கில்லி – Gilli

ஏப்ரல் 13, 2006

Parisu – PK Sivakumar

Filed under: படைப்பு, பொது — Snapjudge @ 4:20 பிப

அப்படியெல்லாம் சுலபமாக அவனை மறந்துவிடுகிற நண்பன் இல்லை துரை என்பதும் அவனுக்குத் தெரியும். போக முடியாததற்கு அவன் தனக்குத் தானே சொல்லிக் கொள்கிற சமாதானம் இது என்று அவனுக்குத் தோன்றியது.

பழைய ஞாபகங்கள் கொணர்பவை சந்தோஷமா துக்கமா என்றெல்லாம் இப்போது ஒன்றும் இனம்பிரித்து அறிய முடிவதில்லை.

மார்ச் 2006 மாத வடக்குவாசல் இதழில் – (இந்த இதழ் டெல்லியிலிருந்து யதார்த்தா பென்னேஸ்வரன் அவர்களால் நடத்தப்படுகிறது) – சிவக்குமாருடைய "பரிசு (அல்லது) திரும்பி வந்த தினங்கள்" என்ற கதையை பகிர்ந்து கொள்கிறார்.

கவனம் சிதறாமல் பயணிக்கிறது; ஆங்காங்கே எண்பதுகளின் க்ளிஷேக்கள் எட்டிப் பார்த்தாலும் இதமான நடையில் விறுவிறுவென நகரும் படைப்பு.

ஏப்ரல் 11, 2006

Valainthu Pona Veeravaal – Sezhiyan

Filed under: படைப்பு, பொது — Snapjudge @ 6:00 பிப

ஜேர்மன் "பூவரசு" இதழ் நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற செழியனின் 'வளைந்து போன வீரவாள்'.

ஏப்ரல் 9, 2006

A poem – Sannasi

Filed under: இலக்கியம், படைப்பு — prakash @ 12:11 பிப

மூடி திறந்ததும் சுழன்று வருகின்றன
ஈற்றைக் குத்த நாவைச் சுழற்றும்
பற்குத்துக் குச்சிகள்
கனவுலக பீரங்கிகள் போல் இடுக்குகளில்
நுழைந்து நுழைந்து வெடிக்கின்றன குத்திச் சேகரிக்கின்றன
எதிரில் தட்டில் துடைத்தெறிந்து மூடிய தாளுக்கடியில்
இரண்டு கடின ரொட்டிகளுக்கிடையில் நறுக்கிய
தக்காளிகளுக்கிடையில்
கடிபட்ட நகரத்தின் மிச்சங்கள்

முழுக்கவிதையும் இங்கே…

இந்தக் கவிதையில் இருக்கும் படிமம் தென்படுகிறதா?

ஏப்ரல் 7, 2006

Mahabharath – Selvan

Filed under: இலக்கியம், படைப்பு — Snapjudge @ 6:38 பிப

தீக்குளிக்கத் தொண்டனை அனுப்பும் தலைவன் போல் கண்ணன் செயல்பட்டானா?

ஏப்ரல் 5, 2006

Veiled tears – Chameleon

Filed under: படைப்பு, பொது — Snapjudge @ 8:38 பிப

ஒரு தேவதையின் நகல் பனியில் உருகுவதைப் போன்ற
உணவிற்குப் பின் விரும்பிக் கேட்கப்படும் இசை போன்ற
விரும்பிய செயல்களைச் சாதனையாக எண்ணுவது போன்ற
யாரோ ஒருவருக்குத் தெரிந்த ஒரு உண்மையைப் போன்ற

நான் மறைக்கும் கண்ணீர்த் துளிகள்

ஏப்ரல் 2, 2006

36-28-36 : Jollupaandi

ஜொள்ளுப்பேடையில் விவகாரமாக ஆகக் கூடிய விஷயத்தை ரொம்பவே சைவமாக கையாள்கிறார்.

மார்ச் 30, 2006

Universal Truth

Filed under: ஆங்கிலப் பதிவு, படைப்பு — prakash @ 5:38 பிப

எல்லா பிசிக்ஸ் வாத்தியார்களும்
'மரை' கழண்ட மாதிரி தான் பேசறாங்க
முந்தின ராத்திரி பருப்பு ஊற வெச்சு
பக்குவமா அரைச்சு பசி நேரத்துக்கு சுட்டுக்கொடுத்தாலும்,
அம்மா, அலமேலு மாமி அன்னிக்கு குடுத்து
விட்ட பருப்புக் கொழுக்கட்டை மாதிரி
இது இல்லியே ஏன்?
ரெண்டரை பாட்டில் 'லாகர்' க்கு மேலே
அரை அவுன்ஸ் அதிகமாப் போனாலும்
அன்னிக்கி ராத்திரி 'ஆ·ப்பாயில்' நிச்சயம்.
எல்லா 'அம்மிணீஸ்க்கும்' வயசு பத்தி
கேள்வி கேட்டா சர்வ நிச்சயமாக் கோவம் வரும்

குட்டிப் பொண்ணே, இந்தா பிடி சாபம்..

Four Girls – Premalatha

Filed under: படைப்பு, பொது — Snapjudge @ 4:42 பிப

தமிங்கிலர்கள், தமிழில் வலைப்பதிவதில்லையே என்னும் ஐகாரஸின் அங்கலாய்ப்பை நிவர்த்திக்க பிரேமலதா தமிழில் மீனாக்ஷி, ப்ரீத்தி, ரீட்டா, அனுஷ்கா என்று நான்கு தலைமுறைப் பெண்களை பிறக்க வைத்திருக்கிறார்.

ஆங்கிலத்திலும் கிடைக்கிறது.

Tamil Kavithai on NRT – JS Njaanasekar

Filed under: படைப்பு, பொது — Snapjudge @ 2:28 பிப

பத்தும் செய்ய
பணம் இருந்தும்
பட்டினி கிடந்து
பழகியதுண்டா?
….
பாலைவன மழையாய்ப்
பைசாக்கள்
மாயமானாலும்

பறந்து வருவதற்குள்
பிடித்த சொந்தங்கள்
சாம்பலாகிப் போனாலும்

வைரமுத்துவின் 'காதலித்துப் பார்' பாணியில் ஒரு 'தூரத்துத் தமிழன்'. தமிழ் நாட்டில் இல்லாத எல்லாருக்காகவும் என்கிறார். (பரிந்துரை: ஸ்ரீகாந்த் மீனாக்ஷி)

மார்ச் 28, 2006

Snegithi – Anupama

Filed under: படைப்பு — prakash @ 3:46 பிப

ஆடிப் பாடி, விளையாடி,
கை கோர்த்து நடந்து, முத்தமிட்டு,
முத்தாய் சிரித்து, சிறு பூவாய் மலர்ந்து,
பூரித்து இருக்கயில் ஒரு நாள்..

மனம் குமுற, கண்ணீர் பெறுக,
முதல் முறையாய் தனிமை அதனை
உணர்ந்து நின்றேன், என்
உயிர் சினேகிதி அவளது மரணத்தில்..

இதை கவிதைன்னு சொல்ல முடியுமான்னு தெரியலை… இருந்தாலும் நல்லா இருக்கு…

மார்ச் 12, 2006

College Thiruvilaiyaadal – Ravichandran

Filed under: நகைச்சுவை, படைப்பு — Snapjudge @ 7:53 பிப

சிவன்: Stella Marris, Queen Marris, Ethiraj college பெண்களுக்குக்கூட இயற்கை அழகு கிடையாதா?

நக்கீரன்: கிடையாது.

சிவன்: சினிமாவில் நடிக்கும் பெண்களுக்குக்கூட?

நக்கீரன்: சினிமாவில் நடிக்கும் பெண்கள் என்ன?.. நான் அன்றாடம் இரவில் வணங்கும் எனது கனவுக்கன்னி அந்த ஸ்ரீதேவிக்குக்கூட இயற்கை அழகு கிடையாது.

கல்லூரி மாணவர்களின் விளையாட்டுக்களை நாடகமாக்கி சிரிக்க வைக்கிறார்.

Bible Stories in Tamil – Cyril Alex

பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற நூற்றுக்கணக்கான கதைகளிலிருந்து சில இங்கே பதிக்கப்படுகின்றன. பைபிளில் இடம் பெற்றிருக்கும் வரிசைப் படி அமைக்கப்பட்டுள்ளன. (பைபிள் கதைகள் குறித்த முந்தைய கில்லி.)

மார்ச் 7, 2006

A short Story – Ramanitharan Kandiah

Filed under: இலக்கியம், படைப்பு, OIG — prakash @ 4:26 பிப

ஒரு படைப்பியல்வாலியின் இழக்கிய அனுபவங்கள்.

நான் கதை எழுதும் முயற்சியை கைவிட்டதற்கு இந்தக் கதையும் ஒரு காரணம். வாசிக்கும் போது மூச்சு முட்டி ‘பக்கெட்டை உதைப்பதற்கான’ வாய்ப்புகள் அதிகம். நிதானமாக வாசிக்கவும். 

[ஏப்ரல் 2000 இலே எழுதப்பெற்று, ஜனவரி 2005 இலே மீள் பிரசுரம் ஆனது.]

மார்ச் 3, 2006

Kalyanamalai – Nithiya

Filed under: படைப்பு, பெண்ணியம், Tamil Podcast — Snapjudge @ 3:40 பிப

வைரமுத்துவின் கவிதைகளை சுகாசினியும் பொன்மணியும் தங்கள் குரலில் ஒலிக்கவிட்டிருப்பார்கள். தன் கவிதையை உணர்வுடன் பாடியும் இருக்கிறார் நித்யா.

பிப்ரவரி 22, 2006

Amma-ni

Filed under: ஆங்கிலப் பதிவு, படைப்பு — prakash @ 5:56 பிப

ஹ்ம்ம்ம்ம்

Older Posts »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.