கில்லி – Gilli

ஏப்ரல் 12, 2006

Ellarumey Thirudangathaan?

Filed under: இலக்கியம், சமூகம், பொது — Snapjudge @ 5:39 பிப

1987 மே மனஓசை இதழில் வெளிவந்த 'என்னங்க நாடு எல்லாமே பிராடு' என்னும் அறிவுமதியின் கவிதையை புதுச்சேரி இரா.சுகுமாரன் 'தேர்தல் 2006' உடன் ஒப்பிடுகிறார்.

ஏப்ரல் 11, 2006

Theru Vaasagam Review – Nagore Roomi

Filed under: இலக்கியம், நூல் விமர்சனம் — Snapjudge @ 10:09 பிப

திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி 'மனப்பத்தாயம்', 'பஞ்சாரம்' 'தெப்பக்கட்டை' கவிதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து ஆனந்த விகடனில் தொடராக வந்த 'தெருவாசகம்' வெளியிட்டுள்ளார். புத்தக விமர்சனம்.

Andal Priyatharshini – Madhumitha

ஆண்டாள் பிரியதர்ஷினியின் 'மன்மத எந்திரம்', 'காதல் நாற்பது' எனும் இரு கவிதை நூல்கள் வெளியீட்டு விழாவுக்கு செல்கிறார் மதுமிதா. (தொடரும் போட்டுவிட்டு விடையும் தராமல் அரசியலுக்குத் தாவிட்டாங்க.)

Interview with Indira Parthasarathy – Balaji Srinivasan

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியுடன் நேர்காணல் : ஒலிக்கோப்பு ஒன்று | இரண்டு.

கேட்க முடியாதவர்களுக்கும் படிக்க விரும்புபவர்களுக்கும் பிபி பாலாஜியின் வலைப்பதிவில் காணக் கிடைக்கிறது. 1 | 2

Athmanaam – Ka Arulselvan

Filed under: இலக்கியம், பொது — Snapjudge @ 5:36 பிப

இந்திய அறிவியற் கூடம் தமிழ்ப் பேரவை 'மின்னல்' மாத இதழின் அக்டோபர் 1985ல் அருள்செல்வன் எழுதியதைப் பகிர்ந்து கொள்கிறார் மு. சுந்தரமூர்த்தி.

ஏப்ரல் 9, 2006

Era.Murukan from Edinburg

Filed under: இலக்கியம், பொது — prakash @ 2:12 பிப

விமர்சகர்கள் கிருஷ்ண, குப்த நாயர்கள், மலையாள இசையமைப்பாளர் தேவராஜன் ( திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே.. நினைவிருக்கிறதா? ), அற்புதமான நடிகர் எம்.எஸ்.திருப்பூணித்துறா போன்றோரின் மரணத்துக்கான இரங்கல் குறிப்புகள், எடின்பரோ ராயல் லைசியம் தியேட்டரில் பார்த்த நாடகத்தின் விமர்சனம் ஆகியவற்றுடன் இரா.முருகனின் நெடுங்குறிப்பு..

கதேயின் நாடக நாயகன் டாக்டர் பாஸ்ட் வானளாவிய அதிகாரம் கிடைக்க ஏங்குகிறான். உலகத்தின் சகலமான இன்பங்களை அனுபவிக்க ஆசைப்படுகிறான். கேட்டதைத் தருகிறேன் என்று முன்வருகிறான் மெபிஸ்டபிலிஸ் என்ற பெயரில் வரும் சாத்தான். ஒரே ஒரு நிபந்தனை. பாஸ்ட் சாத்தானுக்குத் தன் ஆன்மாவை ஒப்புத்தரவேண்டும். எந்த ஒரு இன்பத்தை அனுபவிக்கும்போது அதில் அமிழ்ந்து வெளியேறி அடுத்த இன்ப அனுபவத்துக்கு வர முடியாமல் போகிறதோ, அப்போது பாஸ்ட் சாத்தானுக்கு அடிமையாகி விடுவான். ஏற்றுக்கொண்டு உடன்படிக்கையில் கையெழுத்துப் போட்டுத்தரும் பாஸ்ட்டும், அவன் கூடவே மெபிஸ்டபிலிஸும் போகிற வெளி, உள் பயணங்களின் ஒழுங்கமைவு ஜாக்கிரதையாகக் குலைக்கப்பட்ட தொகுப்பு தான் ‘பாஸ்ட்’ நாடகம்.

Welcome Back Era.mu

A poem – Sannasi

Filed under: இலக்கியம், படைப்பு — prakash @ 12:11 பிப

மூடி திறந்ததும் சுழன்று வருகின்றன
ஈற்றைக் குத்த நாவைச் சுழற்றும்
பற்குத்துக் குச்சிகள்
கனவுலக பீரங்கிகள் போல் இடுக்குகளில்
நுழைந்து நுழைந்து வெடிக்கின்றன குத்திச் சேகரிக்கின்றன
எதிரில் தட்டில் துடைத்தெறிந்து மூடிய தாளுக்கடியில்
இரண்டு கடின ரொட்டிகளுக்கிடையில் நறுக்கிய
தக்காளிகளுக்கிடையில்
கடிபட்ட நகரத்தின் மிச்சங்கள்

முழுக்கவிதையும் இங்கே…

இந்தக் கவிதையில் இருக்கும் படிமம் தென்படுகிறதா?

Rohinton Mistry

Filed under: இலக்கியம் — prakash @ 12:04 பிப

மும்பையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆங்கில எழுத்தாளர் ரோஹின்டன் மிஸ்திரியை குறித்த, சுமதி ரூபனின் பதிவு.

ஏப்ரல் 8, 2006

nAvina kalai ilakkiya parimAtram – Balaji

Filed under: இலக்கியம், நிகழ்வுகள் — prakash @ 7:31 முப

நவீன கலை இலக்கிய பரிமாற்றம் நிகழ்ச்சி குறித்த கில்லியில் முன்பு வெளியானது நினைவிருக்கிறதா? இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன் வாசிப்பு அனுபவம் குறித்து பாஸ்டன் பாலாஜி சிறப்புரை ஆற்றினார். அந்த விவரங்கள் குறித்த, பாலாஜியின் விரிவான பதிவு. [ ஒலிப்பதிவு செய்திருந்தால், audio post போட்ருக்கலாமேண்ணா 🙂 ]

ஏப்ரல் 7, 2006

Mahabharath – Selvan

Filed under: இலக்கியம், படைப்பு — Snapjudge @ 6:38 பிப

தீக்குளிக்கத் தொண்டனை அனுப்பும் தலைவன் போல் கண்ணன் செயல்பட்டானா?

மார்ச் 31, 2006

Ku.Pa.Ra.’s Agalyai : ‘Veli’ Rangarajan – Thamizh Manavalan

Filed under: இலக்கியம், நாடகம் — Snapjudge @ 2:33 பிப

எழுபது ஆண்டுகளுக்கும் முன்னர் கு.ப ரா எழுதிய, வெளி ரெங்கராஜன் இயக்கத்தில் அரங்கேறிய 'அகல்யை' குறித்த பார்வையாளரின் பதிவு. 'பேன்யான்' அமைப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்பது போன்ற பல வித்தியாசங்களைக் கொண்ட நாடகம்.

Journal Notes on Books – Marathadi

Filed under: இலக்கியம், பொது — Snapjudge @ 2:00 பிப
  1. பிகே சிவகுமார் எழுதிய ஒரு டைரிக் குறிப்பு
  2. ரெ கார்த்திகேசுவின் சிந்தையைக் கிளறும் பதில் குறிப்புகள்
  3. கதையா கட்டுரையா? புத்தம்புதிய பேசும் புத்தகங்களா?
  4. Fiction and non-fiction நூல்கள் குறித்து ரெ.கா.

புனைவு vs. கருத்தாக்கக் கட்டுரைத் தொகுப்புகள் குறித்த ஆக்கபூர்வமான பகிர்வுகள்.

மார்ச் 30, 2006

ஜெயமோகனின் கொற்றவை

ஜெயமோகனின்ப்  புதியநாவலான கொற்றவை குறித்து எழுதுகிறார் பச்சோந்தி

"ஒரு சம்பவம், அல்லது தருணத்திற்கும் முழு ரூபம் கிடையாது. – இதுவே என் புரிதல் ஜெயமோகன் எழுதியுள்ள கொற்றவை மீது.ஒவ்வொரு வர்ணனையும், ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு விவரமும், முதற்பார்வைக்கு எவ்வளவு அனாவசியமாகத் தோன்றினாலும், வித்தியாசமுள்ள பல விபரங்கள் ஒரு மையத்தை நோக்கிபோவதை ஆழ்ந்து படித்தால் தான் உணர முடியும்". 

மார்ச் 24, 2006

project madurai – Venkat

Filed under: இலக்கியம், வலையகம் — prakash @ 4:46 பிப

மதுரை திட்டம் பற்றி தெரியுமில்லையா? project gutenberg போல, தமிழில் நடக்கும் ஒரு மகா, மெகா திட்டம்.. இந்த திட்டத்தை விரிவு படுத்த , நவீன இலக்கியங்களை உள்ளிட,  தன்னார்வலர்களின் ஒத்துழைப்பு தேவை…

வெங்கட் விடுக்கும் அழைப்பு இதோ

மார்ச் 21, 2006

You are invited…

Filed under: இலக்கியம், நிகழ்வுகள் — prakash @ 2:41 பிப

சூறாவளிப்பயணமாக சென்னை வரவிருக்கும் பாஸ்டன் பாலாஜி, வருகிற ஞாயிறன்று, எழும்பூர் அபிராமி ஓட்டல் வளாகத்தில், ‘நவீன கலை இலக்கிய பரிமாற்றம்’ என்ற நிகழ்ச்சியில் ‘எனது வாசிப்பனுபவம்’ என்ற தலைப்பிலும், கவிஞர் திலகபாமா, ‘மாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்’ என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள். 

பாரதி இலக்கிய சங்கம் சிவகாசி சார்பாக, கவிஞர் திலகபாமா விடுக்கும் அழைப்பு இங்கே…

கில்லியும் அழைக்கிறது..

Older Posts »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.