கில்லி – Gilli

ஏப்ரல் 13, 2006

Comedy Bazaar II – V for Vendakka, Vic Vega

சரி, படம் உங்களுக்கு புடிக்கலை,, அதுக்காக இப்படியாப் போட்டு வாருவது?

ஏப்ரல் 11, 2006

Memoirs of Geisha -Dubukku

Filed under: சினிமா விமர்சனம் — prakash @ 2:14 பிப

இவரை நான் வெளையாட்டுப் புள்ளேன்னு நெனைச்சுட்டு இருந்தேன். இவர் பார்த்த படமும், அதை அனுபவித்த விதமும், அந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுகிற விதமும் வேறு மாதிரி இருக்கின்றன.

ஏப்ரல் 9, 2006

Kurosawa & Ray

அகிரோ குரோசோவா வின் இகுரு (Ikuru) வையும் , சத்யஜித்§ரயின் 'பதேர் பஞ்சலி' யையும் ஒரே தட்டில் வைத்து அலசுகிறார் சந்திரசேகரன் கிருஷ்ணன். கலக்கறீங்கோ கிருஷ்ணன்.

ஏப்ரல் 7, 2006

Movie Review for Dummies – Kusumban

Filed under: சினிமா விமர்சனம், டிப்ஸ் — Snapjudge @ 6:23 பிப

குசும்பு செய்கிற நடையில் எழுதினாலும், நிஜமாகவே சினிமா விமர்சனம் எழுத விரும்புவோருக்குப் பயனுள்ள (கடைபிடிக்கும்?) குறிப்புகள் 🙂

ஏப்ரல் 6, 2006

Four Films – Sam

கல்லூரியில் மூன்றாவது வருடம் படிக்கும் போது குரொசோவா பற்றிய அறிமுகம் கிடைத்தது. ஆனால் அவரது படைப்புகளைப் பார்க்கும் வாய்ப்பு ஐந்து வருடங்களுக்குப் பிறகுதான் கிடைத்தது. அமெரிக்கா வந்த பின் சினிமா பார்க்கும் ப்ழக்கம், தொட்டில் ப்ழக்கம் சுடுகாடு மட்டும் போல தொடர்ந்தது. சர்வதேச அளவில் பேசப்படும் திரைப்படங்களுக்கு என்று சில குணங்கள் இருக்கிறது. நம் கோலிவுட்காரர்கள் சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற வகையில் இதைப் பேசுகிறார்கள். இது எனக்குப் புரியவில்லை.இந்த முறை எனக்குப் பிடித்த நான்கு சர்வதேசப் படங்களைப் பற்றிப் பேசப் போகிறேன். 

My Mothers Castle, Mrs. Brown , White baloon , Waking Ned Devine ஆகிய நான்கு திரைப்படங்கள் பற்றிய சுருக்கமான, அழகான குறிப்புகள்.

Brokeback Mountain – Blogeswari

Filed under: சினிமா விமர்சனம் — prakash @ 4:23 முப

ப்ரோக்பாக் மவுன்டென பத்தி,பேப்பரு, டிவி, இன்டர்னெட்டு எல்லத்துலயுந்தான் படிச்சேன்.ஆனா ஒருத்தர் கூட ஷாட்டுக்கு ஷாட்டு கண்றாவியா ஸ்க்ரீனுல தெரியுற அந்த 'பூம் மைக்'கப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே?நம்ம சவுண்டு பார்டியும் சத்தம் போடாம குந்திகுனுக்குறாரு? ஆனா ஒண்னு நெசம்பா. ப்ரோக்பாக் மவுன்டெனுக்கு ஏன் 'பெஸ்டு ஃபிலிம்' ஆஸ்காரு கெடக்குல ன்னு எனக்கு இப்போ புரியுது. ஆஸ்காரு ஜூரி, படம் பாக்க உக்காந்தப்ப அங்க கரண்டு கட் ஆயிருக்கும். அவுகளும், படம் முடிஞ்சிருச்சுய்யா-ன்னு எளுந்து போயிருப்பாக! அப்படியே முளுசா படம் பாத்திருந்தாலும் அவுகளுக்கு புரிஞ்சிருக்குமா? அத விடுங்க டைரக்டர் ஆங் லீ அண்ணாச்சிக்கே புரிஞ்சிருக்குமான்னு சந்தேகந்தெய்ய்ன்

இந்தப் படம் இவங்களுக்குப் புடிக்கலையாம்..அதனால, யாராவது, படத்தைப் பத்தி பேசினா, முதுகை ஒடைச்சுருவாங்களாம்.. எந்த ஊர் நியாயம் இது? 🙂

ஏப்ரல் 5, 2006

Thambi, a dissection by Shoba Shakti

Filed under: சினிமா விமர்சனம் — prakash @ 3:57 பிப

அடேங்கப்பா…

தம்பி படத்தை, இத்தனை ஆழமாக, அகலமாக அறுத்துக் கூறு போட முடியுமா?

போலிப் புரட்சிகரப் படிமங்களின் பின்னே/ அவர் உதிர்த்தும் கைப்புள்ள, வெடிமுத்து வீர வசனங்களின் பின்னே இயங்கும் சின்னத்தனமான அரசியலின் வியாபார இலக்கு எது ? அந்த வியாபாரத்தின் அரசியல் என்ன ?

தம்பி திரைப்படம் பழிக்குப் பழி என்ற வழமையான தமிழ்த் திரைப்பட பாணியிலிருந்து வேறுபட்டது அதனாலேயே அது முக்கியமானது என்று திராவிடப் பாசறையிலிருந்து வரும் 'உண்மை' இதழும் எழுதுகிறது தமிழ்த் தேசியவாதப் பாசறையிலிருந்து வரும் 'தென் செய்தி' இதழும் எழுதுகிறது. என்ன இழவு இது ?

இன்று தென்மாவட்டங்களில் சாதி ஒடுக்குமுறையாளர்களாக விளங்கும் முக்குலோத்தரின் சாதிப் பெருமிதப் படிமமாக வரலாற்று நாயகனாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நிறுத்தப்பட்டிருக்கிறார். ஆக முத்துராமலிங்கத்தின் படத்தைத் தம்பியின் வீட்டில் சீமான் மாட்டிவிட்டதற்க்குப் பின்னால் இருப்பது சுய சாதி அபிமானத்தைத் தவிர வேறென்ன?

சீமான் தனக்குள் இலட்சியங்களை விதைத்தவர்களான மாவோவும் லெனினும் சே குவேராவும் தம்பி திரைப்படம் முழுவதும் விரவியிருப்பதாகக் கூறுகிறார். மாவோவும் லெனினும் அரசு இயந்திரத்தை நொறுக்குவது குறித்தும் அரசின் காவல் நாய்களான அதிகாரிகளையும் ஆயுதப்படையினரையும் செயலிழக்கச் செய்வது குறித்தும்தான் பேசுவார்கள். அவர்கள் புரட்சியாளர்களாக மாறச் சொன்னார்களே ஒழிய பொலிஸ்காரர்களாக மாறச் சொல்லவில்லை

லெனினையும் பெரியாரையும் பாரதிதாசனையும் புகைப்படங்களாகத் தமிழ்த் திரையில் முதலில் காட்டியவர் சீமான் என்ற சிந்தனையாளன் தான் என்று சிறுபிள்ளைத்தனமாக சுப.வீரபாண்டியன் மகிழ்ந்து போவதில் எந்த அர்த்தமும் இல்லை. எம்.ஜி.ஆர் கூடத்தான் உலகம் சுற்றும் வாலிபனில் லெனின் சிலையை காண்பிக்கிறார்.பாரதிதாசனைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் புத்தரைப் பற்றியும் அண்ணாவைப் பற்றியும் திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் பேசாததையா சீமான் பேசிவிட்டார் ?

தம்பி திரைப்படத்திலும் இரு மேற்கோள்களையும் ஒரு வசனத்தையும் நீக்கி விட்டால் சீமானின் தம்பி அசலான விஜயக்காந் பாணிப்படம். இராம.நாராயணனுக்கு 'முரட்டுக்காளையை' தயாரித்த ஏ.வி.எம் நிறுவனமென்றால் சீமானுக்கு 'ஜீன்ஸ்' படத்தைத் தயாரித்த முரளி மனோகர். ஏ.வி.எம்மும் இராம.நாராயணனும் சேர்ந்து தமிழ்த் தொழிலாளர்கள் விவசாயிகள் மாணவர்கள் தலையில் மிளகாய் அரைத்தார்கள் என்றால்; முரளி மனோகரும் சீமானும் தமிழகத் தமிழர்களுடன் சேர்த்து ஈழத் தமிழர்களின் தலையிலும் மிளகாய் அரைக்கிறார்கள்….

பொறி பறக்கிறது..  அப்பப்ப மூச்சு விட்டுப் படிங்க..

[சுப.வீர பாண்டியன் எழுதிய விமர்சனம்]

மார்ச் 31, 2006

Being Cyrus – Voice on Wings

Filed under: சினிமா விமர்சனம் — Snapjudge @ 2:06 பிப

நம் திரை விமர்சகர்களிடையே உள்ள ஒரு குறைபாடு என்னவென்றால், லாப நோக்கோடு formula அம்சங்கள் என்று கருதக்கூடிய சண்டைக் காட்சிகள், கவர்ச்சி நடனங்கள், பாடல் காட்சிகள், நாயக வழிபாடுகள், ஆகிய எதுவும் இல்லாமல் ஒரு படம் வெளி வந்தால், அதை ஆகாய உயரத்திற்கு உயர்த்துவதே ஆகும். எனது அணுமுறை என்னவென்றால், இவையனைத்தையும் படத்தில் சேர்க்கவில்லை என்பதைக் கடந்து, அப்படத்தின் நிறை குறைகளை ஆராய வேண்டுமென்பதே.

Can't agree more… திரை விமர்சகர்களுக்கு மட்டுமல்ல; இன்னும் பலவற்றிற்கு extrapolate செய்தாலும் பொருந்தக்கூடிய அவதானிப்பு.

மார்ச் 26, 2006

Pattiyal, again…

Filed under: சினிமா விமர்சனம் — prakash @ 4:08 முப

பட்டியல் படத்துக்கு இதை விடவும் சிறப்பாக விமர்சனம் எழுதமுடியாது.

At the end, what Pattiyal represented to me was not just a good story affectingly told, but a pointer that Tamil cinema has come a long way in its representation of real people. Kosi and Selva are from the slums, and when Kosi faints, Selva sees a pot of water nearby. In an earlier film, he’d have cupped some water in his palm and sprinkled it on Kosi to revive him. Here, he just drops the pot on Kosi’s head. The gesture gets laughs, all right, but it also gets it right. The people here look and feel real. They’re rowdies, yes, but not one person has a scarf knotted around his neck or a big, fake mole on his cheek or wears a lungi propped up by a studded belt or speaks in that exaggerated Madras-thamizh lingo that Kamal Haasan uses in every other comedy of his. You’ll also be happy to know that not one person answers to the name of Jambu.

சத்தியமான வார்த்தைகள்.

ஆசாத் அனுபவம் வேறு மாதிரி இருக்கிறது. படம் அவருக்குப் பிடித்திருக்கிறது. ஆனால், காட்சிகளின், களங்களின், பின்புலத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் வைக்கிறார் இங்கே..

மார்ச் 24, 2006

kalakkal

Filed under: சினிமா விமர்சனம் — prakash @ 5:22 பிப

ஒரு கலைஞனுக்கான அங்கீகாரம், அவனுக்கு கிடைக்கும் கைதட்டல் தான், விருதுகள் அல்ல என்று கமல்ஹாசன் சொல்லுவார்… எஸ்.பாபுவின் இந்த விமர்சனம், பல நூறு விருதுகளுக்குச் சமம்.

மார்ச் 23, 2006

Suba Veera Pandian on Thambi Movie

Filed under: சினிமா விமர்சனம் — prakash @ 3:47 முப

பொதுவாக தமிழ்த் திரைப்படங்கள் மீது நல்ல அபிப்ராயம் இல்லாத சுப.வீரபாண்டியன், ‘தம்பி’ படத்தை எக்கச்சக்கமாகப் பாராட்டுகிறார்.. என்ன காரணம் என்று தெரியும் தானே?

மார்ச் 21, 2006

V for Vendatta

Filed under: சினிமா விமர்சனம் — prakash @ 3:08 பிப

யக்ஞா புடிக்கலைன்னு சொன்னாலும்.. திவ்யாவுக்குப் புடிச்சிருக்காம்.. Anti, ஒரே வரியிலே முடிச்சுட்டார்…

மார்ச் 20, 2006

V for Vendetta – Yagna

Filed under: சினிமா விமர்சனம் — prakash @ 2:38 பிப

படத்தின் முக்கிய குறையே புரட்சியின் பிறப்பை சித்தரிப்பதில்தான். எல்லா தேர்ந்த கலைஞர்களையும் எப்போதாவது ஒருமுறையேனும் சுண்டியிழுக்கும் இந்த கதைக்களம்தான் பிரச்சினையே. சமீபத்தில் ஆய்த எழுத்தில் மணிரத்தினமும் சமூகத்தில் புரட்சிக்கான பிரத்தியேக ஃபார்முலாவை சித்தரிக்க முயன்று சுட்டுக்கொண்டது நினைவில் இருக்கலாம். தற்போதைய இந்த படம் நன்றாக தொடங்கியபின் பின்பாதியில் முடிவை நோக்கியிட்டுச் செல்லும்போது தொய்ந்துவிடுகிறது.

வேணாங்கறார்…

மார்ச் 19, 2006

Pattiyal – Review

Filed under: சினிமா விமர்சனம் — prakash @ 7:17 முப

வந்துடுச்சுபா.. பட்டியல் விமர்சனம்.

bbthots பாலாஜிக்கு ரொம்ப புடிச்சுருக்கு

director Vishnuvardhan’s much-better follow-up to Kurumbu, I said “If he follows this trajectory, his next film will be something to look forward to”. Fortunately, he has followed the trajectory in Pattiyal, his third film. Shifting gears from the light, commercial setting he seemed comfortable in, he gives us in this film a realistic, uncompromising look at Chennai underworld.

முழுசும் படிக்க… [ பரிந்துரை : Kaps]

ப்ரோக்கன் நியூஸ் பலராமனுக்கும் புடிச்சுருக்கு. இருந்தாலும் கொஞ்சம் கிழிக்கிறார்..

  • Arya needs to work on his Tamizh and acting – he has a done a decent job. This is not a complaint. I was surprised to find that his acting in this movie was not as bad as I had expected it to be.
  • The Mallu middleman is irritating – Gaptain should include in his list of election promises, a mandatory requirement for actors to talk in Damilu correctly.
  • Padmapriya, who incidentally has a great mega serial personality, is given a meatier role than Pooja, who holds her own.
  • Thevaiyilladha build up for some Tamizh movie stars in dialogue – won’t build them up further by mentioning the names here.
  • Story rushed in places, but not very noticeable.
    Over-senti dialogue between two guys is always irritating.
  • Arya’s ghostly appearances after his death are totally uncalled for. The flashbacks are also slightly overdone.

முழுசும் படிக்க…

your’s truly இன் அபிப்ராயம்

பல காட்சிகள், சத்யாவை, பிதாமகனை, நினைவு படுத்துகின்றன.

அறிந்தும் அறியாமலும் படத்தில் இருந்த மாதிரியான pleasant surprise எதுவும் இந்தப் படத்தில் இல்லை. அதுதான் பெரிய குறை. எல்லாம் எதிர்பார்த்த மாதிரியே நடக்கின்றன.

விஷ்ணுவர்த்தன் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கவேண்டும்.

முழுசும் படிக்க

 

மார்ச் 15, 2006

Children of Heaven – Sidharth

கலக்கல்

Older Posts »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.