கத்துகடல் சூழ் நாகை காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போது அரிசி வரும் – குத்தி
உலைய இட ஊரடங்கும்.; ஓர் அகப்பை அன்னம்
இலையில் இட வெள்ளி யெழும்.
சிலேடைக்கவி காளமேகத்தின் இந்தப் பாடலுக்கு அர்த்தம் தெரியுமா? இராம.கி சொல்றார்…
கத்துகடல் சூழ் நாகை காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போது அரிசி வரும் – குத்தி
உலைய இட ஊரடங்கும்.; ஓர் அகப்பை அன்னம்
இலையில் இட வெள்ளி யெழும்.
சிலேடைக்கவி காளமேகத்தின் இந்தப் பாடலுக்கு அர்த்தம் தெரியுமா? இராம.கி சொல்றார்…
தமிழில் புழங்கும் பழமொழிகள் பற்றிய விரிவான பதிவு
நெல்லை மாவட்டத்தில் பழமொழியைச் சொலவடை என்றும் , பழைய ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவகதை என்றும் சேலத்தில் சொலவந்தரம் என்றும் கோவையில் ஒப்புத் தட்டம் என்றும் அழைக்கிறார்கள்.ஆங்கிலத்தில் பழமொழியானது Proverb என்றும் old sayings என்றும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலான தமிழ்ப் பழமொழிகள் எதுகை மோனையிலும் , முரண்தொடையிலும் எழுதப்பட்டுள்ளன.இதுவரை தமிழில் வெளிவந்த பழமொழித் தொகுப்பு நூல்களை கீழே கொடுத்துள்ளேன் , இவற்றுள் கி.வா.ஜெகந்நாதன் அவர்கள்எழுதிய புத்தகத்தில் சுமார் 20000 பழமொழிகளுக்கு மேல் தொகுக்கப்பட்டுள்ளன.
பழமொழிகளின் பட்டியலையும், பழமொழிகள் தொடர்பான நூல்களின் வரிசையையும் அளிக்கிறார். உருப்படியான பதிவு.
பாரதியாரின் கண்ணன் பாட்டு அதில் ஒன்று, பாரதியார் ஏன் இப்படிக் கொஞ்சமும் அர்த்தமில்லாமல் எழுதியிருக்கிறார், நாம் எழுதியிருந்தால் இதைக் கொஞ்சம் நன்றாய் எழுதியிருப்போமே என்று அந்தப் பன்னிரண்டு வயதில் நினைத்ததுண்டு, (யாரும் டென்சனாகிவிடாதீர்கள், சின்னப்பையன்தானே மன்னித்துவிட்டுவிடுங்கள் 🙂 ).
electricity ன்னா மின்சாரம். அப்ப, electric lamp ன்னா, மின்சாரவிளக்கு என்று சொல்வதில்லை.. மின்விளக்கு என்று தானே சொல்கிறோம்? அதே போல, கணிணி, கணிப்பொறி என்று இப்போது அழைப்பதை, முன்னொட்டு, பின்னொட்டு ( prefix , suffix) சேர்க்கும் போது, கணி என்று சுருக்குவதுதான் முறை என்பதை, விளக்குகிறார் இராம.கி..
computer simulation -கணிப்பொறிப் பாவனை
computer utility -கணிப்பொறிப் பயனமைப்பு
computer aided design -கணிப்பொறிவய வடிவமைப்பு
computerisation -கணிப்பொறிமயமாக்கல்
computer phobia -கணிப்பொறி அச்சம்இந்தக் கூட்டுச் சொற்களில், “ப்பொறி” என்ற எழுத்துக்களை எடுத்துவிட்டுப் படியுங்கள்; உடனே, இந்தக் கூட்டுச் சொற்கள் சொல்வதற்கும் எளிதாக இருக்கும்; பொருளும் மாறு படாது. (நான் மேலே உள்ள சொற் தொகுதிகளில் கணிப்பொறி என்ற சொல்லிற்கு அப்புறம் அடுத்து வரும் சொற்களைப் பற்றி இங்கு முன்னிகை – comment – அளிக்கவில்லை.)