கில்லி – Gilli

மார்ச் 5, 2006

Mumbai Slums – Sudhakar

Filed under: அரசியல், சமூகம், பொருளாதாரம் — Snapjudge @ 1:02 முப

அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக மத்திய-அமெரிக்க நாடுகளில் இருந்தும், மெக்ஸிகோவில் இருந்தும் நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் ஊடுருவுகிறார்கள். சல்லிசான ரேட்டில் வேலைக்கு ஆள் அமர்த்த இந்த illegal immigration உதவுவது போல், மும்ம்பையில் ‘சேரி’களும் பாதுகாக்கப்படுகின்றன?

இவற்றின் தோற்றமும், வளர்ச்சியும், இருப்பும் அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களின் அடியூடு. தாராவி போன்ற இடங்களில் பெரும்பணம் புரளும் மனிதர்கள் சேரிகளில் வாழ்ந்து ஆதிக்கம் செய்து வருகின்றனர். சேரிகளுக்குச் சொந்தக்காரர்களான அரசியல்வாதிகள் அவர்களை வளர விடமாட்டார்கள். அரசியல் பொருளாதார ஆதாயம். இவ்வளவு மலிவு விலையில் வோட்டுகளும், வேலையாட்களும் எப்படிக் கிடைப்பார்கள்?

1 பின்னூட்டம் »

 1. கில்லி இப்போதுதான் பார்க்கிறேன். மிக நல்ல சேவை. தொடருங்கள்.
  எனது பதிவை சுட்டியதற்கு முதற்கண் நன்றி.
  சரியாகச் சொன்னீர்கள். மும்பையில் சேரிகள் ” பாதுகாக்கப்” படுகின்றன. ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஓரிடத்தில் பலம்பெற்றிருக்க அவர்களின் வாக்கு வங்கிகள் சேர்ந்திருக்க சேரிகள் அவசியம். மற்றும் பல சட்டத்திற்குப் புறம்பான தொழில்கள் , தொழில்வரியை ஏய்த்து அதிகம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்குகள், அனுமதியின்றி நடத்தப்படும் தொழிற்பட்டறைகள் ( பகுதி வேலைகள் இங்கு செய்யப்பட்டு, மீதமுள்ள பணிகள் தொழிற்சாலையில் நடத்தப்படும்) இச்சேரிகளின் மூலங்கள். உதாரணமாக, ஏ.ஸி வாங்கவேண்டுமென வைத்துக்கொள்ளுங்கள். கடையில் 1 டன் ஏஸி 11000 ரூபாய் என்றால் , நன்கு விவரம் தெரிந்து ஒரு சேரியில் சென்று 7000 ரூபாய்க்கு அதனை வாங்கலாம். இங்குதான் அவை அஸெம்பிள் செய்யப்பட்டு பல புகழ்பெற்ற brandகளாகச் செல்கின்றன. compressor, controller, box என எல்லாமே வரிஏய்ப்புச் செய்யப்பட்டு அபரிமிதமாகத் தயாரிக்கப்பட்டவை. திருட்டுத்தனமாக சந்தையில் இவை brandகளோடு நுழையும். இவ்வாறு நடத்துபவர்கள் அரசியல்வாதிகள்/அரசியல் பின்னணிகொண்ட வணிகர்கள். சேரிகளை ஒழிப்பதற்கு இவர்களுக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது?
  சேரிகள் குறித்து ஆய்வே நடத்தலாம்.
  அன்புடன்
  க.சுதாகர்.

  பின்னூட்டம் by K.Sudhakar — மார்ச் 5, 2006 @ 5:51 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: