கில்லி – Gilli

ஏப்ரல் 12, 2006

Of Bungling Lovers, And Their Tales – Jiby John Kattakayam

I remember waiting for my crush, all over the place from Nanthencode Junction to Pattom LIC wondering what mode of transport she used and finally giving up that tactic when she arrived with a policeman for escort… her dad wuz an IPS officer!

தமிழ்ப்பட இயக்குநர்களுக்கு தேவையான திடுக் திரைக்கதைகளையும் காதல் காட்சிகளையும் கொண்ட பதிவு.

Change your past – Anurama

ஐஷ்வர்யா ராயிடமும் சுஷ்மிதாவிடமும் கேட்ட கேள்வியைத் தன்னிடம் கேட்டால் என்ன பதில் என்று யதார்த்தமாக பகிர்ந்து கொள்கிறார்.

Ego Blog – Deepa Swaminathan

முத்ராவில் படிக்க சேர்ந்ததால் என்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது என்று நினைத்துப் பார்த்தால், என்னையும் கல்லூரி நனவோடை எழுதத் தூண்டுகிறது.

Solitude across the Bridge – Kartik Kannan

ஏகாந்த தரிசனம் என்றால் என்னவென்று தெரிய வேண்டுமா?

How To Write a Review – Sonia Faleiro

மீன், கோழி என்று வாங்க செல்வதற்கு நடுவில் விமர்சனங்கள் குறித்த வாசக அனுபவம் சமைக்கிறார்.

ஏப்ரல் 11, 2006

Autograph – Raasa

Filed under: சொந்தக் கதை — prakash @ 4:39 பிப

எல்லோர் வாழ்க்கையிலும் இப்படிப் பட்ட கதை ஒன்று இருந்தே ஆகும் போலிருக்கிறது. ஒரு விக்ரமன் படத்துக்கான கதையை ஒரு பக்கத்தில், கொங்குத் தமிழில் அழகாக எழுதியிருக்கிறார்..[ 'நீ இதைச் செய்யலாமான்னு?" சட்டையைப் பிடிச்சு உலுக்கினப்பவே உறைச்சிருக்கணுமே ராசா.. மிஸ் பண்ணிட்டீரே 🙂 ]

அருமை…

A trip down to the memory lane – Asif Meeran

Filed under: சொந்தக் கதை, பொது, வலையகம் — prakash @ 2:07 பிப

தமிழ் இணையத்துக்கு வந்தது எப்படி என்பது முதற் கொண்டு தற்போதைய வலைப்பதிவு வாழ்க்கை வரை, சுருக்கமாக, அழகாக விளக்கும் ஆசீப் மீரானின் இடுகை. [‘நினைவு நதியில் ஒரு பயணம்’ கவிதத்தனமா தலைப்பு வெக்கற அளவுக்கு ஸ்கோப் இருக்கிற மேட்டரை வேஸ்ட் பண்ணிட்டீங்களே அண்ணாச்சீ ]

ஏப்ரல் 10, 2006

Legalised Loving Period…

Filed under: சொந்தக் கதை, பொது — prakash @ 2:15 பிப

….என்றால் என்ன தெரியுமா? நிச்சயதார்த்தத்துக்கும், திருமணத்துக்கும் இடைப்பட காலம். மீனாக்ஸ் மாதிரி ரொமாண்டிக்கான ஆளை பார்ப்பது சிரமம். வருங்கால மனைவியைச் சந்திக்கப் போய் வந்தவர் காதிலே, ' மாங்குயிலே பூங்குயிலே' பாட்டு ஒலித்துக் கொண்டே இருக்கிறதாம்.

இருக்கும்வே 🙂 பின்னால பார்க்கத்தானே போறோம், வேற என்னல்லாம் பாட்டு கேக்கப்போவுதுன்னு..

ஏப்ரல் 9, 2006

The feeling of becoming a mom – IBH

பல்லாயிரக்கணக்கான வருடங்களாக, பிள்ளைப் பெறுதல் என்கிற விஷயம் நடந்து கொண்டிருந்தாலும், நமக்குன்னு வரும் போது, அதிலே இருக்கும் சந்தோஷம் அலாதியானது. ரொம்ப நாளாகக் க¡ணோம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர், திடீரென்று வந்து ‘ அம்மாவாகப் போகிறேன்’ என்கிறார்.

வாழ்த்துக்கள்

A letter to a friend

Filed under: சொந்தக் கதை, பொது — prakash @ 12:06 பிப

கோவை GCT கல்லூரியில் தன்னுடன் படித்த நண்பன் ஒருவனுக்கு 'என்றென்றும் அன்புடன்' பாலா எழுதும் ஆத்மார்த்தமான கடிதம்.

எச்சரிக்கை : கடிதம் கொஞ்சம் pathos effect இல் இருக்கும்.

ஏப்ரல் 7, 2006

Indian Airport Experiences – Sami

கஷ்டமர் சர்வீஸ் தரும் இந்திய விமான நிலையங்களை உபயோகித்தவரின் அனுபவங்கள்.

Kokkaan Vettuthal – Chandravathana

Filed under: சொந்தக் கதை — Snapjudge @ 6:48 பிப

வெட்டி சம்பளம் வாங்குபவர்களை விடுங்க… "கொக்கான் வெட்டுதல்" போன்ற கிராமிய விளையாட்டுக்களைத் தெரியுமா?

ஏப்ரல் 5, 2006

Baby Sitting – Saranya Kishore

"தோ.. செத்த இந்த கொழந்தைய பாத்துக்கோயேன்.. தெருமுனைக்குப் போய் நாடார் கடையிலே இந்த சீட்டை கொடுத்துட்டு வந்துடறேன்".. என்று பக்கத்து வீட்டு மாமி, அவரது ஒன்னரை அல்லது ரெண்டு வயசு குழந்தையை உங்களிடம் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்களா?

திடுதிப்பென்று baby sitting செய்வது ரொம்ம்ப்ப கஸ்ட்டம்.. எனக்கு உங்களுக்கு மட்டுமில்லை.. சரண்யாவுக்கும்..

ஏப்ரல் 4, 2006

Daughter, Dress, Difference- Pungai Mujib

Filed under: சொந்தக் கதை, பொது — Snapjudge @ 4:03 பிப

இந்த காலத்து பிள்ளைங்க எல்லாம் விவரமானவங்க நம்மள மாதிரி இல்லைன்னு நினைக்க வைக்கிறார். 🙂

Iramaki on Smoking Habit

Filed under: சொந்தக் கதை — prakash @ 7:39 முப

இராம.கியின் பதிவுகளில், சொந்த அனுபவங்கள், சொந்த விவரங்கள் குறித்த இடுகைகள் அபூர்வமாகவே தென்படும். தன் புகைப்பழக்கம் குறித்த அவரது பதிவு இங்கே..

புகை பிடிக்கத் துவங்கும் பலரது ஆரம்ப அனுபவங்கள், பெரும்பாலும்,  ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது 🙂

Older Posts »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.