்ங்கள் வருவதால் பலவிதமான ரசனைகளுக்கும் இடம் கிடைக்கும். ஏதெனும் ஒரு தள நிர்வாகியின் ரசனையோடு வாசகர் தன்னை அடையாளம் காணுதலும் சாத்தியப்படும்.

  எனக்கு கில்லியே போதும்:-) என்றாலும் இவ்வகைத் தளங்களின் தேவை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

  பின்னூட்டம் by சுரேஷ் - பினாத்தல் — ஏப்ரல் 11, 2006 @ 4:26 முப

 13. வழக்கம் போல புது இடத்திலும் கலக்க வாழ்த்துகள்.

  பின்னூட்டம் by Meenaks — ஏப்ரல் 11, 2006 @ 4:39 முப

 14. Advance Vaazhthukkal!
  Konja naal munnadiye naan Gilli.in pakkam poi unga pugaipadathai ellam paarthuvitten:-)

  பின்னூட்டம் by Kaps — ஏப்ரல் 11, 2006 @ 6:30 முப

 15. கில்லி கோஷ்டிக்கு வாழ்த்துகள்.

  மூக்கர் சொல்லறார்ன்னு சீரியஸாயிடாதீங்க… இந்த is for fun ஆவே இருங்க. 🙂

  பின்னூட்டம் by nirmala — ஏப்ரல் 11, 2006 @ 7:27 முப

 16. Gilli Team,

  All the best. Keep going.

  – Suresh Kannan

  பின்னூட்டம் by sureshkannan — ஏப்ரல் 11, 2006 @ 11:48 முப

 17. கில்லி ஃபேனு நானுங்கோ!
  சொல்லச் சொல்ல தேனுங்கோ!
  சீரியஸ்ஸு ஏனுங்கோ
  ‘ஈஸு ஃபன்னு’ வோணுங்கோ 😉

  இனிய பிரகாஷ்,

  வாழ்த்துகள்.

  அன்புடன்
  ஆசாத்

  பின்னூட்டம் by Azad — ஏப்ரல் 11, 2006 @ 12:02 பிப

 18. a small step for யாருக்காச்சும்.
  but a gaint leap for வேற யாருக்காச்சும். 😀

  மன்னிச்சிக்கோங்க. ஏதோ கோர்வையா சொல்லி வாழ்த்தனும்னு வந்து சொதப்பிட்டேன். எளிமையா முடிச்சிக்கறேன்.

  கில்லி குழுவிற்கு வாழ்த்துக்கள்.

  – சித்தார்த்

  பின்னூட்டம் by சித்தார்த் — ஏப்ரல் 11, 2006 @ 12:14 பிப

 19. இது புதுசா? தெரியாமப்போச்சே.

  நம்ம பிரகாசர்தான் நடத்தறாரா?

  நல்லா வரட்டும்.

  வாழ்த்து(க்)கள்

  பின்னூட்டம் by துளசி கோபால் — ஏப்ரல் 11, 2006 @ 12:43 பிப

 20. அடேங்கப்பா, இத்தனை பேரும் கில்லி படிக்கறீங்களா? நம்பவே முடியலை…

  வாழ்த்திய நல்ல உள்ளங்கள் அனைத்திற்கும் நன்றி..

  பின்னூட்டம் by prakash — ஏப்ரல் 11, 2006 @ 2:19 பிப

 21. வளர வாழ்த்துக்கள் – புத்தாண்டு வாழ்த்துக்களை போனஸாக பிடியுங்கள்.

  பின்னூட்டம் by ralsam — ஏப்ரல் 11, 2006 @ 2:29 பிப

 22. advance congrats for new gilly

  பின்னூட்டம் by பிரேமலதா — ஏப்ரல் 13, 2006 @ 8:00 பிப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: