கில்லி – Gilli

ஏப்ரல் 7, 2006

Semma Hot Machchi…

Filed under: அரசியல், தேர்தல் 2006, நக்கல் — prakash @ 6:55 பிப

இத, இத, இதத்தான் எதிர்பார்த்தேன்..

தேர்தல் நெருங்குது… வலைப்பதிவர்கள், news, views, analysis என்று புகுந்து புறப்படும் போது, இவர்களுக்கு நடுவில், வித்தியாசமாக கலக்குகிறார்கள் 'தூள்' பாலாஜி, மைக் செட் முனுசாமி & கோஷ்டி..

பாக்கறீங்களா?

ஏப்ரல் 6, 2006

Ki Veeramani Interview with Haajaa Kani & Anees

Filed under: அரசியல், தேர்தல் 2006, பேட்டி — Snapjudge @ 5:44 பிப

ஜெயலலிதா சீரமைத்ததாகக் கூறப்படும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தினால் முஸ்லிம்களின் வாழ்வு ஒளிரப் போகிறது என சிலர் கூறிக் கொண்டிருக்கும் வேளையில், இந்த ஆணையம் என்ன சொல்கிறது என்பது குறித்தத் தன்னுடைய கருத்துக்களை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேட்டியில் விவரிக்கிறார்.

ஏப்ரல் 5, 2006

Why Not Stalin? – Naga.Elangovan

Filed under: அரசியல், தேர்தல் 2006 — prakash @ 3:22 பிப

இசுடாலின் மீது சாட்டப்படும் குற்றங்கள் என்ன? என்ற வினாவுக்கு எத்தனை பேரால் சரியான காரணத்தைக் கூற முடியும் என்று தெரியவில்லை.அவரின் மீதும் கருணாநிதியின் மீதும் இராசீவ் காந்தி கொலைச் சதி கூட சுமத்தப் பட்டது. அதனால் தி.மு.க பாதிக்கப் பட்டதும் உண்மை. கருணாநிதியை 6 மாதம் அரசியல் ஓய்வெடுக்க வைக்கும் அளவிற்கு அந்தக் குற்றச்சாட்டு அவரை பாதித்தது. பின்னர்தான் மக்களுக்கு அது "இடுதேள் இட்ட" எதிரணியினரின் சதி என்று புரிந்தது. வேறு ஏதும் சில்லறைக் காரணங்கள் இருக்குமானால் அக்காரணங்களினால் அவர் இன்றைய அரசியலில் இருக்கும் அனைவரையும் விட தாழ்ந்தவர் என்று கருதிவிடலாகாது

குடும்ப அரசியல்  என்று சொல்லி ஊடகங்களும், எதிர்கட்சிகளும், தொடர்ந்து, ஸ்டாலினுக்கு எதிராக விமர்சனம் செய்வதை, புள்ளி விவரங்களுடன் ஒரு பிடி பிடிக்கிறார் நாக.இளங்கோவன்.

Epic Book on DMK Luminary – Rajni Ramki

Filed under: அரசியல், புத்தகங்கள் — Snapjudge @ 1:20 பிப

கருணாநிதியின் திருக்குவளை வாழ்க்கையில் ஆரம்பித்து திமிறும் கூட்டணிக்கட்சிகளை இழுத்து பிடித்துக்கொண்டு தேர்தல்களத்தில் நிற்கும் தற்போதைய நிலை வரை ஒரே புத்தகத்தில் அடக்கி, பின்னணியில் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றையும் கொணர்ந்திருக்கிறாரேமே! கலக்குறாரு…

‘Kalyanamaam Kalyaanam’ Ultaa Pulta – Sammatty

'வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்' பாட்டை அரசியல் களத்திற்கேற்ப மெட்டு கட்டுகிறார் சம்மட்டி.

ஏப்ரல் 3, 2006

Coalition Government in TN? – Maalan

Filed under: அரசியல், தேர்தல் 2006 — prakash @ 3:43 பிப

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சரிப்படுமா? அலசி ஆராய்கிறார் மாலன்.. தமிழ் சசியின் கோணம் இங்கே..

Why Should I Vote for Amma – Shyam

அம்மாவுக்கு ஓட்டு கேக்கறார் 🙂 …. மறக்காம போட்ருங்க 🙂

ஏப்ரல் 2, 2006

Rumors on Politicians – Kuzhali

Filed under: அரசியல், பொது — Snapjudge @ 5:00 பிப

புகழ் பெற்றவர்களை கிசுகிசுவாக ரசிப்பது புகழ் பெறாதவர்களின் பொழுதுபோக்கு? (சந்திர)பாபுவுக்கு அருளிய ஃபாத்திமா மாதாவைத்தான் வேண்ட வேண்டும்! (பரிந்துரை: கேப்ஸ்)

மார்ச் 30, 2006

Media Owned State

திமுக, தன் தேர்தல் வாக்குறுதியில், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை இலவசமாகத் தருவதாக வாக்குறுதி அளித்திருந்ததை, ஒரு பிடி பிடிக்கிறார்  TR Vivek

அஷோக்கின் நக்கல் இங்கே

மார்ச் 26, 2006

TN Elections Analysis ( Kurinjippadi)

Filed under: அரசியல், தேர்தல் 2006 — prakash @ 6:09 முப

பொட்டீக்கடையை தொடர்ந்து, தமிழ் சசி, குறிஞ்சிப்பாடி தொகுதியின் வெற்றி வாய்ப்புக்களை அலசுகிறார்.. திமுக கூட்டணி முந்துகிறதாம்..

மார்ச் 24, 2006

TN Elections 2006 – Naga Elangovan

Filed under: அரசியல், தேர்தல் 2006 — prakash @ 4:40 பிப

அட… நாக இளங்கோவன்.. வாங்க..

கூட்டணிக் கட்சிகளுக்கு இடப் பங்கீடு முடிந்த நிலையில், தொகுதிகளின் பெற்றி வாய்ப்பு பற்றி, நாக.இளங்கோவனின் விரிவான அலசல்.

இந்த அலசலுக்கான முன்னுரையில், இளங்கோவன், இணையத்தில் பங்கு கொள்கிற ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை எழுதுவது அதிகம். முழுமையான இணையத் தமிழ் மடற்குழுக்கள், வலைப்பதிவுகள் மற்றும் இணைய இதழ்கள், தரவுகள், புள்ளிவிவரம் கொண்ட ஆய்வுடன் கூடிய தேர்தல் கணிப்புகளை வெளியிடுவது இனிமேல் செய்யக் கூடும் அல்லது அதிகரிக்கக் கூடும். அதற்கு வலு சேர்க்கும் பொருட்டு இணையத்தில் புழங்கும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரில் ஒருவனாக, தனிப்பட்ட முறையில் கடந்த தேர்தல்களின் தரவுகளை ஆய்ந்து, ஒரு முன்கணிப்பை செய்திருக்கிறேன்.

 இது எந்த அரசியல் சார்பும், நிறுவனச் சார்பும் கொண்டதல்ல. இதில் பிழைகள், குறைகள் இருந்தால் அதற்கு நான் மட்டுமே காரணம். இதற்கு எந்த வணிக நோக்கும் கிடையாது. தன்னார்வமும் முயற்சியும் மட்டுமே இதற்கு அடிகோள்.

என்று எழுதுகிறார்..

வரவேற்கிறோம்..

மார்ச் 20, 2006

Suresh ( penathal ) on Thuglak magazine

Filed under: அரசியல், இதழியல் — prakash @ 2:34 பிப

துக்ளக்கின் அரசியல் நிலைப்பாடு பற்றி சுரேஷின் நக்கல்.

மார்ச் 18, 2006

Rajinikanth & Politics – Vijay Krishna

Filed under: அரசியல், ஆங்கிலப் பதிவு, superstar — prakash @ 8:48 முப

வருகின்ற சட்ட மன்ற தேர்தலில், ரஜினிகாந்த், தன் ஆதரவு யாருக்கும் இல்லை என்று சொன்னது தெரிந்திருக்கும். அதை முன் வைத்து , ரஜினிகாந்தின் முந்தைய அரசியல் முயற்சிகளையும் சேர்த்து வைத்து அலசி ஆராய்கிறார்

[ பரிந்துரை : Kaps]

‘Playboy’ Nehru – Sepia Mutiny

ஒண்ணும் சொல்றதுக்கில்லை. நீங்களே படிச்சுக்கவும்.

மார்ச் 17, 2006

Allegations of Tamil rebels ‘coercing diaspora’

Filed under: அரசியல், ஈழம் — Snapjudge @ 5:10 பிப
  1. Sepia Mutiny-இன் பதிவு. மறுமொழி விவாதங்கள் பன்முகப் பார்வை தரும். (குறிப்பிடத்தக்க பின்னூட்டம் ஒன்று | இரண்டு)
  2. ‘மனித உரிமை நோக்கர்’களின் வெளியீடுகளை சுட்டும் வெங்கட்டின் பதிவு.
  3. ஊடக நோக்கர் ‘ராம் வாட்ச்’சின் பதிவு.
  4. சிங்கள் தேசியவாதியின் தொகுப்புகள்.
  5. ராமசுப்ரமணியமின் பார்வை.
Older Posts »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.