கில்லி – Gilli

ஏப்ரல் 11, 2006

Theru Vaasagam Review – Nagore Roomi

Filed under: இலக்கியம், நூல் விமர்சனம் — Snapjudge @ 10:09 பிப

திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி 'மனப்பத்தாயம்', 'பஞ்சாரம்' 'தெப்பக்கட்டை' கவிதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து ஆனந்த விகடனில் தொடராக வந்த 'தெருவாசகம்' வெளியிட்டுள்ளார். புத்தக விமர்சனம்.

மார்ச் 30, 2006

ஜெயமோகனின் கொற்றவை

ஜெயமோகனின்ப்  புதியநாவலான கொற்றவை குறித்து எழுதுகிறார் பச்சோந்தி

"ஒரு சம்பவம், அல்லது தருணத்திற்கும் முழு ரூபம் கிடையாது. – இதுவே என் புரிதல் ஜெயமோகன் எழுதியுள்ள கொற்றவை மீது.ஒவ்வொரு வர்ணனையும், ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு விவரமும், முதற்பார்வைக்கு எவ்வளவு அனாவசியமாகத் தோன்றினாலும், வித்தியாசமுள்ள பல விபரங்கள் ஒரு மையத்தை நோக்கிபோவதை ஆழ்ந்து படித்தால் தான் உணர முடியும்". 

மார்ச் 17, 2006

Magic Seeds by V.S.Naipaul – DJ

Filed under: இலக்கியம், நூல் விமர்சனம் — Snapjudge @ 3:23 முப

Half a Life -இன் அடுத்த பகுதி வெளிவந்துவிட்டது போலிருக்கிறதே!

மார்ச் 12, 2006

Puthumaipithan – Thilagabam

Filed under: இலக்கியம், நூல் விமர்சனம் — Snapjudge @ 7:44 பிப

ஆற்றங்கரையோர பிள்ளையார் (இக்கதையை வாசிக்கையில் எனக்கு வால்காவிலிருந்து கங்கை வரை நினைவுக்கு வந்து போகின்றது என்கிறார்), கபாடபுரம் அகல்யை, சாபவிமோசனம், பொன்னகரம (சாராய ரஸ்தாவிற்கு போகின்ற தெரு சேற்றுக் குழம்புகள் முனிசிபல் கங்கை தண்ணீர்க் குழாய்கள்)், என ஒரு சில கதைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டு தனது கருத்துக்களை முன் வைக்கிறார் ‘சூரியாள்’ திலகபாமா.

மார்ச் 7, 2006

Singapore Tamil Book Readers’ Club

சிங்கப்பூரில் ‘வாசகர் வட்டம்’ என்ற அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது. இரண்டுமாதத்திற்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு நூல் மீது சிங்கப்பூர் நூலகம் எதிலேனும் விவாதம் நடக்கும்.

வாசகர் வட்டத்தின் நவம்பர் மாதக் கூட்டத்தில் ஜெயமோகனின் ‘காடு‘ நாவலை வாசித்து அனுபவமாக்கி பகிர்ந்து கொண்டனர்.

பிப்ரவரி மாதக்கூட்டத்தில் இலங்கைப் பெண் எழுத்தாளினியும், கவிதாயினியுமான தாட்சாயிணியின் ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்‘ விவாதிக்க எடுத்துக் கொள்ளப் பட்டது.

Destination Unknown (Agatha Christie) – Abhimanyu

Filed under: நூல் விமர்சனம், பொது — Snapjudge @ 7:44 பிப

சாகத் துடிக்கும் ஹிலாரி, ஓலிவ் பெட்டெர்செனாக மாறி, தன் வாழ்க்கையின் இறுதி நாள் எப்பொழுது வரும் என்று தெரியாது தொடங்கும் பயணமே ‘UNKNOWN DESTINATION’ நாவல். புலனாய்வு கதைகளுக்கு பெயர்போன அகாதா கிறிஸ்டியின் படைப்பு.

சுருக் அறிமுகம்.

மார்ச் 2, 2006

Zero Degree by Chaaru Nivethitha – Muthu

சிதறல் ஸ்டைலில் வாசக அனுபவங்களைப் பகிர்ந்து, கதை சொல்லி, சாருவின் ஸீரோ டிகிரியையும் விமர்சிக்கிறார் ‘தமிழினி’ முத்து.

பிப்ரவரி 22, 2006

Book Review – Joe

Filed under: நூல் விமர்சனம் — prakash @ 5:53 பிப

ஜோ டி க்ரூஸின் ‘ஆழி சூழ் உலகு’ வாசித்த அனுபவத்தை ஜோ பகிர்ந்து கொள்கிறார். இங்கே..

பிப்ரவரி 21, 2006

Udaiyaar – Subha

குமுதத்தில் தொடராக வெளிவந்த பாலகுமாரனின் ‘உடையார்’

பொன்னியின் செல்வ‘னின் தொடர்ச்சியாக இதை பார்க்க தோன்றும்.

காவிரி பாயும், அழகிய விளைநிலங்கள் கொண்ட சமதரையான சோழ ராஜ்யத்தில் கற்கள் எப்படி கொண்டு வருவது? ஒரு இடத்தில் கூடியிருக்கும் அவ்வளவு பெரிய ஆட்படைக்கு உணவளிப்பது எப்படி? அதனால் சமூகத்தில் எவ்விதமான மாறுதல்கள் ஏற்படும்?

பிப்ரவரி 19, 2006

Neela Kadal by Nagarathinam Krishna

நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல்’ குறித்த பிரபஞ்சனின் விமர்சனம்.

பிப்ரவரி 15, 2006

Ramaseshan/Alsatian – Tilo

ஆதவனின் ‘ என் பெயர் ராமசேஷன்’ புதினத்தை வாசித்த அனுபவம் பற்றி திலோ

எல்லாம் சரி… இந்த இடுகையின் தலைப்புதான் விளங்கலை 🙂

பிப்ரவரி 13, 2006

Ponniyin Selvan – JK

சி.வி. கார்த்திக் நாராயணன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ குறித்த நூல் விமர்சனம்.

பிப்ரவரி 7, 2006

Da Vinci Code – Azad

Filed under: நூல் விமர்சனம் — prakash @ 5:55 பிப

சக்கை போடு போட்ட டாவின்சி கோட் பற்றிய வித்தியாசமான ஜாலியான பதிவு. ஆசாத் எழுதுகிறார்…

“…இதெல்லாம் நமக்குங்க. ஸ்கூல் படிக்ற பொண்ணு ஒண்ணுகிட்ட கதையப்பத்திக்கேட்டேன். படிச்சிட்டியாம்மான்னேன். படிச்சாச்சு, சூப்பர் கதை. என்னா மாதிரி ஒவ்வொரு க்ளூவா எடுத்து ப்ரேக் பண்ணிக்கிட்டே போறாங்கன்னு ஆஹா ஓஹோன்னுச்சு.

சரி, நமக்கு புடிக்கல, தலைமுறை இடைவெளிபோலன்னு வுட்டுட்டேன்…

மேலே படிக்க

பிப்ரவரி 5, 2006

Arivoli Iyakkam – Udukkai

Filed under: சமூகம், நூல் விமர்சனம், பொது — Snapjudge @ 7:32 முப

“இருளும் ஒளியும்” – அறிவொளி இயக்க அனுபவங்கள் என்னும் ச.தமிழ்செல்வனின் புத்தகம் குறித்த வாசக அனுபவங்கள்.

என்ன பெரிய வேலை, போயி படிக்க தெரியாதவங்களுக்கு கத்துக் குடுக்கணும அவ்வளவுதான அப்டின்னு ஈசியா சொல்லிரலாம் (சொல்றதுக்கு காசா பணமா). சரி அத ஈசின்னே எடுத்துக்கிட்டாலும், இங்க பிரச்சனை என்னன்னா படிக்கத் தெரியாதவங்கள படிக்க கூட்டிட்டு வர்றது. நாலு கழுத வயசாயிருச்சு (இவங்க குறி வச்சது 15-35 வயசை) எனக்கு, இனிமே படிச்சு என்ன கிழிக்க போறேன்னு இழுத்து போர்த்திட்டு தூங்குறவன நைட்டு படிக்கிறதுக்கு வான்னு எப்டி கூப்பிடறது.

இந்த இயக்கத்த பத்தி மொத்தம் மூணு புத்தகமும் (இந்த புத்தகத்தையும் சேத்து) சில கட்டுரையும் தான் மிஞ்சும் போல. மீதி இருக்கிற ரெண்டு புத்தகத்தில ஒன்னு புதுக்கோட்டை கலெக்டரா இருந்த ஷீலா ராணி சுங்கத்தும், மாநில ஒருங்கிணைப்பாளரா இருந்த ஆத்ரேயாவும் சேந்து எழுதுன Literacy and Empowerment.

பகுதி ஒன்று | இரண்டு

Erich Segal – Raasaa

ஆறு மணி நேரம் பகலில் ட்ரெயின் பயணம் மேற்கொள்வது ஆனந்தமான அவஸ்தை. பராக்கு பார்த்து சிறுகதைக்கு ப்ளாட் தேடலாம். ‘காதல்’ இயக்குநர் போல் திரைக்கதையை சக பயணியிடமிருந்து எடுக்கலாம். அல்லது கொங்கு ராசா போல் வாசக அனுபவமே பெறலாம்.

Older Posts »

Create a free website or blog at WordPress.com.