கில்லி – Gilli

மார்ச் 28, 2006

Delhi Chalo, A Request – Srikanth Meenakshi

Filed under: சமூகம், பொது — prakash @ 6:56 பிப

போபாலில் ஏற்பட்ட விஷ வாயு விபத்து மட்டும், மேற்குச் சீமையில் எங்காவது நிகழ்ந்திருந்தால், இன்னேரம், யூனியன் கார்பைட் நிறுவனம் நஷ்ட ஈடு கொடுத்தே போண்டியாயிருக்கும் என்று 'ஒருத்தர்' சொன்னார். ஆனால், இது இந்தியா.

ஸ்ரீகாந்தின் பதிவில் இருந்து…

போபால் விபத்தில் தப்பிப்பிழைத்தவர்களில் சுமார் எழுபது பேர், போபாலிலிருந்து புது தில்லி வரை நடை பயணம் (787 கிலோமீட்டர்) மேற்கொண்டுள்ளனர். தற்போது தில்லியின் மிகச் சமீபத்தில் இருக்கும் இவர்கள், நீங்கள் இதைப் படிக்கும் தருணத்தில் நகரத்தைச் சென்றடைந்திருப்பார்கள்.

தில்லியில் பிரதமருடன் ஒரு நேர்காணலைக் கோரி இருக்கிறார்கள். நேர்காணல் கிடைக்காவிட்டால், கால வரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாய் தீர்மானித்திருக்கிறார்கள்..

ஒரு பெரிய முயற்சி நடக்கிறது. நாமும் உதவி செய்யலாம். பணங்காசு எல்லாம் கொடுக்கத் தேவை இல்லை.. ஸ்ரீகாந்த் கேட்டுக்கொள்கிற படி செய்தால் போதும்

The road less travelled

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து விட்டு, பொறியலாளர் ஆகுபவர்கள் ஒரு பக்கம். எம்பீயே படித்து விட்டு, சோப்பு, சீப்பு கண்ணாடி விக்கிறவங்க இன்னொரு புறம். 'பொட்டி தட்டுற' உத்தியோகம் பாக்கிறவங்க இன்னொரு புறம். ஆனால் இவர்களில் இருந்து வித்தியாசப்படும் தங்கபாண்டி என்பவரைப் பற்றி சோடா பாட்டில் பாலா எழுதுகிறார்

தங்கபாண்டி…. சூப்பர் மச்சீ..

update : பொறியியல் படித்துவிட்டு ஓவியரானவர் கதை இருக்கட்டும்., ஐஐஎம்மில், முதுகலை மேலாண்மை படித்துவிட்டு, உணவுக் கடை வைக்கப் புறப்பட்ட சுரேஷின் கதையை சுட்டிக் காட்டுகிறார் kaps.

மார்ச் 26, 2006

Public Register of Menstrual Cycles – KV Raja

Filed under: சமூகம், பெண்ணியம் — prakash @ 6:43 பிப

என்ன தேசமோ… இது என்ன தேசமோ?

 

மார்ச் 25, 2006

History of Kallars.. Ennar

Filed under: சமூகம் — prakash @ 4:24 பிப

கள்ளர்கள் எனப்படும் ஒரு பிரதான தமிழ் சமூகத்தின் தோற்றம் வளர்ச்சியை ஆராய்கிறார் என்னார்.. முதல் பகுதி இங்கே..

மார்ச் 24, 2006

Hindu Marriage Act – Badri

Filed under: சமூகம் — prakash @ 4:37 பிப

இந்து திருமணச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் பற்றியும், செய்ய வேண்டிய திருத்தம் பற்றியும் பத்ரியின் விரிவான பதிவு. அதிலே ஒரு முக்கியமான சட்டதிருத்தமாக சொல்வது..

இப்பொழுது உச்சநீதிமன்றம் இன்னொரு புதிய காரணத்தையும் சேர்க்கலாம் என்று அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது. அதாவது கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றால் – இருவரும் ஒருமனதாக அதை ஒப்புக்கொண்டால் – அதாவது திருமணத்தை இனியும் ஒட்டவைக்கமுடியாது என்ற நிலை ஏற்பட்டால் அந்த விவாகத்தை ரத்து செய்யலாம் என்பதே அது.

உண்மை என்னவென்றால் மேலை நாடுகள் பலவற்றிலும் இந்த வகை விவாகரத்துதான் அதிகம். இருவரும் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றால் அமெரிக்காவில் பல மாநிலங்களில் ஒரு வாரத்துக்குள்ளாகப் பிரிய முடியும்.

ஆனால் இதுநாள்வரையில் இந்த வசதி இந்தியாவில் இல்லை. இனிச் சட்டம் இயற்றினால்தான் இந்த வசதி ஹிந்துக்களுக்குக் கிடைக்கும். முஸ்லிம் திருமணங்களில் இதை எளிதாகச் செய்யமுடியும். (அதாவது திருமணம் நீடிக்கவேண்டாம் என்று இருதரப்பினரும் முடிவுசெய்துவிட்டால்…)

நல்ல வேளை, இந்த திருத்தம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டிருந்தால், நமக்கு மௌனராகம் என்ற திரைப்படமே கிடைத்திருக்காது 🙂

 

மார்ச் 23, 2006

Kindey Sale Center – Narain

Filed under: சமூகம் — prakash @ 3:30 முப

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், வறுமை காரணமாக, மக்கள் சிறுநீரக விற்பனையில் இறங்கியிருக்கிறார்கள். நாராயண் எழுதுகிறார்.

இந்திய கிராமங்களின் கதைகளைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. மேலே சொன்ன விஷயம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் ஒரு கிராமத்தின் நிலை. மஹாராஷ்டிராவில் ஷிங்காபூர், டோர்லி, லெஹேகான் மற்றும் ஷிவானி ரசுல்பூர் என்கிற நான்கு கிராமங்கள் பகிரங்கமாக தங்கள் கிராமங்களை விற்க முன்வந்திருக்கிறார்கள். பிற விவசாயிகள் தங்கள் கிட்னிகளை விற்க முடிவு செய்திருக்கிறார்கள். ஜூன் 2005லிருந்து இன்று வரை கடன் தொல்லை தாங்காமல் 309 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசின் பஞ்சு கொள்முதல் விலையில் ஏற்பட்ட மாறுதல்களும், உலக சந்தையில் ஏற்பட்ட சரிவாலும் இந்த நிலை.

மேலும்…
 

மார்ச் 19, 2006

Negligence – Ponnarasi

Filed under: ஆங்கிலப் பதிவு, சமூகம் — prakash @ 4:33 பிப

கடவுளே! இப்படியெல்லாம் கூடவா நடக்கும்?

Madurai, then & now – Dharumi

Filed under: சமூகம், பொது — prakash @ 3:32 பிப

‘எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன்’ என்று விவேக் ஸ்டைலில் மதுரை நகரம் புலம்பினால் எப்படி இருக்கும்? தருமியின் இந்தப் பதிவு போல இருக்கும்…

மார்ச் 18, 2006

‘Playboy’ Nehru – Sepia Mutiny

ஒண்ணும் சொல்றதுக்கில்லை. நீங்களே படிச்சுக்கவும்.

Bangalore, Again – Vasanth

Filed under: ஆங்கிலப் பதிவு, சமூகம், பொது — prakash @ 8:45 முப

பெங்களூர் மாதிரி வரம் வாங்கிய நகரமும் கிடையாது. (சமீப காலத்திலே ) உதை வாங்குகிற நகரமும் கிடையாது. உங்களுக்கு ஒண்ணு தெரியுமோ? பெங்களூரில் இருக்கிற குண்டும் குழியுமான சாலைகளுக்கு என்றே ஒரு விசேஷமான வலைத்தளம் இருக்கிறது.

பெங்களூர்வாசியான வசந்த், பெங்களூர் போக்குவரத்தின் வினோதங்களைப் பற்றி அடுக்குகிறார் இங்கே…

மார்ச் 17, 2006

Untouchability, Religions & Women – Padma Aravind

Filed under: அமெரிக்கா, சமூகம், Op-Ed — Snapjudge @ 4:40 பிப

தீண்டாமை, மதங்கள், பெண்கள் இன்னபிற…

ஒன்று | இரண்டு | மூன்று | நான்கு

மார்ச் 14, 2006

India Stinking

Filed under: சமூகம் — prakash @ 3:29 பிப

கீதா ராமசாமியின் ”India Stinking: Manual scavengers in Andhra Paradesh and their work” என்ற நூலை முன்வைத்து…

வெங்கட் 1, 2, ரோசா வசந்த்

மார்ச் 12, 2006

Thambi Movie Experiences

Filed under: சமூகம், சினிமா விமர்சனம் — Snapjudge @ 8:23 பிப

வீட்டு மாமரத்தை வெட்டுவதைக் கூட தம்பியால் தாளமுடியவில்லை. “மரம் தானே விடு வேலு (தம்பி)” என்னும் வசனமும் வருகின்றது. படம் தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் இராமதாஸ் அய்யாவிற்கு சமர்ப்பணம் செய்யப்படுகின்றது (Title Credit).

(சீமானிடம் இருந்து) பாஞ்சாலங்குறிச்சி, பசும்பொன், வீரநடை என பல படங்கள். தோழர் மாவோ, லெனின் போன்றோர்கள் செய்தது ஒருவிதப் புரட்சி என்றால் அய்யா பெரியார் சொன்னது போல், கட்டை வண்டியில் போய்க் கொண்டிருந்த நாம் ஆகாய விமானத்தில் பறப்பதும் ஒருவிதப் புரட்சிதான்.

தன்னைத் திருப்பித் தாக்கும் வலிமை இல்லையெனத் தெரிந்துகொண்டு ஒருவனைத் தாக்குவதுதான் உலகிலேயே கொடுமையான வன்முறை. அது போன்ற வன்முறையை எதிர்த்துப் போராடும் ஒரு போராளிதான் தம்பி. இந்தத் தம்பியிடம் ஆயுதம் இல்லை.

Agnosticism – Arul

Filed under: சமூகம் — prakash @ 4:25 முப

அந்தகாலத்திலே எல்லாரும் சாமி கும்பிட்டார்கள். நாத்திகம் என்ற கருத்துருவாக்கம் தோன்றியதே, பெரியாருக்குப் பிறகுதான் என்று நீங்கள் நினைத்திருந்தால் அந்த அபிப்ராயத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

உலோகாயதம் எனப்படும் இறையிலிக் கொள்கை இந்தியப் பரப்பில் மிகப்பழைய ஒரு கருத்தாகும். சார்வாகிகள், உலோகாயதவாதிகள், நம்பிக்கையறு வாதிகள் எனப் பல வகைக் கோட்பாடுகளுடன் இவ்விறையிலிக் கொள்கையர் இருந்தனர். வேதங்களை, யாகங்களை முன்னிறுத்தும் வைதிக மதத்தையும், கடவுளைப் பற்றிப் பேசாத ஆனால் ஊழ்/வினை பற்றி பேசும் அவைதீகர்களான சமணர், பௌத்தர், ஆசீவகர் என பிற மதங்களையும் இறையிலிக் கொள்கையினர் மறுதலித்தனர்.

இறையிலிக் கொள்கை  பற்றி, அவ்வப்போது எழுத இருக்கும் கருத்துக்களில், முதல் தவணை இதோ

மார்ச் 8, 2006

Blank Noise

Filed under: சமூகம், வலையகம் — prakash @ 6:21 பிப

Blank Noise Project பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். முன்பே கில்லியில் எழுதியிருக்கிறோம்.பெண்கள், பொதுவிடங்களில் தங்களுக்கு நடக்கும் பாலியல் தொந்தரவுகள் பற்றி, வெளிப்படையாகப் பேசவும், ஓங்கிக் குரல் கொடுக்கவும் வலையுலகில் இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்தது. அனேகமாக பெண் வலைப்பதிவாளர்கள் அனைவரும் தங்களுக்கு ஏற்பட்ட கொடுமையான அனுபவங்களை எழுதினார்கள். அதில் சில குலை நடுக்கம் ஏற்படுத்துபவை.

இந்த கூட்டத்தில் ஒரு குரல் மட்டும் தனியாக ஒலிக்கிறது,

இவர் சொல்றது ரைட்டா, தப்பா?

தெரியலியேப்பா…

« Newer PostsOlder Posts »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.