கில்லி – Gilli

ஏப்ரல் 13, 2006

Gaanaa..Azad

Filed under: இசை — prakash @ 4:07 முப

வாள மீனுக்கு வெலாங்கு மீனுக்கு  கல்யாணம்.. இந்தப் பாட்டை ஒருதரமாவது கேட்டிருப்பீர்கள். இது நிஜமாகவே கானா என்கிற இலக்கணத்துக்குள் அடங்குகிறதா? கானா கவிஞர் ஆசாத், பிரித்து மேய்கிறார் இங்கே ( உப செய்தி :இவர் கானா பற்றிய நூல் ஒன்றை எழுதியவர்)

மாப்பிள்ள வாளமீனு பழவேற்காடு தானுங்கோ(வ்)! – அந்த
மணப்பொண்ணு வெலாங்குமீனு மீஞ்சூரு தானுங்கோ(வ்)!'

வரிகளில் உலகநாதன் சென்னைத் தமிழின் கானா மொழியை அட்டகாசமாகக் கையாண்டிருக்கிறார்.நாட்டியம், வாத்தியம் என்று இயைபுத்தொடையாக கானாவின் இலக்கணம் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது.

ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டுதான நாட்டியம்! – அய்ய
மேளதாளம் முழங்கிவரும் வஞ்சிரமீனு வாத்தியம்!

கானாக்களில் மரபாக எழுதப்படும் இன்னொரு உத்தி, 'டா' சேர்த்துக்கொள்வது.

ஏப்ரல் 9, 2006

Karaoke – janani

Filed under: இசை — prakash @ 12:02 பிப

'கண்ட நாள் முதல்' படத்தில் 'கண்ட நாள் முதலாய், காதல்பெருகுதடி' பாட்டை, சுபிக்ஷா (?) பாடிக் கேட்டிருப்பீர்கள். ஒரு மாறுதலுக்கு ஜனனியின் குரலில் கேட்டுப்பாருங்கள். பேசாமல், பார்த்துக் கொண்டிருக்கிற வேலையை துறந்துவிட்டு,  இவர் சினிமாவுக்கு பாட்டு பாடப் போய்விடலாம்..

ஏப்ரல் 5, 2006

Call center movie

Filed under: இசை, வலையகம் — Snapjudge @ 8:08 பிப

மிடி, ட்ராக், என்றெல்லாம் விளக்குவதற்கு நடுவில் பிபிஓ-க்களின் பிரதாபங்களை பரிகசிக்கும் படங்களைப் பார்க்க சொல்கிறார் ஸ்ரீகாந்த் தேவராஜன். (பரிந்துரை: ஸ்ரீகாந்த் மீனாக்ஷி)

ஏப்ரல் 3, 2006

ilaiyaraja special

Filed under: இசை, இளையராஜா — prakash @ 2:39 பிப

நீங்க இளையராஜா பக்தரா? கீதம் சங்கீதம் சிவா, சில இசைத் துண்டுகளை பதில் ஏற்றி என்ன பாடல் என்று கண்டு பிடிக்கச் சொல்கிறார்.. முயற்சி செய்து பாருங்கள்.. கண்டு பிடிக்க முடிகிறதா?

இளையராஜாவின் இசைக்காகவே ஒரு தனி வலைப்பதிவு இருக்கிறது.. பார்த்திருக்கிறீர்களா? சமீபத்தில், கீரவாணி ராகத்தில் அமைந்த, இளையராஜாவின் பாடல்களைப் பட்டியல் இட்டிருக்கிறார் மொக்க ராசு…

ஆவணத்துக்குச் சென்று மீதமுள்ளதையும் படிக்கத் தவறாதீர்கள்..

Mesmirizing – Venkat

Filed under: இசை, பொது — prakash @ 6:17 முப

இந்தப் பாடல் வந்த புதிதில் பட்டிதொட்டியெங்கும் முழ்ங்கிக் கொண்டிருந்தது. இப்பொழுது இணையத்தில் அதிக முறை மேற்கோள் காட்டப்படும் தமிழ்த் திரையிசைப் பாடல் இதுதான். சந்தேகமிருந்தால் கூகிளிட்டுத் தேடிப்பாருங்கள். புதிதாக வெளிநாடுவரும் அனைத்து நிரலர்களும் செய்யும் முதல் மூன்று விஷயங்களுக்குள் இதுவும் ஒன்றாக இருக்கும். 1. வீடுபார்த்து குடியமருவது 2. ப்ளாக்ஸ்பாட்டில் ஒரு வலைப்பதிவைத் துவங்குவது 3. தமிங்கலத்தில் முதல் வாரத்தில் பட்ட அல்லல்களை (இதைச் செந்தமிழில் லோல் என்று சொல்வார்கள்) எழுதி இந்தப்பாடலை மேற்கோள் காட்டுவது.

எந்தப் பாடல் தெரியுமா?

கேளுங்க
இதே பாட்டை நம்ம ஆளு குரலிலே கேக்கறீங்களா?

மார்ச் 29, 2006

Kavinjar Thaamarai – Rengaraman Govindan

Filed under: இசை, Tamil Podcast — Snapjudge @ 10:22 பிப

வாலி, பேரரசு போன்ற சூப்பர் சுப்பராயர்கள் நிறைந்த உலகில் தாமைரையைக் கொண்டாடும் நிறைவான பதிவு.

மார்ச் 23, 2006

மறந்துபோன மாரியப்பா

Filed under: இசை, பொது — Venkat @ 6:14 பிப

சுதந்திரப்போராட்டம், நாடகம், திரையிசை, தமிழிசை என்று பல துறைகளில் பிரபலமாயிருந்த எம்.எம். மாரியப்பாவை நமக்கு நினைவூட்டுகிறார் ரத்தினவேலு மேற்கொண்டார். மாரியப்பாவைப் பற்றி ஊர்ப்பெருசுங்க சொல்வதைச் சின்ன வயசில் கேட்ட ஞாபகம் இருக்கிறது.

மார்ச் 19, 2006

en kaNmaNi – sundar

Filed under: இசை — prakash @ 3:31 பிப

என் கண்மணி உன் காதலி இளமாங்கனி
உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

இந்தப் பாட்டை கேட்டிருக்கீங்களோ? பட்டையை கிளப்புதல் என்கிற வார்த்தைக்கு ஒரு உதாரணம் இந்தப் பாட்டு..

சுந்தர் என்ன சொல்றார்னு படிங்க.. பாட்டையும் கேளுங்க…

மார்ச் 17, 2006

K.B.Sundramabal – Saravanan

A furious S.S.Vasan had ordered the termination of services of Program Officer Varadachari and ‘Mess’ Goplalakrishnan, both trusted employees of Gemini Studious, when it became known that due to an inadvertent communication error, she had been refused food after office hours. Hearing this as she was getting ready for her shot, she hastened to Vasan’s room, even in her half made-up state, and demanded that the termination order be revoked forthwith, and Vasan had no option but to comply!

ஔவையாரின் பூம்புகார் பாடல்களைக் குறித்து விரிவான சுவையான பதிவு.

மார்ச் 14, 2006

Can you sing? – Vijay TV

Filed under: இசை, டிவி, நிகழ்வுகள் — Snapjudge @ 10:38 பிப

இந்தியாவில் இருந்தால் ‘வானுயர்ந்த சோலையிலே‘ என்று ஃபீலிங்காய் பாடி முயற்சித்திருக்கலாம். நீங்களாவது ‘சூப்பர் சிங்கர்’ ஆகிற வழியப் பாருங்க

Gaanaa paattu – Raasa

Filed under: இசை, வெள்ளித்திரை — prakash @ 3:32 பிப

வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

இந்தப் பாட்டை கேட்டிருக்கீங்களா? பாடல் வரிகளை வாசிச்சிருக்கீங்களா? இங்கே படிங்க..

சுத்தமான கலப்படமில்லாத ஒரிஜினல் கானா…

பாட்டை இங்கே கேட்கலாம்.

மார்ச் 12, 2006

Pallaviyum Saranamum – ‘Enrenrum Anbudan’ Bala

Filed under: இசை, பொது, வெள்ளித்திரை — Snapjudge @ 7:59 பிப

திரைப்பாடல்் சரணங்களின் சில வரிகளைக் கோடிட்டால் பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடிக்க முடியுமா?

முந்தைய போட்டிகள்:ஒன்று | ரெண்டு | மூணு| நாலு

மார்ச் 10, 2006

Vettaiyaadu Vilaiyaadu Music Review- Vignesh

Filed under: இசை, பொது, வெள்ளித்திரை — Snapjudge @ 6:43 பிப

முதல் தடவை கேட்டதில் ‘பெரிதாகக் கவரவில்லை’ என்று சில நண்பர்கள் சொன்னார்கள். சுரேஷ்குமாரும் மாறுபடுகிறார். விக்னேஷும் பாராட்டுகிறார்.

Radio Show – BB

Filed under: இசை, Tamil Podcast — Snapjudge @ 4:13 பிப

அரிய இசையமைப்பாளர்களை முன்னிறுத்தி பாலாஜி ஸ்ரீனிவாசன் கொடுத்த ரேடியோ நிகழ்ச்சி. (வழி: தினம் ஒரு திரைப்பாடல்)

பகுதி :  [1]   [2]   [3]

மார்ச் 8, 2006

Thee by encore

Filed under: ஆங்கிலப் பதிவு, இசை — Snapjudge @ 5:58 பிப

சின்மயி ‘தீ’ – தமிழ் இசை ஆல்பம் வெளியானதை சொன்னார்.

ஸ்ரீகாந்த் தேவராஜானின் விரிவான விமர்சனம். (பரிந்துரை: ஸ்ரீகாந்த் மீனாக்ஷி)

Update: Private (Pop) Albums in Tamil & சுரேஷ்குமாரின் விமர்சனம்

Older Posts »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.