கில்லி – Gilli

ஏப்ரல் 13, 2006

feminism – Selvanayaki

Filed under: பெண்ணியம் — prakash @ 4:11 முப

என்ன தெளிவான, தீர்க்கமான சிந்தனை..

சமூகத்தாலும், குடும்பத்தாலும். படிக்கலாம், பட்டமும் வாங்கலாம்; காரியதரிசியாகலாம், கலைத்துறையிலும் சாதிக்கலாம்;எழுதலாம், இலக்கியமும் படைக்கலாம்; ஆனால் இத்தனையிலும் அவளின் மனைவி, மருமகள் பதவிகளுக்கென்று உள்ள வேலைகளிலிருந்து,அடக்கமாக நடந்துகொள்வது வரை நிறைவேற்றியேயாக வேண்டும். அதைப் பொறுத்துத்தான் அவளின் குடும்ப வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது. பெருகிவரும் விவாகரத்துகளின் பின்னணியில் ஒரு நுட்பமான காரணமாக இன்றைய பெண்களின் மேற்சொன்ன "அடக்கம்" மீறுதலும் உண்டு.

முழுதும் வாசிக்க…

ஏப்ரல் 12, 2006

Why Men Have it So Easy – Thusha Tarnalingam

அமெரிக்காவில் வாழும் தெற்காசியரின் கலாச்சாரக் குழப்பத்திற்கு பெற்றோர்கள் காரணமா என்று அலசுகிறது 'டொரண்டோ தமிழ்'.

ஏப்ரல் 7, 2006

Mrs Sujatha Rengarajan Interview

Filed under: பெண்ணியம், பேட்டி — Snapjudge @ 10:20 பிப

அப்போ மேற்கத்திய இசை உலகில் ‘பீட்டில்ஸ்’ வந்த பீரியட். இளைஞர்கள், கிதார் கிதார்னு பைத்தியமா இருந்த நேரம்! இவர் ரொம்ப அருமையா கிதார் வாசிப்பார்!… கிதார் மட்டுமல்ல… எல்லா இசைக்கருவிகளையுமே நல்லா வாசிப்பார். இவர் யார்கிட்டேயும் இதுக்காக கத்துகிட்ட மாதிரி தெரியலே… அவரேதான் முயற்சி பண்ணி வாசிச்சார் போல!…

சில நேரங்கள்ல நினைச்சுப் பார்க்கிறப்போ கஷ்டமா இருக்கும். ஆனா வெளில காட்டிக்க மாட்டேன். அவர்கிட்டே எனக்கு ஏனோ அப்படியரு பயம் இருந்தது. அவர் பெரிய ஜீனியஸ், நான் சாதாரண உணர்வுகளுள்ள மனுஷி என்பதாலேயா? ரொம்பவும் நெருங்கி அல்லது இறங்கி வந்து என் பயத்தை அவர் போக்க முயற்சிக்காததாலா?

அவர் எழுதினதிலேயேகூட கற்றதும் பெற்றதும், கேள்வி பதில்கள், மூளை பத்தி எழுதியது மாதிரி அறிவியல் கட்டுரைகள்தான் பிடிக்கும்.

எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி சுஜாதா ரங்கராஜனின் பேட்டி. குமுதம் சிநேகிதியைக் கடன் வாங்கி படித்தவர்: சுரேஷ் கண்ணன்

Indian AND feminist = Unpatriotic – Deepali

Filed under: ஆங்கிலப் பதிவு, பெண்ணியம் — Snapjudge @ 6:13 பிப

The Indian media has been very active in portraying feminists as illogical, unreasonable, and sometimes even ungrateful women. Notice how Bollywood loves to parody those cotton-saree clad, no nonsense tight bun and pursed lipped women as your average feminist?

Ultimately, what happens is, the average Indian man/woman, comes to look down upon feminism as it comes across as unworthy of anyone's time. A useless waste of time by those educated women who should be married and looking after their husband's children.

முழுவதும் படிக்க. (பரிந்துரை: பிரேமலதா)

Bloggers in Action

Filed under: சமூகம், பெண்ணியம் — prakash @ 3:55 பிப

இந்தக் கொடுமை நினைவில் இருக்கிறதா? வெறுமனே வலைப்பதிவில் புலம்புவதோடு நிறுத்திவிடாமல், செயலில் இறங்கியிருக்கிறார்கள் பிரேமலதாவும் இன்னும் சில வலைப்பதிவர்களும்…. அது குறித்த பதிவுகள் இங்கே…

பிரேமலதா | தருமி | டுபுக்கு

இன்னும் வேற யார் யார்?

ஏப்ரல் 2, 2006

36-28-36 : Jollupaandi

ஜொள்ளுப்பேடையில் விவகாரமாக ஆகக் கூடிய விஷயத்தை ரொம்பவே சைவமாக கையாள்கிறார்.

மார்ச் 26, 2006

Public Register of Menstrual Cycles – KV Raja

Filed under: சமூகம், பெண்ணியம் — prakash @ 6:43 பிப

என்ன தேசமோ… இது என்ன தேசமோ?

 

மார்ச் 7, 2006

Women’s Day

மார்ச் எட்டாம் தேதி மகளிர் தினம். விடுதலைப்புலிகளின் மகளிர் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது, என்ன காரணம் என்று தெரியுமா? கே டி குமரனின் விரிவான பதிவு.

Europe Visit Experiences – Thilagabama

14 அக்டோபர் தொடக்கம் 20 வரை லண்டனில் நான் இருந்த குடும்பங்கள் அவர்களது வாழ்க்கை முறை , பெண்கள் தொடர்பாக நிறைய எனக்குள்ளாக பேசிக் கொண்டிருந்தேன். இரண்டு நாள் பெண்கள் சந்திப்பு பல விசயங்களையும், சந்திக்க   சிந்திக்க  வைத்திருந்தது. சமையல் குழந்தை வளர்ப்பு, தொலைக்காட்சி, வேலைக்கு போனாலும் சுயங்களை சிந்திக்க விடாத  சூழலை இங்கேயும் காண முடிகின்றது.

தரையெங்கும் உதிர்ந்து கிடக்கும் மஞ்சள் நிற இலைகள் அதை நசுக்கி மேலே ஏறி வேகமெடுத்து பின்னர் அதுவும் பறக்க விட்டும் போகும் வாகனங்கள்.

கவனித்ததை நுண்ணியமாக தமிழகச் சூழ்நிலையுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்.

மார்ச் 3, 2006

Kalyanamalai – Nithiya

Filed under: படைப்பு, பெண்ணியம், Tamil Podcast — Snapjudge @ 3:40 பிப

வைரமுத்துவின் கவிதைகளை சுகாசினியும் பொன்மணியும் தங்கள் குரலில் ஒலிக்கவிட்டிருப்பார்கள். தன் கவிதையை உணர்வுடன் பாடியும் இருக்கிறார் நித்யா.

பிப்ரவரி 28, 2006

25 most powerful women in Indian business

Filed under: இதழியல், இந்தியா, பெண்ணியம் — Snapjudge @ 6:09 பிப

இந்தியாவின் ‘பிஸினெஸ் டுடே’ இருபத்தைந்து முக்கிய பெண்களை அடையாளம் காட்டி, தொழிற்துறையில் பெருந்தாக்கத்தை உண்டாக்குபவர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. ராஷ்மியின் விரிவான அலசல்.

பிப்ரவரி 26, 2006

Female Sexuality – Megha Krishnan

மாதவிடாய் என்கிற இயற்கையான விஷயத்துக்கும், மத நம்பிக்கைகளுக்கும் தொடர்பு இருக்கிறதா? இவற்றை சடங்கு சம்பிரதாயங்களில் அடக்குபவர்களை எல்லாம் போட்டு கிழிக்கிறார் மேகா

“….This happens in a lot of Hindu households, where girls are ‘secluded’ during menstruation for the laughable reason that they are ‘unclean’. Because of this so called uncleanliness, girls are prohibited from entering temples, lighting the ritual diyas, taking part in festivites and in some extreme cases they are not allowed to talk because their voices in that ‘contaminated’ state brings so called bad luck in the household’s proceedings…”

மேலே வாசிக்க..

Create a free website or blog at WordPress.com.