கில்லி – Gilli

ஏப்ரல் 10, 2006

Digital Cinema – UthayaKumar

Filed under: நுட்பியல், வெள்ளித்திரை — prakash @ 2:13 பிப

டிஜிடல் திரைப்படத்தின் நுட்பங்களை எளிமையாக விளக்குகிறார் உதயகுமார் இங்கே..

ஏப்ரல் 9, 2006

Web 2.0, A Different Story – Business Pundit

Filed under: ஆங்கிலப் பதிவு, நுட்பியல் — prakash @ 6:30 பிப

Web 2.0 ஒழிக…

அய்யோ, நான் சொல்லலை… Robet May சொல்றார்..

"….I get a little aggravated when somebody launches yet another social networking site or whatever other Web2.0 idea they have that has no way of making money yet gets $5million in VC funding primarily from the hope that Google will buy them someday.

Many of these sites don't create any value the way most new companies do. They siphon off attention and make people less focused. Many of these sites aren't making people more productive, they are making people waste more time. Their value is that they entertain. How do I know that? Because I was caught up in it. I was on these sites multiple times a day for months, afraid I would miss something cool. Only when I realized how shallow my thinking had become and how much I had lost my ability to focus deeply did I begin to cut back and ignore them. I don't need to be in touch with everyone, all the time. I don't need to see what they are posting and saying and tagging and podcasting. I need to better myself, not entertain myself….."

முழுதும் வாசிக்க

இவர் சொல்றது நிஜமா? யாராச்சும் தெரிஞ்சவங்க சொல்லுங்களேம்ப்பா..

ஏப்ரல் 7, 2006

Code like a girl – Kathy Sierra

Obfuscated Code எழுதுவது அறிவுஜீவிக்கு அழகு என்று நினைக்கறீங்களா? படியுங்க… (வழி: அனுஷாராஜி)

ஏப்ரல் 6, 2006

வருகிறது நானோடெக்னாலஜி – அப்புடீன்னா?

Filed under: அறிவியல், நுட்பியல் — Venkat @ 2:44 பிப

இன்று அதிகாலை பிரகாஷிடமிருந்து இந்தச் சுட்டி வந்தது.

வெளிகண்ட நாதர் நானோடெக்னாலஜியால் என்னென்னவெல்லாம் நடக்கும் என்று பிரமிப்பூட்டுகிறார்.  ரத்தக்குழாயடைப்பைச் சுரண்டுவது,  கச்சாவிலிருந்து பெட்ரோலைப் பிரிப்பது முதல் சிம்ரனையும் ஜோதிகாவையும் இன்னும் பளிச் சென்று திரையில் பார்ப்பதுவரை இதில் சாத்தியம் என்று சோதிடம் சொல்கிறார்.

ஒரு சின்ன வேண்டுகோள்;  இப்படி வெற்றாக ஆரூடங்களை அடுக்கிக்கொண்டு போவதும் கூகிளில் இருந்து படம் சுட்டுப்போடுவதும் அறிவியலும் நுட்பமும் இல்லை.   இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகியிருக்கிறது (அல்லது அதற்கான துவக்கங்கள் எப்படி நடக்கின்றன) என்பதைப் பற்றியும் கொஞ்சம் எழுதவேண்டும்.  போகிற போக்கில் name-dropping சொல்லி படிப்பவர்களை மிரட்டுவது அந்தக் காலத்து ஆசாமிகள் பாணி் – sooo outdated.  அப்படி மிரண்டவர்கள் ஒருக்காலத்திலும் நானோடெக்கை புரிந்துகொள்ள முயற்சிக்க மாட்டார்கள்.     இந்தமாதிரி ஜக்கம்மா குறிசொல்பவற்களையும் பசித்த புலிகள் தின்னத் தொடங்கியிருக்கின்றன.   இன்றைக்குத் தேவை புரியவைப்பது அல்லது ஆர்வமூட்டுவது.  ரத்தக்குழாயில் அடைப்பு நீங்கப்போகிறது என்று சொல்லும்பொழுது கொஞ்சம் கொழுப்பு, அதைக் கரைக்கும் விதங்கள் போன்ற சமாச்சாரங்களையும் விரிவாகச் சொன்னால்தான் புண்ணியமாக இருக்கும்.

பாலக்கரை பாலகனின் ஆர்வத்திற்குப் பாராட்டு, ஆனால் அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டியது முக்கியம்.

அதெல்லாம் கிடக்கட்டும்; அறிவியல் சமாச்சாரத்தை எழுதும்பொழுது கிளுகிளுப்பு வேண்டுமென்றால் அதற்கு இப்பொழுது சிம்ரனையும் ஜோதிகாவையும் நம்பிப் பிரயோசனமில்லை;   இது அஸின் காலம்.

Forrester’s research on podcast ( Via NS Ramnath)

podcast ஐ எத்தனை பேர், எந்த விதமாக பயன்படுத்துகிறார்கள் என்று Forrester நிறுவனம் ஆராய்ச்சி மேற்கொண்டது. அந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட Charlene இன் வலைப்பதிவில் இருந்து  சில துளிகள்..

Our survey showed that only 1% of online households in North America regularly download and listen to podcasts. And when you include all of the people who are just interested or have used podcasts, they strongly favor listening to existing content like Internet radio or broadcast radio, not necessarily new content. (And for newspapers thinking about podcasting, putting print stories into audio format just ranked ahead of original content from bloggers) I think this has something to do with 1) original content just isn’t as well known; and 2) existing content benefits from users that simply want to time shift it. (Shameless plug: there’s lots of other demographic and measurement data about podcasting in the brief).

முழுதும் வாசிக்க… ( ராம்நாத் வழியாக )

How I work : Bill Gates ( Via Raji)

Filed under: ஆங்கிலப் பதிவு, நுட்பியல் — prakash @ 7:56 முப

"I get about 100 e-mails a day. We apply filtering to keep it to that level?e-mail comes straight to me from anyone I've ever corresponded with, anyone from Microsoft, Intel, HP, and all the other partner companies, and anyone I know. And I always see a write-up from my assistant of any other e-mail, from companies that aren't on my permission list or individuals I don't know. That way I know what people are praising us for, what they are complaining about, and what they are asking"

பில் கேட்ஸ் ஆப்பீஸ்ல உக்காந்துகிட்டு என்னதான் செய்யறார் என்று எப்போதாவது தோன்றியிருக்கிறதா? அவரே சொல்கிறார்.. ( ராஜி வழியாக )

mymsnsearch, The worst Search Engine Ever

அய்யோ… நான் ஒண்ணும் சொல்லலை… இவர் சொல்றாருங்க.. என்னன்னு கொஞ்சம் விசாரிங்க..

ஏப்ரல் 3, 2006

Does Standards really matter? – Narain

Filed under: ஆங்கிலப் பதிவு, நுட்பியல் — Snapjudge @ 2:50 பிப

மைக்ரோசாஃப்ட், கூகிள் & ஆப்பிள் – யாருடைய தளங்கள் W3C-இன் அங்கீகரிக்கப்பட்ட பொதுமுறைகளை அடியொற்றி நடக்கிறது? ஆச்சரியமான முடிவுகள்…

ஏப்ரல் 2, 2006

Firefox Growing Up – Reuben Abraham

Filed under: நகைச்சுவை, நுட்பியல் — Snapjudge @ 5:31 பிப

நெருப்புநரியின் அடுத்த வெளியீடு தயாராகிறது போல 😉

மார்ச் 25, 2006

Non Conventional Energy – Thamiznithi Bharathi

Filed under: நுட்பியல் — prakash @ 4:25 பிப

நீர், காற்று போன்றவற்றில் இருந்து மின்சாரம் எடுக்கும் முறை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அதே வழியில், ராஜபாண்டியன் என்பவர், புதுமையான முறையில், முறைசாரா எரிசக்தி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அது குறித்த தமிழ் நிதி பாரதியின் பதிவு இங்கே…

மார்ச் 23, 2006

MIES VAN DER ROHE – Pot”tea” kadai

Filed under: நுட்பியல் — prakash @ 3:41 முப

ஆர்க்கிடெக்சர்லே இத்தனை விஷயம் இருக்கா? அடேங்கப்பா…

மீஸ் வாண்டர் றொ (1886 – 1969) செருமனி, ஆச்சேனில் (Aachen) பிறந்தவர். கட்டுமானப் பணியில் தேர்ந்தவராக இருந்த அவரது தந்தையோடு பத்தொன்பது வயது வரையிலும், பின்னர் பெர்லினில் இருந்த கைதேர்ந்த கட்டிடக்கலை நிபுணராக இருந்த பீட்டர் பெஹ்ரன்ஸ் (Peter Beherens) அவர்களின் கட்டிடக்கலைக் கூடத்தில் நான்காண்டுகள்(1908 – 1912) பணி புரிந்தார்.அங்கே அவர் ப்ருஷ்ய (prussia) கட்டிடக்கலையின்பாலும்,புதிய மேம்பட்ட கட்டிடவடிவமைப்பின்பாலும் கொண்ட ஆர்வத்தினால் பெர்லினிலேயே தனக்கென்று ஒரு சிறிய கட்டிடக்கலைக் கூடத்தை அதே ஆண்டில்(1912) தொடங்கினார். பின்னர் ப்ருஷ்ய(prussian) கட்டிடக்கலை நிவுனரான கார்ல் ஃப்ரீட்ரிச் ஷின்க்கெல் அவர்களின் வடிவமைப்பின் மீது ஊக்கம் கொண்டு, அதை தன்னுடைய இரும்பு மற்றும் கண்ணாடிகளால் கூடிய வடிவமைப்பிற்கு பயன்படுத்திக் கொண்டார். பெரும்பாலான இவரது கட்டிட வடிவமைப்புகளில் இரும்பும், கண்ணாடியும் பிரதானமாக இருந்தது.

மேலும்…

மார்ச் 22, 2006

Thinking in Web 2.0: Sixteen Ways

ஸ்பெஷல் சாதா | ஸ்பெஷல் மசாலா

 

மார்ச் 5, 2006

Tamil Typing, Web2.0, RSS, Unicode Tools by Umar

Filed under: நுட்பியல், பொது — Snapjudge @ 1:11 முப

தமிழில் எழுத, தட்டச்ச, ஆர்.எஸ்.எஸ் செய்தியோடைகளைத் தயாரிக்க, எண்களாக புரியாத பாஷையில் இருப்பதாக தெரிந்த font (எழுத்துரு)வாக மாற்ற, மேலும் பல பயன்படும் software.

மார்ச் 2, 2006

Vulnerability in Gmail – Anthony

மெய்யாலுமே பதினாலு வயசுப் பயலா அல்லது என்னை மாதிரி டகால்டி வயசு காட்டுறானா என்று தெரியாட்டியும், சொல்ற மேட்டர் சீரியஸான நுட்பக் குறைபாடு. (வழி: ஸ்டீவ்)

பிப்ரவரி 23, 2006

Google Page Creator

Filed under: நுட்பியல் — prakash @ 9:07 பிப

கூகுளாண்டவர், சொந்தமாக இணையப்பக்கம் உருவாக்கிக் கொள்ள வசதி ஏற்படுத்தித் தந்திருக்கிறார். மதியின் அறிமுகம் இங்கே. அந்தகாலத்தில் geocities, lycos, போன்றவர்கள் செய்த விஷயம் தானே இதுவும்? இல்லை என்றால் வேற ஏதாச்சும் திரிசமன் இருக்கிறதா? தெரியவில்லை..

வெங்கட்டுக்கு இதிலே ஏதோ அபிப்ராயபேதம் போலிருக்கிறது.

Older Posts »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.