கில்லி – Gilli

மார்ச் 17, 2006

The first thing the baby did wrong – Sannaasi

Filed under: இலக்கியம், மொழிபெயர்ப்பு — Snapjudge @ 5:15 பிப

ஒரு விதிமுறை உருவாக்கினால் அதைப் பின்பற்றவேண்டுமென்றும், நிலையாக இருக்கவேண்டுமென்றும், இல்லையென்றால் அவர்கள் அதை மேற்போக்காக எடுத்துக்கொள்வார்களென்று நினைத்தேன். குழந்தைக்கு நீண்ட வாழ்வு காத்திருக்கிறது, பல்வேறு விதிமுறைகளுள்ள உலகத்தில் வாழ்ந்தாகவேண்டும், விதிமுறைகளின்படி வாழக் கற்றுக்கொள்ளாவிட்டால் அனைவராலும் வெறுத்தொதுக்கப்பட்டு சாரமில்லாமல் தனிமையாக்கப்படுவதே நிகழுமென்று சுட்டிக்காட்டினேன்.

நரகத்திலிருந்து வெளிவரும் வௌவால் போல அறையிலிருந்து வெளிவரும் குழந்தை,

அனுபவத்திற்கேற்ற தாக்கங்களையும் சிந்தையையும் ஏற்படுத்துகிறது.

மார்ச் 12, 2006

Bible Stories in Tamil – Cyril Alex

பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற நூற்றுக்கணக்கான கதைகளிலிருந்து சில இங்கே பதிக்கப்படுகின்றன. பைபிளில் இடம் பெற்றிருக்கும் வரிசைப் படி அமைக்கப்பட்டுள்ளன. (பைபிள் கதைகள் குறித்த முந்தைய கில்லி.)

மார்ச் 10, 2006

Leadership Images – Meenaks

இளங்கலை பயிலும் மாணாக்கரிடையே ‘தலைமை’ (leadership) குறித்த பிம்பங்களைப் பற்றிய ஆய்வு ஒன்று வார்ட்டன் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது. குறிப்பிட்ட மேலாண்மைப் பாடத்தை விருப்பத் தேர்வு செய்து பயிலும் மாணாக்கர், ‘தலைமை’ என்ற கருத்துடன் அவர்கள் தொடர்பு படுத்துகின்ற ஏதேனும் படம் அல்லது பிம்பத்தைத் தேர்வு செய்து, அதைத் தேர்ந்தெடுத்தது ஏன் என்றும் நூறு சொற்களுக்கு மிகாமல் கட்டுரை எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

தமிழ்நாட்டில் கேட்டால் ‘தல போல வருமா’ என்பது போன்ற கிண்டல் இல்லாமல் சேரியமாய் ஒரு கட்டுரை.

ஜனவரி 13, 2006

nAladiyar in english – Chenthil

இந்தப் பாடலுக்கு அர்த்தம் தெரியுமா?

நாப்பாடல் சொல்லி நயமுணர்வார் போல்செறிக்கும்
தீப்புலவர் சேரார் செறிவுடையார் – தீப்புலவன்
கோட்டியுள் குன்றக் குடிப்பழிக்கும் அல்லர்க்கால் தோட்புடைக் கொள்ளா எழும்

இந்த நாலடியார் பாடலை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் எப்படி இருக்கும்? செந்தில் பெயர்க்கிறார் இங்கே..

Create a free website or blog at WordPress.com.