கில்லி – Gilli

பிப்ரவரி 8, 2006

Chennapattinam Snaps – Julia

Filed under: சென்னை, புகைப்படங்கள், பொது — Snapjudge @ 7:25 பிப

குடத்தில் ட்ரில்லரைக் கொண்டு லஸ்ஸி செய்து தாகம் தணிந்திருக்கிறேன். செய்முறையையும் சென்னையையும் படம் பிடிக்கிறார். (வழி: சாம்பார் மாஃபியா காப்ஸ்)

ஜனவரி 13, 2006

vaLLuvar kOttam – Muthu

Filed under: சென்னை, பொது — prakash @ 7:40 முப

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. இது விவேக் சொல்லும் வசனம் இல்லை… வள்ளுவர் கோட்டத்துக்கு வாய் இருந்தால் இப்படித்தான் புலம்பும் என்று முத்து சொல்கிறார்.

woodlands drive-in – Ramakrishnan

Filed under: ஆங்கிலப் பதிவு, சென்னை, பொது — prakash @ 7:14 முப

உட்லாண்ட்ஸ் டிரைவ்-இன் ஓட்டல், சென்னை நகரத்தின் முக்கியமான அடையாளம். நகரின் மத்தியில் இருந்தாலும் அமைதியான சூழ்நிலை… எத்தனை நேரம் உட்கார்ந்திருந்தாலும், யாரும் கேட்கமாட்டார்கள்.. உட்லாண்ட்ஸ் டிரைவ்-இன் பற்றிய ராமகிருஷ்ணனின் அழகான பதிவு

 

ஜனவரி 11, 2006

Triplicane Passenger

எக்ஸ்பிரஸ் ரயிலாக எண்ணங்களைக் கொட்டாமல் அமைதியாக பாஸெஞ்சர் ட்ரெயினாக சொல்கிறார் பாடகி சின்மயி.

The huge Kolams, running about barefoot on the roads, checking out the Perumal when he came on his rounds…. somehow I felt something new, of just wanting to be and do nothing…I wouldnt go back and live there but somehow the air I breathe there, the sounds I hear, everything feels different…. How I forgot the bus pass one day and the conductor just let me go That was a different time, and seems a different era. And so far away. All the memories came in with a huge whoosh.

நினைவலைகளைப் பகிர்வது சுகம். சின்ன வயதில் புழங்கிய இடங்களை, வளர்ந்து அன்னியப்பட்ட பிறகு அசை போடுவதும் சுகம். இரண்டையும் அருமையாக எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார் சின்மய்.

ஜனவரி 10, 2006

Chennai Book Fair

திரைப்படம், சுஜாதா, விகடன் என்று பல புத்தகங்களைக் குறித்தும், சென்னை புத்தகக் கண்காட்சி குறித்தும் சுரேஷ் குமார் எழுதுகிறார். இசை குறித்த புத்தகம் கிடைக்குமா என்பது நல்ல கேள்வி.

பாலகுமாரனின் முழுத் தொகுப்புகளையும் நடிகர் விவேக் வாங்கியதையும், தான் வாங்கியவற்றையும் பகிர்கிறார் சரவணன்.

குரு சுப்ரமணியம் இல்லாத குறையை செந்தில் தீர்த்து வைப்பதாக பலராலும் சொல்லப்படும் dabbler, வலைப்பதிவர்கள் குறித்தும் எழுதுகிறார்.

ஜனவரி 6, 2006

Vijayganth, Vijay TV & Book Fair

சினிமா வில்லன்கள் எவ்வளவு துன்புறுத்தினாலும் இறுதியில் கேப்டன் தடைகளை உடைத்து விடுவார். விஜய் டிவி வில்லனையும், தான் வில்லனான கதையையும், விஜய்காந்த்தின் வில்லர்களையும் சதயம் PIN (ஏன்?!) குறித்திருக்கிறார்.

ஜனவரி 5, 2006

Kilpauk & Vadapalani – Sathyam Movieplex

Filed under: சென்னை, நிகழ்வுகள் — Snapjudge @ 10:16 பிப

பள்ளித் தலமனைத்தும் தியேட்டர் கட்டுவோம் என்று சத்யம் சொல்கிறார்கள். அமெரிக்க வெள்ளித்திரைகளில் படம் பார்ப்பதற்கே இருநூறு ரூபாய்தான் (நாலு வெள்ளிகள்) ஆகிறது. அமிஞ்சிகரையில் பார்ப்பதற்கு ஐநூறு ரூபாயா என்று சாம்பார் மாஃபியா கவலை கொள்கிறார்.

« Newer Posts

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.